Savings Scheme : சிறுசேமிப்பு திட்டங்கள் பத்தி தெரியணுமா? ஏப்ரல் 1 முதல் எந்த சேமிப்பிற்கு எவ்வளவு வட்டி தெரியுமா?
Savings Scheme Interest rates: 2024-25 நிதியாண்டு தொடங்கும் ஏப்ரல் 1 முதல் பல்வேறு சேமிப்பு திட்டங்களுக்கான, வட்டி விகிதங்களில் குறிப்பிடத்தக்க அளவில் மாற்றங்கள் அமலுக்கு வருகின்றன.
Savings Scheme Interest rates: ஏப்ரல் 1 முதல் பல்வேறு சேமிப்பு திட்டங்களுக்கான, வட்டி விகிதங்களில் அமலுக்கு வரும் மாற்றங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
சேமிப்பு திட்டங்களும் & வட்டி விகிதங்களும்:
நிலையான வருமானத்திற்கான வழிகளில் சிறுசேமிப்பு திட்டங்கள் மக்களிடையே மிகவும் பிரபலமானதாக உள்ளன. இவை வழங்கும் நிலையான மற்றும் உறுதியான வருமானத்திற்காக முதலீட்டாளர்கள் இந்த திட்டங்களை தேர்வு செய்கிறார்கள். ஏப்ரல் 1, 2024 முதல் தொடங்கும் ஜூன் காலாண்டில் (ஏப்ரல்-ஜூன்) சிறு சேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள் மாறாமல் இருக்கும் என்பதை கவனத்தில் கொள்ளவேண்டியது அவசியம். அதன்படி, 2024-25 நிதியாண்டின் முதல் காலாண்டிற்கான பல்வேறு சிறுசேமிப்பு திட்டங்களின் வட்டி விகிதங்கள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
சிறுசேமிப்பு திட்டங்களுக்கான வட்டி விகிதங்கள்:
சேமிப்பு திட்டங்கள் | வட்டி (%) | கூட்டு வட்டி |
போஸ்ட் ஆஃபிஸ் சேமிப்பு கணக்கு | 4 | ஆண்டிற்கு ஒரு முறை |
ஒரு வருட டைம் டெபாசிட் | 6.9 | காலாண்டிற்கு ஒரு முறை |
2 வருட டைம் டெபாசிட் | 7 | காலாண்டிற்கு ஒரு முறை |
3-வருட டைம் டெபாசிட் | 7.1 | காலாண்டிற்கு ஒரு முறை |
5-வருட டைம் டெபாசிட் | 7.5 | காலாண்டிற்கு ஒரு முறை |
5-வருட ரெகர்ரிங் டெபாசிட் | 6.7 | காலாண்டிற்கு ஒரு முறை |
மூத்த குடிமக்கள் சேமிப்பு திட்டம் | 8.2 | காலாண்டிற்கு ஒருமுறை கூட்டு வட்டி கணக்கில் செலுத்தப்படும் |
மாத வருமான கணக்கு | 7.4 | மாதா மாதம் செலுத்தப்படும் |
தேசிய சேமிப்புச் சான்றிதழ் (NSC) | 7.7 | ஆண்டிற்கு ஒரு முறை |
பொது வருங்கால வைப்பு நிதி கணக்கு (PPF) | 7.1 | ஆண்டிற்கு ஒரு முறை |
கிசாஸ் விகாஸ் பத்திரம் | 7.5 | ஆண்டிற்கு ஒரு முறை |
சுகன்யா சம்ரித்தி கணக்குத் திட்டம் | 8.2 | ஆண்டிற்கு ஒரு முறை |
மேற்குறிப்பிடப்பட்ட சேமிப்பு திட்டங்களில் அதிகபட்சமாக சுகன்யா சம்ரித்தி கணக்குத் திட்டத்திற்கு 8.2 சதவிகிதமும், தேசிய சேமிப்புச் சான்றிதழ் திட்டத்திற்கு 7.7 சதவிகிதமும், கிசான் விகாஸ் பத்ரா திட்டத்திற்கு 7.5 சதவிகிதமும் வட்டியாக வழங்கப்படுகிறது. பெரும்பான்மையான திட்டங்களுக்கு கூட்டு வட்டி வழங்கப்படுவது, நமக்கான வருவாய் அதிகரிப்பதை உறுதி செய்கிறது.