Income Tax returns: வருமான வரியை ரிடர்ன்ஸை ஆன்லைனில் செய்வது எப்படி? வழிமுறைகள் இதோ...
வரும் ஜூலை 31 ஆன்று கடந்த நிதியாண்டிற்கான வருமான வரி செலுத்தும் நாள் நெருங்கி வரும் நிலையில், வருமான வரி டிடர்ன்சை ஆன்லைனில் செலுத்துவதற்குப் புதிய நபர்களுக்கான வழிமுறைகளை இங்கே படிப்படியாக வழங்கியுள்ளோம்.
வரி செலுத்துபவர்கள் எங்கிருந்தும் எளிதாக வருமான வரி செலுத்தும் விதமாக அதனை ஆன்லைனில் மாற்றியிருக்கிறது மத்திய அரசு. வரும் ஜூலை 31 ஆன்று கடந்த நிதியாண்டிற்கான வருமான வரி செலுத்தும் நாள் நெருங்கி வரும் நிலையில், இறுதி நாளுக்கு முன்பாகவே வருமான வரியைச் செலுத்துவது சிறப்பானதாக அமையும். வருமான வரியை ஆன்லைனில் செலுத்துவதற்குப் புதிய நபர்களுக்கான வழிமுறைகளை இங்கே படிப்படியாக வழங்கியுள்ளோம்.
ITR 1, ITR 4 என்றழைக்கப்படும் வருமான வரி பிரிவுகளைத் தனிநபர்கள் ஆன்லைன் மூலமாக செலுத்த முடியும். ITR 1 என்பது சுமார் 50 லட்சம் ரூபாய் வரை வருமானம் பெறுபவர்கள், ஒற்றை வீட்டைச் சொத்தாக வைத்திருப்பவர்கள், பிற வருமானங்களைப் பெறுபவர்கள் முதலானோருக்குப் பொருந்தும். ITR 4 என்பது சட்டப்பிரிவுகள் 44ஏடி, 44ஏடிஏ, 44ஏஈ ஆகியவற்றின் கீழ் அளிக்கப்பட்டுள்ள தொழில்களின் மூலமாக லாபம் பெறுவோருக்குப் பொருந்தும்.
உங்கள் வருமான வரியை ஆன்லைனில் செலுத்துவது எப்படி?
1. வருமான வரி செலுத்துவதற்கான ஈ-ஃபைலிங் போர்டலுக்குச் செல்லவும். (https://www.incometax.gov.in/iec/foportal/Login). இதில் உங்கள் யூசர் ஐடி, பாஸ்வேர்ட், கேப்சா கோட் முதலானவற்றை செலுத்தி, `லாகின்’ பட்டனை அழுத்தவும்.
2. e-File மெனுவைக் க்ளிக் செய்து, அதில் Income Tax Return பகுதிக்குச் செல்லவும்.
3. இப்போது உங்களுக்கு வருமான வரியின் பக்கம் காட்டப்பட்டு, அதில் உங்கல் பான் எண் தானாகவே சேர்க்கப்பட்டிருக்கும்.
4. இந்தப் பக்கத்தில் குறிப்பிட்ட ஆண்டு, வருமான வரி படிவத்தின் எண், வரி செலுத்தும் வகை ஆகியவற்றைத் தேர்வு செய்து, அவற்றைப் பரிசோதித்து, சரிபார்த்த பிறகு, `Continue' என்பதை அழுத்தவும்.
5. வெவ்வேறு விதிமுறைகளோடு, விண்ணப்பங்களைப் போல காலியிடங்களோடு படிவம் காட்டப்படும். அதில் தேவையான, அனைத்து கட்டாய தகவல்களையும் சேர்க்க வேண்டும். மேலும், இதனைச் செய்யும் போது, Save Draft ஆப்ஷனை அவ்வபோது அழுத்துவது உங்கள் தகவல்கள் எதிர்பாராத விதமாக மறைவதைத் தடுக்கும்.
6. அடுத்ததாக Taxes Paid and Verification பகுதியில், வரி செலுத்துபவர்கள் சரிபார்ப்பதற்காக மூன்று ஆப்ஷன்களில் ஒன்றைத் தேர்வு செய்யலாம். உடனே e-verify செய்வது, பதிவு செய்யப்பட்டு 120 நாள்களுக்குள் e-verify செய்வது அல்லது பதிவு செய்யப்பட்டு 120 நாள்களுக்குள் ITR-V ஆவணத்தைக் கையொப்பமிட்டு அஞ்சல் மூலம் அனுப்புவது.
தற்போது e-verify ஆப்ஷனைத் தேர்வு செய்யும் போது இந்த நான்கு வழிமுறைகளின் மூலம் அதனை மேற்கொள்ளலாம்.
1. வங்கி ஏடிஎம் மூலமாக உருவாக்கப்படும் EVC அல்லது My Account பகுதியில் Generate EVC ஆப்ஷன் மூலமாகவும் மேற்கொள்ளலாம்.
2. ஆதார் OTP எண்
3. முந்தைய வங்கிக் கணக்கு
4. முந்தைய டீமாட் கணக்கு
வருமான வரி செலுத்தியதை மீண்டும் பரிசோதிக்காமல் ஈ-ஃபைலிங் மொத்தமாக முடிவு பெறாது என்பது குறிப்பிடத்தக்கது.