search
×

Check PF Balance: ஒரு மிஸ்டு கால் போதும்... பிஎஃப் பேலன்ஸ் நொடியில் தெரிஞ்சுக்கலாம்!

PF Balance: கொரோனா காலக்கட்டத்தில் பலர் வேலையின்றி இருந்த நிலையில் இந்த பிஎஃப் கணக்கில் இருந்த பணம் தான் அனைவருக்கும் கைக்கொடுத்தது. மத்திய அரசும் சுலபமாக பணம் எடுப்பதற்கான வழிமுறையை ஏற்படுத்தியது.

FOLLOW US: 
Share:

How to Check PF Balance: வருங்கால வைப்பு நிதி என அழைப்படும் பிஎஃப்பில் எவ்வளவு பேலன்ஸ் மீதமிருக்கிறது என்பதை ஒரு மிஸ்டு காலம் மூலம் தெரிந்துக்கொள்ளலாம் என இபிஎஃப் நிறுவனம் சமீபத்தில் டிவிட்டர் வாயிலாக தெரிவித்துள்ளது. 

 மாத சம்பளம் வாங்கும் அனைத்து ஊழியர்களுக்கும் ஒரு சமூக பாதுகாப்புத் திட்டமாக பிஎஃப் என அழைக்கப்படும் வருங்கால வைப்பு நிதி திட்டம் உள்ளது. தற்போது பென்சன் நடைமுறைகள் எதுவும் இல்லாதச் சூழலில் பிஎஃப் கணக்கில் உள்ள தொகை தான் பணியை விட்டு வெளியேறினாலும் நமக்கு பாதுகாப்பு அளிக்கிறது. அதிலும் கொரோனா காலக்கட்டத்தில் பலர் வேலையின்றி இருந்த நிலையில் இந்த பிஎஃப் கணக்கில் இருந்த பணம் தான் அனைவருக்கும் கைக்கொடுத்தது. அதற்கேற்றால் மத்திய அரசும் சுலபமாக பிஎஃப் கணக்கில் இருந்துப் பணத்தை எடுத்துக்கொள்வதற்கு வசதிகளை ஏற்படுத்திக்கொடுத்தது. இதன் மூலம் பலர் பயன்பெற்றனர். மேலும் யாரிடமும் கடன் வாங்காமல் தம்முடைய பிஎஃப் கணக்கில் உள்ள பணத்தில் ஒரு பகுதியை மக்கள் எடுக்கத்தொடங்கிவிட்டனர்.

ஆனால் இதற்கெல்லாம் முன்னதாக ஆன்லைன் மூலம் பணம் எடுக்க வேண்டும் என்றால் பிஎஃப்பின் 12 இலக்க எண் அவசியமான ஒன்று. இதன்  மூலம் நம்முடைய பிஃஎப் கணக்கில் உள்ள பாஸ் புத்தகத்தைப்பார்வையிட,  EPFO  கணக்கில் உள்ள மொத்தத் தொகையினைச் சரிபார்க்க, முன்பணம் எடுக்க முடியும். இவ்வாறு பலர் வீட்டில் இருந்தே தங்களுடைய பிஎஃப் குறித்த விபரங்களை அறிந்து வரக்கூடிய நிலையில், இதனை மேலும் எளிமையாக்கும் விதமாக பிஎஃப் நிறுவனம் சமீபத்தில் டிவிட்டர் வாயிலாக அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது. அதில் உங்கள் பிஎஃப் பேலன்ஸ் தொகையை நொடிகளில் மில்டு கால்டு மூலம் அறிந்துக்கொள்ள முடியும் என தெரிவித்துள்ளது.

 பிஎஃப் பேலன்ஸ் தொகையை அறிந்துக்கொள்ளும் வழிமுறைகள்:

பிஎஃப் நிறுவனம் அறிவித்துள்ள படி பேலன்ஸ் தொகையை அறிந்துக்கொள்ள வேண்டும் என்றால், நாம் 011- 22901406 என்ற எண்ணிற்கு  பிஎஃப் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ள எண்ணிலிருந்து  மிஸ்டு கால் கொடுக்க வேண்டும். இதனையடுத்து சில நொடிகளிலே நம்முடைய பிஎஃப் பேலன்ஸ் தொகையை தெரிந்துக்கொள்ள முடியும்.

இதேப்போன்று எஸ்.எம்.எஸ் மூலமாகவும் பி.எஃப்பில் உள்ள பணத்தின் விபரங்களை அறிந்துக்கொள்ள முடியும். அதற்கு பிஎஃப் பயனாளர்கள் முதலில், உங்களுடைய எண் பிஎஃப் கணக்குடன் இணைக்கப்பட்டுள்ளதா? என்பதை அறிந்துக்கொள்ள வேண்டும்.

பின்னர் உங்களது மொபைலிலிருந்து EPFOHO UAN LAN என டைப் செய்து 7738299899 என்ற எண்ணிற்கு எஸ்எம்எஸ் அனுப்ப வேண்டும். இதனையடுத்து எஸ்எம்எஸ் வாயிலாகவே உங்களது பிஎஃப் விபரங்களை தெரிந்துக்கொள்ளலாம்.

இதோடு ஏற்கனவே நடைமுறையில் உள்ள https://passbook.epfindia.gov.in/MemberPassBook/Login என்ற இணையதளப்பகத்தின் வாயிலாகவும் பிஎஃப் தொகைக்குறித்த விபரங்களைத் தெரிந்துக்கொள்ளலாம். இதற்கு உங்களது UAN  நம்பர் மற்றும் பாஸ்வேர்டை உள்ளிட வேண்டும். பின்னர் அதில் கேட்க்கப்பட்டிருக்கும் கேப்ட்சா குறியீடை உள்ளிட வேண்டும். இதனையடுத்து பிஎஃப் பேலன்ஸ் மற்றும் இதுவரை முன்பணம் எடுத்துள்ள அனைத்து விபரங்களையும் தெரிந்துக்கொள்ளலாம்.

மக்களுக்கு எளிமையான முறையில் பிஎஃப் தொகையைத் தெரிந்துக்கொள்வதற்கான வசதிகளை தற்போது பிஎஃப் நிறுவனம் நடைமுறைக்குக்கொண்டிருந்தாலும், முறையாக இயங்கவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்துள்ளது. மேலும் டிவிட்டர் வாயிலாக தெரிவித்துள்ள எண்ணிற்கு தொடர்புக் கொண்டாலும் நம்பர் எப்போது பிஸியாக இருப்பதாகத் தெரிவிக்கப்படுகிறது. இந்நிலையில் தான் இதுப்போன்ற பிரச்சனை விரைவில் சரிசெய்யப்படும் என பிஎஃப் நிறுவனம் தெரிவித்துள்ளது.

Published at : 01 Oct 2021 11:14 AM (IST) Tags: epfo pf balance missed call registered mobile number

தொடர்புடைய செய்திகள்

Home Loan Balance Transfer: வீட்டுக் கடனை ஒரு வங்கியிலிருந்து மற்றொரு வங்கிக்கு மாற்றுவது எப்படி? எப்போது மாற்றலாம்?

Home Loan Balance Transfer: வீட்டுக் கடனை ஒரு வங்கியிலிருந்து மற்றொரு வங்கிக்கு மாற்றுவது எப்படி? எப்போது மாற்றலாம்?

Home Loan: வீட்டுக் கடனை சீக்கிரம் அடைக்கணுமா? அப்ப இந்த 5 வழிகளை ஃபாலோ பண்ணுங்களேன்!

Home Loan: வீட்டுக் கடனை சீக்கிரம் அடைக்கணுமா? அப்ப இந்த 5 வழிகளை ஃபாலோ பண்ணுங்களேன்!

CIBIL Score: லோன் வாங்க திட்டமா? வலுவான CIBIL ஸ்கோர் ஏன் அவசியம்? உங்களுக்கு கிடைக்கும் 5 நன்மைகள் என்ன?

CIBIL Score: லோன் வாங்க திட்டமா? வலுவான CIBIL ஸ்கோர் ஏன் அவசியம்? உங்களுக்கு கிடைக்கும் 5 நன்மைகள் என்ன?

Ajith Kumar: அஜித் செய்த சம்பவத்தை என்னால் மறக்கவே முடியல.. கிரிக்கெட் வீரர் நடராஜன் நெகிழ்ச்சி!

Ajith Kumar: அஜித் செய்த சம்பவத்தை என்னால் மறக்கவே முடியல.. கிரிக்கெட் வீரர் நடராஜன் நெகிழ்ச்சி!

EPFO: பி.எஃப்., கணக்கில் இருந்து எப்போது, எப்படி பென்ஷன் பணத்தை பெற முடியும்? - முழு விவரங்கள் இதோ..!

EPFO: பி.எஃப்., கணக்கில் இருந்து எப்போது, எப்படி பென்ஷன் பணத்தை பெற முடியும்? - முழு விவரங்கள் இதோ..!

டாப் நியூஸ்

Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!

Vidamuyarchi : அஜித் ரசிகர்களே காத்திருந்தது போதும்! விடாமுயற்சி படத்தின் ஃபர்ஸ்ட் லுக் இதோ!

கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!

கொடைக்கானலில் மான் வேட்டை! 6 பேரை பிடித்து உள்ளே தள்ளிய போலீஸ்!

CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!

CHIEF OF THE ARMY: மனோஜ் பாண்டே ஓய்வு! ராணுவ தலைமை தளபதியாக பொறுப்பேற்ற உபேந்திர திவேதி!

Virat, Rohit, Jadeja: இரண்டு நாளில் மூன்று ஜாம்பவான்கள் ஓய்வு - கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்!

Virat, Rohit, Jadeja: இரண்டு நாளில் மூன்று ஜாம்பவான்கள் ஓய்வு - கிரிக்கெட் ரசிகர்கள் சோகம்!