New GST Slab: மலிவு விலை மற்றும் மக்களின் வாங்கும் திறனை மேம்படுத்தும் விதமாக மத்திய அரசு புதிய ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை அறிவித்துள்ளது.
புதிய ஜிஎஸ்டி வரி விதிப்பு முறை அறிவிப்பு:
தீபாவளி பரிசாக பொதுமக்களின் வரிச்சுமையை குறைக்கும் விதமாக, திருத்தப்பட்ட ஜிஎஸ்டி வரிகள் அறிவிக்கப்படும் என சுதந்திர தின உரையின் போது பிரதமர் மோடி அறிவித்தார். அதனை தொடர்ந்து, மலிவு விலை மூலம் மக்களின் வாங்கும் திறனை மேம்படுத்தும் விதமாக மத்திய அரசு புதிய ஜிஎஸ்டி வரி விதிப்பு முறையை அறிவித்துள்ளது. இதன் மூலம், பொதுமக்களின் தினசரி வாழ்வில் அதிகம் பயன்படுத்தப்படும் பல அத்தியாவசிய பொருட்களின் விலை கணிசமாக குறைய உள்ளது. இந்த புதிய வரி விகிதங்களானது வரும் செப்டம்பர் 22ம் தேதி முதல் அமலுக்கு வரவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அத்தியாவசிய பொருட்கள்:
| பொருட்கள் |
பழைய வரி அளவு |
புதிய வரி அளவு |
| தேங்காய் எண்ணெய், ஷாம்பு, டூத்பேஸ்ட், டாய்லெட் சோப், டூத் ப்ரெஷ், ஷேவிங் க்ரீம் |
18% |
5% |
| வெண்ணெய், நெய், சீஸ் & டெய்ரி பொருட்கள் |
12% |
5% |
| பேக் செய்யப்பட்ட நம்கீன்ஸ், புஜியா மற்றும் மிக்சர் |
12% |
5% |
| பாத்திரங்கள் |
12% |
5% |
| ஃபீடிங் பாட்டில், குழந்தைகளுக்கான நாப்கின்ஸ், க்ளினிகல் டையபர்ஸ் |
12% |
5% |
| தையல் இயந்திரம் மற்றும் உதிரி பாகங்கள் |
12% |
5% |
இன்சூரன்சிற்கு இனி வரி இல்லை
| பொருட்கள் |
பழைய வரி அளவு |
புதிய வரி அளவு |
| தனிமனித மருத்துவ மற்றும் ஆயுள் காப்பீடு |
18% |
இனி வரி இல்லை |
| தெர்மோமீட்டர் |
18% |
5% |
| மெடிகல் க்ரேட் ஆக்சிஜன் |
12% |
5% |
| அனைத்து நோயறிதல் கருவிகள் & வினையாக்கிகள் |
12% |
5% |
| க்ளுகோமீட்டர் & டெஸ்ட் ஸ்ட்ரிப்ஸ் |
12% |
5% |
| கரெக்டிவ் ஸ்பெக்டேகிள்ஸ் |
12% |
5% |
மலிவு விலையில் கல்வி
| பொருட்கள் |
பழைய வரி அளவு |
புதிய வரி அளவு |
| மேப்ஸ், சார்ட்ஸ், உலக வரைபட பந்து |
12% |
இனி வரி இல்லை |
| பென்சில், ஷார்ப்னர்ஸ், க்ரையான்ஸ் & பாஸ்டெல்ஸ் |
12% |
இனி வரி இல்லை |
| பயிற்சி புத்தகங்கள் & நோட் புத்தகங்கள் |
12% |
இனி வரி இல்லை |
| எரேசர் |
5% |
இனி வரி இல்லை |
விவசாயிகளின் சுமைக்கான தீர்வு
| பொருட்கள் |
பழைய வரி அளவு |
புதிய வரி அளவு |
| ட்ராக்டர் டயர்கள் & உதிரிபாகங்கள் |
18% |
5% |
| ட்ராக்டர்ஸ் |
12% |
5% |
| குறிப்பிடத்தக்க உயிரி உரங்கள், மைக்ரோ நியூட்ரிசியன்ஸ் |
12% |
5% |
| ட்ரிப் இரிகேஷன் சிஸ்டம், ஸ்ப்ரிங்ளர்ஸ் |
12% |
5% |
| விவசாயம், மண் தயார்படுத்தலுக்கான இயந்திரங்கள், சாகுபடி, அறுவடை, கதிரடித்தல் |
12% |
5% |
குறையும் கார்களின் விலை
| பொருட்கள் |
பழைய வரி அளவு |
புதிய வரி அளவு |
| பெட்ரோல், பெட்ரோல் ஹைப்ரிட், எல்பிஜி, சிஎன்ஜி கார்கள் (1200சிசி & 4000mm-க்கு மிகாதவை) |
28% |
18% |
| டீசல், டீசல் ஹைப்ரிட் கார்கள் (1500சிசி & 4000mm-க்கு மிகாதவை) |
28% |
18% |
| 3 சக்கர வாகனங்கள் |
28% |
18% |
| மோட்டார் சைக்கிள் (350சிசி & அதற்கும் குறைவானவை) |
28% |
18% |
| சரக்கு போக்குவரத்து வாகனங்கள் |
28% |
18% |
மின்சாதன பொருட்கள்
| பொருட்கள் |
பழைய வரி அளவு |
புதிய வரி அளவு |
| குளிர்சாதன பெட்டி |
28% |
18% |
| தொலைக்காட்சிப் பெட்டி (32இன்ச்சுக்கு மேற்பட்டவை) |
28% |
18% |
| மானிட்டர் & ப்ரொஜெக்டர்ஸ் |
28% |
18% |
| டிஷ் வாஷிங் மெஷின் |
28% |
18% |