81 சதவீதம் பேர் மாதக் கடைசிக்கு முன்னரே சம்பளத்தை செலவழிக்கிறார்கள்.. இந்த ஆய்வு நம்மை பத்திதான்!
ஆய்வறிக்கை என்றாலே போர் என்று பொதுமைப்படுத்தக் கூடாது என்பதற்கு இந்த ஆய்வு ஒரு சான்று.
ஆய்வறிக்கை என்றாலே போர் என்று பொதுமைப்படுத்தக் கூடாது என்பதற்கு இந்த ஆய்வு ஒரு சான்று.
கையிலே வாங்கினேன் பையிலே போடலே
காசுபோன இடம் தெரியலே _ என்
காதலிப் பாப்பா காரணம் கேப்பா
ஏது சொல்வதென்றும் புரியலே
ஏழைக்கும் காலம் சரியில்லே
மாசம் முப்பது நாளும் ஒளைச்சு
வறுமை பிடிச்சு உருவம் இளைச்சு
காசை வாங்கினாக் கடன்கார னெல்லாம்
கணக்கு நோட்டோட நிக்கிறான் _ வந்து
எனக்கு உனக்குன்னு பிய்க்கிறான் (கையிலே…)
இந்தப் பாடல் வரிகளுக்கே உரித்தான ஆய்வு தான்.
ஏர்ன்ட் வேஜ் ஆக்சஸ் திட்டம் ஒரு ஊழியர் தனது சம்பளத்தின் ஒரு பகுதியை, சம்பள நாளைக்கு முன்னதாகவேப் பெறத் தகுதியானவர் என்று கூறுகிறது. Refyne-EY என்ற நிறுவனம் அண்மையில் இது தொடர்பாக ஓர் ஆய்வு நடத்தியுள்ளது. அந்த ஆய்வில் ஈடுபட்டவர்களில் 59% பேர் இப்படி ஒரு வழிவகை இருப்பதை வரவேற்பதாகக் கூறியுள்ளனர். 20 வயது முதல் 60 வயதுடைய 3010 பேரிடம் இதற்கான ஆய்வு நடத்தப்பட்டது. இந்திய சம்பளததாரர்கள் நிதி ஆரோக்கியம், மற்றும் அவர்களின் நிதி மேலாண்மை பண்பாடு குறித்தும் இந்த ஆய்வு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
பண வீக்கம், குறைவான சம்பள உயர்வு, இப்போது ஏற்பட்டுள்ள பெருந்தொற்று ஆகியன சம்பளத்தில் பெரும் தாக்கத்தை ஏற்படுத்தியுள்ளன.
ஆய்வறிக்கையின் சில முக்கிய அம்சங்கள்:
உங்கள் செலவுகளை சந்திக்க மாதச் சம்பளம் போதுமானதாக உள்ளதா?
இதற்கு 9% பேர் எப்போதும் பத்தவில்லை என்றும், 28% எப்போதாவது என்றும், 37% பேர் பெரும்பாலான நேரம் என்றும், 26% மட்டுமே எப்போதுமே சரியாக உள்ளது என்றும் தெரிவித்துள்ளனர்.
என்ன மாதிரியான எதிர்பாராத செலவுகள் வருகின்றன?
இந்தக் கேள்விக்கு மருத்துவச் செலவுதான் மிகப்பெரிய எதிர்பாராத செலவு என்று தெரிவித்துள்ளனர்.
எதிர்பாராத செலவுகளை சமாளிக்க முடிகிறதா?
எதிர்பாராத செலவுகளை சமாளிக்க முடிகிறதா? என்ற கேள்விக்கு 29% பேர் மட்டுமே தங்களால் அதை எதிர்கொள்ள முடிகிறது எனக் கூறியுள்ளனர்.
கொரோனாவால் கையிருப்பாக ரொக்கம் வைத்திருக்கும் தேவை அதிகரித்துள்ளதா?