(Source: ECI/ABP News/ABP Majha)
Meesho | வாரம் ஒருமுறை சம்பளம்.. இங்க இருந்தும் வேலையை தொடரலாம்.. மீஷோ கொடுத்த வேலைவாய்ப்பு அப்டேட்..
மீஷோ நிறுவனத்தில் பணிக்கு சேரும் நபர்களுக்கு கூடுதல் சலுகைகள் வழங்கவும் நடவடிக்கை உள்ளதாக தெரிவிக்கும் இந்நிறுவனம், ஊழியர்கள் விரும்பும் விளையாட்டு மற்றும் கிளப்கள் மூலமாக ஊக்கப்படுத்த விரும்புகிறது
உலகில் எந்த மூலையில் இருந்தாலும் தங்களது நிறுவனத்துடன் இணைந்துப்பணியாற்றலாம் எனவும் அவர்களுக்கு வாராந்திர சம்பளம் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என இந்தியாவின் யூனிகார்ன் நிறுவனமான மீஷோ தெரிவித்துள்ளது.
இன்றைக்கு படித்த இளைஞர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. அதற்கேற்றால் போல் பல நிறுவனங்களும் பல்வேறு துறைகளில் புதிது புதிதாக வேலைவாய்ப்புகளையும் உருவாக்கி வருகிறது. இதோ மட்டுமின்றி ஒவ்வொரு நிறுவனங்களும் போட்டி போட்டுக்கொண்டு தங்களுக்குத் திறமையான ஊழியர்களைத் தேர்வு செய்கின்றனர். இதற்காக திறமையான நபர்கள் எங்கு இருந்தாலும் கூடுதலான சம்பளத்தைக்கொடுத்து அவர்களைப் பணிக்கு அமர்த்துகின்றனர். குறிப்பாக இன்றைய கொரோனா காலக்கட்டத்தில், இணைய வணிகம் மிகப்பெரிய வளர்ச்சியைச் சந்தித்துள்ளது. இதில் குறிப்பிடும் படியான ஒன்று தான், யூனிகார்ன் நிறுவனமான மீஷோ.
சமீபகாலங்களாக மீஷோவைப் பயன்படுத்தி தங்களுக்குத் தேவையான பல்வேறு பொருள்களை ஆன்லைன் வாயிலாக மக்கள் வாங்கி வருகின்றனர். இதனால் மக்களிடம் நல்ல வரவேற்பைப் பெற்றுள்ள இணைய தளமான மீஷோவில் பல பணியாளர்கள் பணிபுரிந்துவரும் நிலையில், தற்போது இந்நிறுவனம் புதிய வொர்க்போர்ஸ் மாடலை அறிவித்துள்ளது. இதன்படி, “ மீஷோ நிறுவனத்தில் பணிக்கு சேரும் ஊழியர்கள் உலகின் எந்த மூலையில் இருந்தாலும் பணியாற்றலாம்“ என இந்நிறுவனத்தின் துணைத்தலைவர் விடித் ஆத்ரே தெரிவித்துள்ளார்.
குறிப்பாக கொரோனா காலக்கட்டத்திற்கு முன்னதாக அலுவலகத்தில் பணியாற்றினால் மட்டுமே அனைத்துப்பணிகளையும் திறம்பட செய்ய முடியும் என்ற நிலை இருந்தது. ஆனால் இந்த நிலை தற்போது முற்றிலும் மாறியுள்ளது. விர்ச்சுவல் ப்ளேஸ் முறையை அனைத்து நிறுவனங்களும் எளிதில் மேற்கொள்ள முடியும் என்ற நிலையில் தான் தற்போது இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளதாகவும் மீஷோ தலைவர் தெரிவித்துள்ளார்.
இதோடு மட்டுமின்றி இதனை அறிவிப்பதற்கு முன்னதாக நிறுவனத்தலைவர்கள். ஊழியர்களின் உளவியல் மற்றும் உடல் ரீதியான பாதுகாப்பை உறுதி செய்யும் வகையில் ஆய்வு நடத்தப்பட்டது என தெரிவித்த அவர், எந்த இடத்திலிருந்து பணி செய்கிறோம் என்பது முக்கியமில்லை என்பதை தெரிந்துக்கொண்டோம் என கூறியுள்ளார். எனவே உலகில் எந்த மூலையில் எங்கிருந்தாலும் எங்கள் நிறுவனம் பயன்படுத்திக்கொள்ளும் என்று மீஷோ நிறுவனத்தின் தலைமை மனித வளத்துறை அதிகாரி ஆஷிஷ் குமார் சிங் தெரிவித்துள்ளார். மேலும் மீஷோ நிறுவனம் பெங்களுரை தலைமை அலுவலமாகக் கொண்டு செயல்படும் நிலையில் விரைவில் சாட்டிலைட் அலுவலகங்களையும் அமைக்கவிருப்பதாக கூறியுள்ளார். மீஷோ நிறுவனத்தில் பணிக்கு சேரும் நபர்களுக்கு கூடுதல் சலுகைகள் வழங்கவும் நடவடிக்கை உள்ளதாக தெரிவிக்கும் இந்நிறுவனம், ஊழியர்கள் விரும்பும் விளையாட்டு மற்றும் கிளப்கள் மூலமாக ஊக்கப்படுத்த விரும்புகிறது எனவும் தெரிவித்துள்ளார்.
புதிய ஊழியர்களைத் தேர்ந்தெடுக்கும் முறை:
உலகில் எந்த மூலையில் இருந்தாலும் பணிக்கு சேரலாம் என்று மீஷோ நிறுவனம் தெரிவித்துள்ள நிலையில், இப்பணியாளர்களுக்கு விர்ச்சுவரல் வீடியோ மற்றும் இணையம் வழியாக பயிற்சி முகாம் மற்றும் அறிமுக நிகழ்வுகள் நடத்தப்பட்டு தேர்வு செய்யப்படுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது. குறிப்பாக பேஸ்புக் நிறுவனத்தால் ஆதரவளிக்கப்படும் மீஷோ நிறுவனம், தற்போது கம்யூனிட்டி வளர்ச்சியைக்கருத்தில் கொண்டு அதற்கு தேவையான நபர்களை தேர்வு செய்துவருகிறது. ஏற்கனவே 30 வார பாலின பாகுபாடு இல்லாமல் பெற்றோர்களுக்கான விடுமுறை பாலிசியை அறிவித்திருந்தது. மேலும் 6 வயதிற்கு உட்பட்ட குழந்தைகள் இருந்தால் தேவையான இடங்களில் அதற்குரிய உதவி மற்றும் ஆதரவு வழங்கப்படும் என அறிவித்துள்ளது.
இதுப்போன்று பல்வேறு சலுகைகளை மீஷோ நிறுவனம் வழங்கும் நிலையில், வணிக நிறுவனமாக இந்தியா மார்ட் நிறுவனமும் தற்போது வாராந்திர சம்பளம் என்ற முறைக்கு மாறியுள்ளது. இதில் ஊழியர்களின் நிதிநிலைமை ஆரோக்கியமாக இருப்பதற்கும், அவர்களுக்கு ஏற்ற பணியிடத்தை அமைத்துக்கொடுத்ததிலும் இந்தியாவின் முதல் நிறுவனமாக இந்தியா மார்ட் நிறுவனம் விளங்கிவருகிறது. எனவே இதேப்போன்று மிஷோவும் தனது நிறுவனத்தில் இத்தகைய மாற்றத்தைக்கொண்டுவரும் என இந்நிறுவனத்தின் தலைவர் மற்றும் தலைமைச்செயல் அதிகாரியான தினேஷ் அகர்வால் கூறியுள்ளார்.