(Source: ECI/ABP News/ABP Majha)
Share Market: ஏற்றத்துடன் தொடங்கிய இந்திய பங்குச்சந்தை; 300 புள்ளிகள் வரை உயர்ந்த சென்செக்ஸ்!
Share Market: இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகி வருகிறது.
Share Market: வாரத்தின் முதல் நாளில் இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடங்கி வர்த்தகமாகிறது.
மும்பை பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 310.91 அல்லது 0.52 % புள்ளிகள் அதிகரித்து 62,873.65 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 80.70அல்லது 0.44% புள்ளிகள் உயர்ந்து 18,617. 45 புள்ளிகளாகவும் வர்த்தகமாகி வருகிறது.
லாபத்துடன் வர்த்தகமாகும் நிறுவனங்கள்:
ஆக்ஸிஸ் வங்கி, அதானி என்டர்பிரைசஸ், க்ரேசியம், சன் பார்மா, மாருது சுசூகி, பிரிட்டானியா, பவர் கிரிட் கார்ப், லார்சன், டாடா மோட்டர்ஸ், பஜார் ஆட்டோ, அதானி போர்டஸ், ரிலையன்ஸ், யு,பி.எல்.,பாரதி ஏர்டெல், பஜார்ஜ் ஃபினான்ஸ், இன்ஃபோசிஸ், டி.சி.எஸ். ஈச்சர் மோட்டர்ஸ், ஐ.டி.சி., பாரத் ஸ்டேஸ் வங்கி உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் லாபத்தில் வர்த்தகமாகி வருகிறது.
நஷ்டத்துடன் வர்த்தகமாகும் நிறுவனங்கள்:
டிவிஸ் லேப்ஸ், பி.பி.சி.எல்., டெக் மஹிந்திரா, ஏசியன் பெயிண்ட்ஸ், நெஸ்லே, கோல் இந்தியா, டைட்டன் கம்பெனி,ஹின்டோலேண்ட், ஹீரோ மோட்டோகார்ப், ஓ.என்.ஜி.சி., ஜெ.எஸ்.டபுள்யு., உள்ளிட்ட நிறுவனங்களின் பங்குகள் நஷ்டத்தில் வர்த்தகமாகிறது.
வாரத்தின் முதல் நாளில் பங்குச்சந்தை ஏற்றத்துடன் தொடங்கியுள்ளது. ஐ.டி. மீடியா, மெட்டல், பார்மா, ஹெல்த்கேர் உள்ளிட்ட துறைகளின் பங்குகள் லாபத்துடன் வர்த்தகமாகின.
மேலும் வாசிக்க..