மேலும் அறிய

புது தில்லியில் நடைபெறும் பாரத் டெக்ஸ் - 2025 ஜவுளி கண்காட்சியில் 2 லட்சம் பேர் பங்கேற்பார்கள் - ஜவுளி சங்கம்

மத்திய அரசின் ஜவுளித்துறை சார்பில் கண்காட்சியை பார்வையிட வர கூடிய வெளிநாட்டவர்களுக்கு, தங்கும் வசதி, போக்குவரத்து வசதி ஆகியவை செய்து தரப்படவுள்ளது.

புது தில்லியில் நடைபெறும் பாரத் டெக்ஸ் - 2025 ஜவுளி கண்காட்சியில் 2 லட்சம் பேர் பங்கேற்க உள்ளனர். இந்தியா மற்றும் வெளிநாடுகளில் உள்ள ஜவுளி தொழில் சார்ந்த நகரங்களில் பல்வேறு விழிப்புணர்வு கூட்டங்கள் நடத்தப்பட்டு வருகிறது என்று கரூரில் நடந்த கூட்டத்தில் ஜவுளி சங்க தலைவர் கோபாலகிருஷ்ணன் தெரிவித்தார்.

புது தில்லியில் நடைபெறும் பாரத் டெக்ஸ் - 2025 ஜவுளி கண்காட்சியில் 2 லட்சம் பேர் பங்கேற்பார்கள் - ஜவுளி சங்கம்

கரூர், ரெட்டிபாளையம் பகுதியில் அமைந்துள்ள தனியார் விடுதியில் மத்திய ஜவுளி அமைச்சகத்தின் சார்பாக புது தில்லியில் அடுத்த ஆண்டு பிப்ரவரி 14 முதல் 17 வரை நடைபெற உள்ள "பாரத் டெக்ஸ் - 2025" ஜவுளி கண்காட்சிக்கான ஏற்றுமதியாளர்கள் விழிப்புணர்வு கூட்டம் நடைபெற்றது. கரூர் ஜவுளி உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவர் கோபாலகிருஷ்ணன் தலைமையில் நடைபெற்ற இந்த கூட்டத்தில் கைத்தறி ஏற்றுமதி முன்னேற்ற சபையின் நிர்வாக இயக்குனர் ஸ்ரீதர், விசைத்தறி ஏற்றுமதி முன்னேற்ற சபையின் துணைத் தலைவர் சக்திவேல் ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டனர்.

புது தில்லியில் நடைபெறும் பாரத் டெக்ஸ் - 2025 ஜவுளி கண்காட்சியில் 2 லட்சம் பேர் பங்கேற்பார்கள் - ஜவுளி சங்கம்

கூட்டத்தில் கரூரை மையமாகக் கொண்டு செயல்பட்டு வரும், வீட்டு உபயோக ஜவுளி உற்பத்தி மற்றும் ஏற்றுமதி நிறுவன உரிமையாளர்களுக்கு ஜவுளி கண்காட்சி குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து, கரூர் ஜவுளி உற்பத்தியாளர் மற்றும் ஏற்றுமதியாளர் சங்கத்தின் தலைவர் கோபாலகிருஷ்ணன் பத்திரிகையாளர்களை சந்தித்தார்.

புது தில்லியில் நடைபெறும் பாரத் டெக்ஸ் - 2025 ஜவுளி கண்காட்சியில் 2 லட்சம் பேர் பங்கேற்பார்கள் - ஜவுளி சங்கம்

ஜவுளிக்கரை சார்ந்த அனைத்து துறைகளும் கலந்து கொண்டு, கடந்த ஆண்டு நடைபெற்ற பாரத் டெக்ஸ் - 2025 கண்காட்சி என்பது பிரதமரின் கனவு ஆகும். தற்போது நடைபெறக் கூடிய இரண்டாவது ஜவுளி கண்காட்சிக்கான விழிப்புணர்வு கூட்டம் நேற்று நடந்தது. உலக அளவில் ஜவுளி துறைக்கான மிகப் பெரிய கண்காட்சியாக இது இருக்கும். கடந்தாண்டு நடைபெற்ற கண்காட்சியில் உள்நாட்டில் சுமார் 1 லட்சம் பேரும், வெளிநாட்டில் இருந்து 3000 பேரும் கலந்து கொண்டனர். இந்த ஆண்டு உள்நாட்டில் இரண்டு லட்சம் பேரும், வெளிநாட்டில் சுமார் 10,000 பேரும் கலந்து கொள்வார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புது தில்லியில் நடைபெறும் பாரத் டெக்ஸ் - 2025 ஜவுளி கண்காட்சியில் 2 லட்சம் பேர் பங்கேற்பார்கள் - ஜவுளி சங்கம்

மத்திய அரசின் ஜவுளித்துறை சார்பில் கண்காட்சியை பார்வையிட வர கூடிய வெளிநாட்டவர்களுக்கு, தங்கும் வசதி, போக்குவரத்து வசதி ஆகியவை செய்து தரப்படவுள்ளது. மேலும், வெளிநாடுகளில் உள்ள இந்திய தூதரகம் மூலம் கண்காட்சி குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக பல்வேறு கூட்டங்கள் நடத்தப்படுகின்றன.

புது தில்லியில் நடைபெறும் பாரத் டெக்ஸ் - 2025 ஜவுளி கண்காட்சியில் 2 லட்சம் பேர் பங்கேற்பார்கள் - ஜவுளி சங்கம்

கடந்த ஆண்டு கரூரில் இருந்து 40 ஜவுளி நிறுவனங்கள் இந்த கண்காட்சியில் பங்கேற்று உள்நாட்டில் பல்வேறு ஆர்டர்களை பெற்றனர். மேலும், வெளிநாட்டைச் சேர்ந்த ஜவுளித்துறை சார்ந்த நபர்களின் அறிமுகமும், தொடர்பும் ஏற்படுத்தி கொள்ளும் வாய்ப்பு அமைந்தது என்றார்.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்

LIVE | Kerala Lottery Result Today (21.11.2024): வெளியானது காருண்யா பிளஸ் கேஎன்-548 கேரள லாட்டரி முடிவுகள்: முதல் பரிசு பெற்ற எண்: PH 592907

Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் -  அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்

ABP Premium

வீடியோ

Girl Harassment : நடந்து சென்ற இளம்பெண் தவறாக கைவைத்த கயவன் மதுரையில் பட்டப்பகலில் அவலம்Thirumavalavan : Bus Accident : போதை தலைக்கேறிய அரசு ஓட்டுநர் காவல் நிலையத்தில் புகுந்த பஸ் சென்னை அடையாறில் பரபரப்புAdani News : அச்சச்சோ..கைதாகும் அதானி?2,100 கோடி லஞ்சம் கொடுத்தாரா?அமெரிக்க நீதிமன்றம் அதிரடி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
"பொய்.. இதுக்கு ஆதாரம் இல்ல" அதிகாரிகளுக்கு லஞ்சமா? அதானி குழுமம் விளக்கம்!
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
Adani Group Allegations: “அதானிக்கும் தமிழக அரசுக்கும் எந்த நேரடி தொடர்பும் இல்லை; ஆனால்...” - செந்தில் பாலாஜி கொடுத்த விளக்கம்
LIVE | Kerala Lottery Result Today (21.11.2024): வெளியானது காருண்யா பிளஸ் கேஎன்-548 கேரள லாட்டரி முடிவுகள்: முதல் பரிசு பெற்ற எண்: PH 592907
LIVE | Kerala Lottery Result Today (21.11.2024): வெளியானது காருண்யா பிளஸ் கேஎன்-548 கேரள லாட்டரி முடிவுகள்: முதல் பரிசு பெற்ற எண்: PH 592907
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் -  அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
Adani TNEB: அதானி உடன் கைகோர்த்த திமுக அரசு? வெடிக்கும் லஞ்ச விவகாரம் - அமைச்சர் செந்தில் பாலாஜி விளக்கம்
Vijay vs Thirumavalavan: விஜய்க்கு வில்லனா? தளபதியா? திருமா முடிவுக்காக தி.மு.க. வெயிட்டிங்!

Jasprit Bumrah:  பாண்டியா மீதான கடுப்பு.. காரணம் இது தானா.. மெளனம் கலைத்த பும்ரா..

"ஒரு ராத்திரி மட்டும்! பிரபலங்கள் விரும்பும் புது வாழ்க்கை’’ ஏ.ஆர்.ரஹ்மான் வழக்கறிஞர் பகீர்
Teacher Death: ''சாப்பாடு கொண்டு வர்றாருன்னு நினைச்சோம்; சாகடிக்க வந்திருக்கார்''- ஆசிரியை ரமணி கொலை- நேரில் பார்த்தவர் பகீர்!

Embed widget