மேலும் அறிய

ITR Filing: அலர்ட்! இன்றே கடைசி நாள்: வருமான வரி தாக்கல் செய்தீங்களா? பண்ணலனா என்னாகும்?

வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் முடிவடைகிறது.

ITR Filing: வருமான வரி தாக்கல் செய்வதற்கான கால அவகாசம் இன்றுடன் அதாவது ஜூலை 31ஆம் தேதியுடன் முடிவடைய  உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.  

வருமான வரி தாக்கல்:

மாத ஊதியம் பெறுவோர், தொழில் முனைவோர், வருடத்துக்கு ஒருமுறை வருமான வரி விவரங்களை தாக்கல் செய்ய வேண்டும் என்பது வழக்கமான விதி. மார்ச் மாதத்துடன் நிறைவடைந்த சென்ற நிதி ஆண்டுக்கான வரி விவரங்களை ஜூலை 31-ம் தேதிக்குள் சமர்ப்பிக்க வேண்டியது அவசியம் ஆகும். 5 லட்சம் ரூபாய் வரையிலான வருமான வரிக்கணக்கிற்கு, கூடுதல் வரி எதுவும் கிடையாது. 5 லட்சம் ரூபாய்க்கு அதிகமான வருமானம் இருந்தால் கூடுதல் வரி விதிக்கப்பட்டு வருகிறது. இதனால், வருமான வரி தாக்கல் செய்து விட்டால், அவர்களுக்கு சலுகைகளும் உண்டு.  2023 ஆம் நிதி ஆண்டுக்கான வருமானம் வரிக்கணக்கை தாக்கல் செய்வதற்கான காலக்கெடு நெருங்கியுள்ளது. அதாவது ஜூலை 31-ஆம் தேதிக்குள் வருமான வரி தாக்கல் செய்ய வேண்டும். கடைசி தேதியை தவறவிட்டால், மறுநாள் ஆகஸ்ட் 1-ம் தேதிக்கு பிறகு சமர்ப்பிக்கப்படும் வருமான வரிக்கணக்குகளுக்கு தாமத கட்டணத்தை செலுத்த வேண்டும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

அபராதம் மற்றும் சிறைவாசம்:

ஜூலை 31ஆம் தேதிக்குள் வருமான வரியை தாக்கல் செய்ய தவறினால் ரூ.5,000 அபராதம் வசூலிக்கப்படும். மேலும், ஒருவரது வருமானம் 5 லட்சத்திற்கும் மிகாமல் இருந்தால் அவர் 1,000 ரூபாய்  மட்டும் அபராதம் செலுத்த வேண்டும். ஒரு நபர் 25 லட்சத்திற்கும் அதிகமான வரியை செலுத்த வேண்டி இருந்தால், அவருக்கு 7 ஆண்டுகள் சிறை தண்டனை வழங்க உத்தரவு பிறப்பிக்கப்படும்.  மேலும் வரியை செலுத்தும் வரை அந்த தொகைக்கு ஒவ்வொரு நாளும் 200 ரூபாய் வட்டியும் வசூலிக்கப்படும்.

எந்த ஐடிஆர் படிவம் தாக்கல் செய்ய வேண்டும்?

  • ஆண்டு சம்பளம், வீடு உள்ளிட்ட சொத்து, பிற முதலீடுகள் மூலம் கிடைக்கும் வட்டி உள்ளிட்ட மொத்த வருமானம் ரூ.50 லட்சம் வரை உள்ளவர்கள் ஐடிஆர் 1 தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • எந்தவொரு வணிகம் அல்லது தொழிலை மேற்கொள்ளாத தனிநபர்கள் ஐடிஆர் 2 தேர்ந்தெடுக்க வேண்டும். 
  • வணிகம் அல்லது தொழில் மூலமாக வருமானம் ஈட்டும் தனிநபர்கள் ஐடிஆர் 3 படிவத்தை தேர்ந்தெடுக்க வேண்டும்.
  • ஐடிஆர்4, சிறிய மற்றும நடுத்தர வரி செலுத்துவோர் அதிக எண்ணிக்கையில் பயன்படுத்தும் எளிய வரி தாக்கல் படிவத்தை தேர்ந்தெடுக்கலாம். இதை தனிநபர்கள், HUF, நிறுவனங்கள் பயன்படுத்தலாம். 
  • LLP மற்றும் வணிக அமைப்புகள் ஐடிஆர் 5 பயன்படுத்தலாம். 
  • ஐடிஆர் 6 படிவத்தை நிறுவனங்களால் மட்டுமே தாக்கல் செய்யப்படும்.

தேவையான ஆவணங்கள்:

வங்கி கணக்கு விவரங்கள், பான் கார்டு, ஆதார் கார்டு, சம்பளம் பெறும் நபர்களுக்கான படிவம் 16, முதலீட்டு குறித்த, ஆதாரங்கள், வீட்டுக் கடன் வட்டி சான்றிதழ், இன்சூரன்ஸ் பிரீமியம் செலுத்திய ரசீதுகள் ஆகியவை சமர்ப்பிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Bhogi Air Quality: மக்களே உஷார்..! போகி கொண்டாட்டம், சென்னையை சூழ்ந்த கரும்புகை, காற்றில் பிளாஸ்டிக் நச்சு
Bhogi Air Quality: மக்களே உஷார்..! போகி கொண்டாட்டம், சென்னையை சூழ்ந்த கரும்புகை, காற்றில் பிளாஸ்டிக் நச்சு
"மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டு வரட்டும்" பொங்கலுக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து!
Seeman: அம்பேத்கரும், பெரியாரும் ஒன்னா? சிலை ஒன்னா வச்சாலும் சிந்தனை ஒன்னா? மீண்டும் சீறிய சீமான்
Seeman: அம்பேத்கரும், பெரியாரும் ஒன்னா? சிலை ஒன்னா வச்சாலும் சிந்தனை ஒன்னா? மீண்டும் சீறிய சீமான்
ஓராண்டுக்கு ரூ. 8,500! வேலையில்லா இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. காங்கிரஸ்-க்கு தாராள மனசு
ஓராண்டுக்கு ரூ. 8,500! வேலையில்லா இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. காங்கிரஸ்-க்கு தாராள மனசு
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Nellai Elephant Gandhimathi : யானை காந்திமதிக்கு என்னாச்சு? கதறி அழுத பாகன்! சோகத்தில் நெல்லை மக்கள்!V C Chandhirakumar Profile: செந்தில்பாலாஜி Choice! உடனே OK சொன்ன ஸ்டாலின்.. யார் இந்த சந்திரகுமார்?Erode East By Election: ஈரோடு கிழக்கு இடைத்தேர்தல்.. ஸ்டாலின் வைத்த கோரிக்கை நிறைவேற்றிய ராகுல்!Taiwan Couple Marriage in India : அம்மி மிதித்து..அருந்ததி பார்த்து திருமணம் செய்த தைவான் தம்பதி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Bhogi Air Quality: மக்களே உஷார்..! போகி கொண்டாட்டம், சென்னையை சூழ்ந்த கரும்புகை, காற்றில் பிளாஸ்டிக் நச்சு
Bhogi Air Quality: மக்களே உஷார்..! போகி கொண்டாட்டம், சென்னையை சூழ்ந்த கரும்புகை, காற்றில் பிளாஸ்டிக் நச்சு
"மகிழ்ச்சியையும் செழிப்பையும் கொண்டு வரட்டும்" பொங்கலுக்கு குடியரசுத் தலைவர் வாழ்த்து!
Seeman: அம்பேத்கரும், பெரியாரும் ஒன்னா? சிலை ஒன்னா வச்சாலும் சிந்தனை ஒன்னா? மீண்டும் சீறிய சீமான்
Seeman: அம்பேத்கரும், பெரியாரும் ஒன்னா? சிலை ஒன்னா வச்சாலும் சிந்தனை ஒன்னா? மீண்டும் சீறிய சீமான்
ஓராண்டுக்கு ரூ. 8,500! வேலையில்லா இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. காங்கிரஸ்-க்கு தாராள மனசு
ஓராண்டுக்கு ரூ. 8,500! வேலையில்லா இளைஞர்களுக்கு ஜாக்பாட்.. காங்கிரஸ்-க்கு தாராள மனசு
Chennai Rain: சென்னையை சூழ்ந்த கார்மேகங்கள்...நாளை மழை பெய்யுமா? வானிலை மையம் சொன்னது என்ன?
சென்னையை சூழ்ந்த கார்மேகங்கள்...நாளை மழை பெய்யுமா? வானிலை மையம் சொன்னது என்ன?
அதிமுக வழியில் அண்ணாமலை.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிக்கும் பாஜக!
அதிமுக வழியில் அண்ணாமலை.. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலை புறக்கணிக்கும் பாஜக!
கவர்னர் என்ற திமிரா? ஆவேசமாக டயலாக் பேசிய துரைமுருகன்!
கவர்னர் என்ற திமிரா? ஆவேசமாக டயலாக் பேசிய துரைமுருகன்!
ரயில் முன்பதிவில் முறைகேடுகள்.. புகார் அளிப்பது இனி ரொம்ப ஈஸி!
ரயில் முன்பதிவில் முறைகேடுகள்.. புகார் அளிப்பது இனி ரொம்ப ஈஸி!
Embed widget