மேலும் அறிய

இந்தியாவுக்கு வரும் சீன முதலீடு அதிகரிக்கும் வாய்ப்பு - ஸ்டார்ட்-அப் துறையினர் தரும் தகவல் என்ன?

2020-ம் ஆண்டு 11.1 பில்லியன் டாலர்கள் மட்டுமே இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் செய்யப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு இதுவரை 20.76 பில்லியன் டாலர் முதலீடு வந்துள்ளது.

இந்திய ஸ்டார்ட் அப்களுக்கு 2021-ஆம் ஆண்டு முக்கியமான காலம். இந்த ஆண்டு பல நிறுவனங்களுக்கு முதலீடு கிடைத்திருக்கிறது. தவிர இந்த ஆண்டு மட்டும் 25 நிறுவனங்கள் யுனிகார்ன் பட்டியலில் இணைந்திருக்கின்றன. மேலும் பல நிறுவனங்கள் யுனிகார்ன் வரிசையில் இணைய உள்ளன. தற்போது ஜொமேட்டோ நிறுவனத்தின் ஐபிஓ வெற்றியடைந்ததை அடுத்து மேலும் பல நிறுவனங்கள் ஐபிஓ வெளியிட இருக்கின்றன. இதுபோல பல சாதகமான விஷயங்கள் நடந்து வரும் சூழலில் சர்வதேச அளவில் அமெரிக்கா, சீனாவுக்கு அடுத்து அதிக முதலீடை பெறும் நாடாக இந்தியா இருக்கிறது.

இந்த நிலையில் சீனாவின் நடவடிக்கை காரணமாக இந்தியாவுக்கு வரும் முதலீடு அதிகரிக்கும் வாய்ப்பு உருவாகி இருப்பதாக ஸ்டார்ட்-அப் துறையினரும், முதலீட்டாளர்களும் தெரிவித்திருக்கின்றனர்.

சீனா என்ன செய்தது?

சீனா ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு எதிராக மூன்று விஷயங்களை செய்திருக்கிறது. முதலாவதாக பள்ளிக்கல்விதுறை லாபமீட்ட கூடாது என தெரிவித்திருக்கிறது. இதற்கு பல காரணங்களை சீனா கூறுகிறது. சீனாவில் ஒரு குழந்தை திட்டம் இருப்பதால் வயதானவர்கள் அதிகமாகிவிட்டனர். அதனால் இரு குழந்தை திட்டம் அறிவிக்கப்பட்டது. இருந்தாலும் குழந்தைகளின் எண்ணிக்கை பெருகவில்லை. காரணம் குழந்தைகளின் ஆரம்பகல்விக்கு பெற்றோர்கள் அதிக செலவு செய்வதாக தெரிகிறது. இதனால் பள்ளிக்கல்வியில் லாபமீட்ட முடியாது என அறிவித்தால் செலவு குறையும் என கருதியது. ஆனால் சீனாவின் கல்வி துறை சார்ந்த சந்தை 100 பில்லியன் டாலருக்கு மேல். லாபம் ஈட்ட முடியாது என்பதால் முதலீட்டாளர்கள் செய்வதறியாமல் இருக்கிறார்கள். இந்த துறையில் உள்ள பட்டியலிடப்பட்ட நிறுவனங்கள் பெரும் வீழ்ச்சியை சந்தித்திருக்கின்றன.

இரண்டாவதாக டெக்னாலஜி நிறுவனங்கள் மீதான நெருக்கடி. டிடி நிறுவனம் புதிய வாடிக்கையாளர்களை சேர்ப்பதற்கு அரசு தடைவிதித்திருக்கிறது. அலிபாபா குழுமத்துக்கு நெருக்கடி கொடுக்கப்பட்டது. பைட்டான்ஸ் நிறுவனத்துக்கும் நெருக்கடி கொடுக்கப்பட்டது. இதுபோல பல டெக்னாலஜி நிறுவனங்கள் மற்றும் முதலீட்டாளர்கள் செய்வதறியாது உள்ளனர்.

இந்தியாவுக்கு வரும் சீன முதலீடு அதிகரிக்கும் வாய்ப்பு - ஸ்டார்ட்-அப் துறையினர் தரும் தகவல் என்ன?

இந்த நிலையில் கடந்த வாரம் தகவல் பாதுகாப்பு சட்டம் கொண்டுவரப்பட்டது. நவம்பர் 1-ஆம் தேதி முதல் புதிய விதிமுறைகள் அமலுக்கு வருகின்றன. வாடிக்கையாளர்களிடம் வாங்கப்படும் தகவல்களில் பல விதிமுறைகளை சீனா கொண்டுவந்திருக்கிறது. வாங்குவது மட்டுமல்லாமல் அந்த தகவல்களை எப்படி பயன்படுத்துவது என்பதிலும் பல கட்டுப்பாடுகளை சீனா விதித்திருக்கிறது.

இவையெல்லாம் பெரிய பாதிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கைகள், இது இல்லாமல் சிறியதும் பெரியதுமாக தொழில்துறையை பாதிக்கும் நடவடிக்கைகளை அடிக்கடி சீனா எடுத்துவருகிறது. இதனால் அமெரிக்கா மற்றும் சர்வதேச முதலீட்டாளர்கள் அதிர்ச்சியில் உள்ளனர். மேலும் அதிக பணக்காரர்கள் சமூகத்துக்கு அதிகம் திருப்பி தரவேண்டும் என்றும் விரும்புவதாக தெரிகிறது. இதுபோல தொழிலுக்கு ஏற்ற சூழல் சீனாவில் இல்லை என பலர் கருதுகிறார். இதனால் ஒரு வாரத்தில் சீனா டெக்னாலஜி நிறுவனங்களின் சந்தை மதிப்பு 560 பில்லியன் டாலருக்கு மேல் சரிந்தது.

இந்தியாவுக்கு வாய்ப்பு

இதுபோன்ற பல காரணங்களால் சீனாவுக்கு செல்ல வேண்டிய முதலீடுகள் இந்தியாவுக்கு வருவதற்கான வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது. இந்தியாவை விட சீனாவுக்கு அதிக முதலீடுகள் வரும். தற்போது சீனா முதலீட்டை விரும்பவில்லை என்பதால் அந்த முதலீடுகள் வளரும் நாடுகளுக்கு வரத்தொடங்கி உள்ளன. குறிப்பாக இந்தியாவுக்கு வர தொடங்கியுள்ளன என Eruditus நிறுவனத்தின் தலைமைச் செயல் அதிகாரி கூறினார். இந்த நிறுவனம் கடந்த வாரம் பெருமளவுக்கு நிதி திரட்டியது. சாப்ட்பேங்க், ஆக்செல் உள்ளிட்ட பல நிறுவனங்கள் முதலீடு செய்துள்ளன. இந்த நிறுவனம் கல்வித்துறையில் உள்ளது கவனிக்கத்தக்கது.

சீனா ஸ்டார்ட் அப் உலகில் ஜப்பானை சேர்ந்த சாப்ட்பேங்க் பெரும்பான்மையான முதலீட்டை வைத்திருக்கிறது. சாப்ட்பேங்க் போர்ட்போலிவில் 23 சதவீதம் அளவுக்கு சீனாவில் உள்ளது. ஆனால் கடந்த ஏப்ரல் முதல் இதுவரை சாப்ட்பேங்க் செய்துள்ள முதலீட்டில் 11 சதவீதம் மட்டுமே சீனாவில் உள்ளது என மசாயோசி சன் தெரிவித்திருக்கிறார். மேலும் சீனாவில் செய்யப்படும் முதலீடுகளை மிகவும் எச்சரிக்கையாக செய்கிறோம். இந்த நிலைமை சரியாக இரு ஆண்டுகள் வரை ஆகும். மேலும் ஒரு குறிப்பிட்ட பிராந்தியத்தை நம்பி இருக்க கூடாது என தெரிவித்திருக்கிறார்.

2020-ம் ஆண்டு 11.1 பில்லியன் டாலர்கள் மட்டுமே இந்திய ஸ்டார்ட் அப் நிறுவனங்களில் செய்யப்பட்டது. ஆனால் இந்த ஆண்டு இதுவரை 20.76 பில்லியன் டாலர் முதலீடு வந்துள்ளது.

சீனா எடுத்துள்ள கடுமையான நடவடிக்கைகளால் இந்தியாவுக்கு எவ்வளவு சாதகம் என்பது இன்னும் சில ஆண்டுகளில் தெரியவரும்.

ஆப்பிஸினஸ் என்னும் லாபமீட்டும் யுனிகார்ன்.. வணிகத்தில் தெரிந்துகொள்ள வேண்டிய ஒரு பக்கம்!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Embed widget