Salary Hike: 2023-ம் ஆண்டில் இந்த ஊழியர்களுக்கு 10% ஊதிய உயர்வு கிடைக்கும்: ஆய்வில் தகவல்
இந்தியாவில் வேலைவாய்ப்புகளுக்கான மிகவும் நம்பிக்கைக்குரிய துறைகளில் இ-காமர்ஸ், டிஜிட்டல் சேவைகள், சுகாதாரம், தொலைத்தொடர்பு, கல்வி சேவைகள், நிதி தொழில்நுட்பம் ஆகியவை உள்ளன.
இந்தியாவில் சராசரி சம்பளம் 2023 ஆம் ஆண்டில் 10.2 சதவீதம் அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது, இது 2022 நிதியாண்டில் 10.4 சதவீத அதிகரிப்பை விட சற்று குறைவாகும் என ஃப்யூச்சர் ஆஃப் பே என்ற அறிக்கையை இ.ஒய் நிறுவனம் தெரிவித்துள்ளது. இ.ஒய் நிறுவனமானது, பொருளாதார சார்ந்த தரவுகளை வெளியிடும் பணியை செய்து வருகிறது.
”சம்பளத்தின் எதிர்காலம்" அறிக்கை:
”ப்ளூ காலர்” தொழிலாளர்களைத் தவிர, 2023 ஆம் ஆண்டில் சம்பள உயர்வுகள், 2022 ஆம் ஆண்டைவிட குறைவாக இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதிக சம்பள உயர்வுகளைக் கொண்ட முதல் மூன்று துறைகள் தொழில்நுட்பத்துடன் தொடர்புடையவை என இந்த ஆய்வு தெரிவிக்கின்றது. இ-காமர்ஸ் அதிகபட்சமாக 12.5 சதவீதமாகவும், தொழில்முறை சேவைகள் 11.9 சதவீதமாகவும், தகவல் தொழில்நுட்பம் 10.8 சதவீதமாகவும் இருக்கும் என்று EY நடத்திய "சம்பளத்தின் எதிர்காலம்" என்ற தலைப்பில் நடத்தப்பட்ட ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
வேலைவாய்ப்புகள்:
2023-ஆம் ஆண்டில் இந்தியாவில் வேலைவாய்ப்புகளுக்கான மிகவும் நம்பிக்கைக்குரிய துறைகளில் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, இ-காமர்ஸ், டிஜிட்டல் சேவைகள், சுகாதாரம், தொலைத்தொடர்பு, கல்வி சேவைகள், சில்லறை மற்றும் தளவாடங்கள் மற்றும் நிதி தொழில்நுட்பம் ஆகியவை அடங்கும். இந்த துறைகள் தொடர்ந்து வளர்ந்து, தகுதிவாய்ந்த ஊழியர்களுக்கு வேலைவாய்ப்புகளை வழங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
செயற்கை நுண்ணறிவு (ஏஐ), மெஷின் லேர்னிங் (எம்எல்) மற்றும் கிளவுட் கம்ப்யூட்டிங் ஆகியவை அதிக தேவை கொண்ட துறைகளாக உள்ளன
இந்திய பொருளாதாரம் தொடர்ந்து வளர்ந்து வரும் நிலையில், பல்வேறு துறைகளில் சிறந்த திறமையாளர்களுக்கான போட்டி தீவிரமடைந்து வருகிறது.
விமர்சன திறன்கள் மற்றும் உயர் செயல்திறன் வரலாற்றைக் கொண்ட சிறந்த திறமையாளர்கள் சராசரி திறமையின் 1.7 முதல் 2 மடங்கு வரை இழப்பீடு பிரீமியங்களைக் கொண்டுள்ளனர்" என்று ஈஒய் இந்தியாவின் தொழிலாளர் ஆலோசனை சேவைகளின் கூட்டாளர் மற்றும் மொத்த ரிவார்ட் நடைமுறைத் தலைவர் அபிஷேக் சென் தெரிவித்துள்ளார்.
Also Read: ISRO Young Scientist 2023: பள்ளி மாணவர்கள் கவனத்திற்கு.. இளம் விஞ்ஞானி பயிற்சிக்கு இஸ்ரோ அழைப்பு..