Income Tax Website: வருமான வரித்துறையின் புதிய இணையதளம் : எப்படி பயன்படுத்துவது? சிறப்பம்சம் என்ன?
வருமான வரித்தாக்கல் செய்பவர்களின் வசதிக்காக வருமான வரித்துறையினர் புதிய இணையதள வசதியை அறிமுகம் செய்துள்ளனர்.
வருமான வரி செலுத்துபவர்களின் வசதிக்காக வருமான வரித்துறையினர் நேற்று புதிய இணையதளம் ஒன்றை அறிமுகப்படுத்தியுள்ளனர். இந்த புதிய ஐ.டி.ஆர். இ-போர்ட்டல் 2.0 மூலமாக வருமான வரித்துறையினரின் இணையதளத்தின் உள்ளே செல்வதுடன் மிக எளிதாக தொந்தரவு இல்லாமல் தாக்கல் செய்யலாம். இந்த புதிய போர்ட்டல் மூலமாக வருமான வரி செலுத்துவோர் தங்களது வருமான வரி கணக்கை எளிமையாக ஆன்லைன் மூலமாகவே தாக்கல் செய்யலாம். இந்த புதிய இ போர்ட்டல் முறை வரியை செலுத்துவதற்கு பல வழிமுறைகள் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. இது பயன்படுத்துவதற்கு மிகவும் எளிமையானது. சாட்போர்டு வசதி உள்ளது. செல்போன்களில் இதை செயலிகள் மூலமாகவும் பயன்படுத்திக்கொள்ளவும்.
வருமான வரி கணக்கு தேர்வு மற்றும் அதற்கு முன்பே தாக்கல் செய்யப்பட்ட வருமான வரி கணக்கு வழிகாட்டி அடிப்படையிலான உதவிகளையும் பெற முடியும். இந்த இணையதளத்தில் உள்ளே நுழைவது மிகவும் பாதுகாப்பான முறையில் உருவாக்கப்பட்டுள்ளது.
We proudly present to our valued taxpayers, the new e-Filing portal https://t.co/GYvO3n9wMf. Designed with your convenience in mind, the portal offers features to make your e-filing experience smoother, simpler & smarter.
— Income Tax India (@IncomeTaxIndia) June 7, 2021
You Come First, Always!#eFilingMadeEasier #NewPortal pic.twitter.com/GEPlPBHYZR
இந்த இணையதளத்தில் பயனாளர்கள் எளிதில் பயன்படுத்தும் வகையில் பக்கங்கள் உருவாக்கப்பட்டுள்ளது. வருமான வரி கணக்கு தாக்கல் செய்பவர்களின் வசதிக்காக இந்த இணையதளத்தில் மேம்படுத்தப்பட்ட உதவி பிரிவு மற்றும் பயனர் கையேடு வீடியோக்களும் இடம்பெற்றுள்ளது. இந்த புதிய 2.0 வருமான வரி கணக்கு தாக்கல் செய்யும் இணைய வசதியில் மேலும் சில முக்கிய அம்சங்கள் உள்ளது. மின்னனு சரிபார்ப்பு, ஆதார் எண்ணை பான் கார்டுடன் இணைப்பது, பான் கார்டு எண்ணை சரிபார்ப்பது உள்ளிட்ட பல சேவைகள் இடம்பெற்றுள்ளது. இந்த இணைய தளத்தின் வலது பக்கத்தில் ஆப்ஷன் வசதிகள் இடம்பெற்றுள்ளது.
மேலும் படிக்க : விவசாய நகை கடனை முறையாக திருப்பிச் செலுத்துவோருக்கு மானியம்