விவசாய நகை கடனை முறையாக திருப்பிச் செலுத்துவோருக்கு மானியம்
விவசாயிகளுக்கு 7 சதவிகித வட்டி என்ற விகிதத்தில் விவசாய நகை கடன் வழங்கப்பட்டு வருகின்றது
விவசாய நகை கடனை முறையாக திருப்பிச் செலுத்துவோருக்கு மானியம் வழங்கப்டும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது. கொரோனாவின் இரண்டாம் அலையில் பலர் தங்களுடைய வாழ்வாதாரத்தை பெருமளவு இழந்து வருகின்றனர். ஓர் ஆண்டினை கடந்தும் தளர்வுகளோடு தொடரும் ஊரடங்கினாள் மக்கள் தங்களுடைய வாழ்வாதாரத்தை பெரிதும் இழந்து வருகின்றனர். ஆனால் முறையான ஊரடங்கு மட்டுமே தொற்றின் அளவை குறைக்க ஒரே வழி என்பது வல்லுனர்களின் கருத்து இந்நிலையில் இந்த இக்கட்டான சூழலில் விவசாய நகை கடனை முறையாக திருப்பிச் செலுத்துவோருக்கு மானியம் வழங்கப்படும் என்ற அறிவிப்பு வெளியாகி உள்ளது.
விவசாயிகளுக்கு 7 சதவிகித வட்டி என்ற விகிதத்தில் விவசாய நகை கடன் வழங்கப்பட்டு வருகின்றது. அந்த கடனை முறையாக திருப்பிச் செலுத்துவோர்க்கு மானியமும் வழங்கப்படுகிறது. இந்நிலையில் கடந்த 2019ம் ஆண்டு பட்ஜெட்டில் இந்த மணியத்திற்கான நிதி ஒதுக்கீடு அறிவிக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. இதனை தொடர்ந்து விவசாய நகை கடனுக்கு வழங்கப்பட்டு வந்த மானியம் கடந்த 2019ம் ஆண்டு முதல் நிறுத்தப்பட்டது. இந்த தருணத்தில் கொரோனாவின் பரவல் காரணமாக விவசாயிகள் பெரும் இன்னலுக்கு ஆளாகி உள்ள நிலையில், வாங்கி நகைக்கடனை முறையாக செலுத்த முடியாமல் தவித்து வருகின்றனர்.
விவசாயிகளின் இந்த இக்கட்டான சூழலில் கடந்த மார்ச் 1ம் தேதி முதல் வருகின்ற 30ம் தேதி வரையிலான தேதிகளில் நகைகளுக்கான 7 சதவிகித வட்டியில் 3 சதவிகிதம் மானியமாக வழங்க வேண்டும் என்று நபார்டு வாங்கின சார்பில் அனைத்து வங்கிகளுக்கும் சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது. இதனால் மேற்குறிப்பிட்ட காலத்தில் நகை கடனை சரியாக செலுத்தியவர்களுக்கு இந்த மாதத்தின் இறுதிக்குள் 3 சதவிகிதம் வட்டித்தொகை மானியமாக கிடைக்கும் என்று கூறப்பட்டுள்ளது.
இதனால், நகை கடன் முறையாக செலுத்தியவர்களுக்கு இந்த மாத இறுதிக்குள் 3 சதவீத வட்டித்தொகை மானியமாக, அவர்களது வங்கி கணக்கிற்கு வரவு வைக்கப்படும் என்று நபார்டு வங்கி அதிகாரிகள் தெரிவித்து உள்ளனர். தமிழகத்தில் தற்போது தொற்றின் அளவு குறைய தொடங்கியுள்ளது. கொரோனா பாதிப்பிலிருந்து நேற்று 31ஆயிரத்து 360 பேர் குணமாகியுள்ளனர். தொற்று ஏற்பட்டு சிகிச்சையில் இருந்தவர்களில் 351 பேர் உயிரிழந்தனர். தற்போது, மாநில அளவில் 2 லட்சத்து 32 ஆயிரத்து 26 பேர் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு, தனிமைப்படுத்துதலிலும், மருத்துவமனை சிகிச்சையிலும் இருக்கின்றனர் என்று சுகாதாரத் துறை தெரிவித்துள்ளது.
அன்றாட தொற்று பாதிப்பானது, நேற்று அதிக அளவாக கோவை மாவட்டத்தில் 2,564 பேருக்கும் ஈரோட்டில் 1,646 பேருக்கும் சென்னையில் 1,530 பேருக்கும் திருப்பூரில் 1,027 பேருக்கும் கண்டறியப்பட்டது. சேலம் மாவட்டத்தில் 997 பேருக்கும் செங்கல்பட்டில் 837 பேருக்கும் தஞ்சையில் 831 பேருக்கும் நாமக்கல்லில் 597 பேருக்கும் திருச்சியில் 548 பேருக்கும் நீலகிரியில் 503 பேருக்கும் நாகையில் 492 பேருக்கும் நேற்று தொற்று உறுதிசெய்யப்பட்டது.