மேலும் அறிய

5 மாநில தேர்தல் முடிவு பங்குச்சந்தையில் எதிரொலிக்குமா? நிபுணர்கள் கருத்து

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாவதால் அது பங்குச்சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் இன்று வெளியாவதால் அது பங்குச்சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

2022ஆம் ஆண்டு சட்டமன்றத் தேர்தலுக்கு பிந்தைய கருத்துக் கணிப்பின்படி உத்தரப்பிரதேச மாநிலத்தில் பாஜகவில் மீண்டும் பாஜக ஆட்சி அமைக்க வாய்ப்பு உள்ளதாக தெரிகிறது.  மணிப்பூரில் பாஜக தலைமையிலான மீண்டும் அரசு அமைய வாய்ப்பு உள்ளதாகக் கூறப்படுகிறது. கோவாவில் யார் ஆட்சியை பிடிப்பது என்பதில் இழுபறி நீடிக்கும். பஞ்சாப் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தம் உள்ள 117 இடங்களில் 59 இடங்களில் வெற்றிப் பெற்றும் பட்சத்தில் ஆட்சியை பிடிக்கும். அந்தவகையில் ஆம் ஆத்மி 51-61 இடங்கள் வரை பெற வாய்ப்புள்ளது. ஆகவே அங்கு ஆம் ஆத்மி ஆட்சி அமைக்கும் என்று கருதப்படுகிறது. உத்தராகண்ட் மாநிலத்தில் 36 சட்டப்பேரவை இடங்களை பிடிக்கும் கட்சி தனி பெரும்பான்மை பெற்று ஆட்சி அமைக்க முடியும். காங்கிரஸ் கட்சி 38 இடங்கள் வரை பிடிக்க வாய்ப்பு உள்ளது. ஆகவே அங்கு காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இவை, ஏபிபி-சிவோட்டர்ஸ் நடத்திய பிந்தைய கருத்துக்கணிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், 5 மாநில சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் நாளை வெளியாவதால் அது பங்குச்சந்தைகளில் தாக்கத்தை ஏற்படுத்தும் என்ற எதிர்பார்ப்பு எகிறியுள்ளது.

உபி தேர்தல் முடிவையே சந்தைகள் மிகவும் உன்னிப்பாக கவனித்து வருகிறது. உ.பி.யில் பாஜக வெற்றி பெற்றால் அது 2024 நாடாளுமன்றத் தேர்தலுக்கு அச்சாரமாக அமையும் என்பதாலேயே இந்த எதிர்பார்ப்பு நிலவுகிறது. 

5 மாநில தேர்தல் முடிவு பங்குச்சந்தையில் எதிரொலிக்குமா? நிபுணர்கள் கருத்து

பிரபுதாஸ் லீலாதர் ஏக்விட்டீஸ் நிறுவன இயக்குநர் அம்னீஷ் அகர்வால், "2024 நாடாளுமன்றத் தேர்தலில் முன்னோட்டமாகவே இந்த 5 மாநிலத் தேர்தல் குறிப்பாக உபி தேர்தல் பார்க்கப்படுகிறது. இந்தத் தேர்தல் முடிவு 2024க்குப் பின்னர் பொருளாதார சீர்திருத்த நடவடிக்கைகள் எப்படி அமையும் என்ற எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது" என்றார்.
"தேர்தல் நாள் என்றாலே பங்குச்சந்தை அப்படி இப்படி ஊசலாடுவது இயல்பே. 2007, 2012 ஆண்டுகளில் சட்டப்பேரவை தேர்தலின் போது நிஃப்டி 2% முதல் 3% வரை மாறிமாறி ஏற்ற இறக்கத்துடன் வர்த்தகமானது. இதுபோன்ற ஊசலாட்டங்கள் நாளையும் இருக்கலாம்" எனக் கூறுகிறார் இன்னொரு சந்தை நிபுணர்.

பைப்பர் செரிக்கா என்ற பங்குச்சந்தை முதலீட்டு நிறுவனத்தின் தலைவர் அபய் அகர்வால் கூறுகையில், “பொதுவாக பங்குச்சந்தைகள் பாராளுமன்றத் தேர்தலைத் தான் பெரிதாக எதிர்நோக்கும். சட்டப்பேரவைத் தேர்தலை அவ்வளவு பெரிதாக எடுத்துக் கொள்வது இல்லை. இருப்பினும் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகள் மிகச் சிறிய அளவில் தாக்கத்தை ஏற்படுத்தும். நீண்ட கால முதலீட்டாளர்கள் சட்டப்பேரவைத் தேர்தல் முடிவுகளை கருத்திலேயே கொள்வதில்லை என்பதால் நாங்கள் பெரிய தாக்கங்களை எதிர்பார்க்கவில்லை" என்றார். 

ஆக்சிஸ் செக்யூரிட்டீஸ் நிறுவனத்தின் நிஷித் மாஸ்டர் கூறுகையில், "ஈகிவிட்டி சந்தைக்கு உறுதியற்ற தன்மை எப்போதுமே உதவாது. அரசாங்கத்தின் கொள்கைகள் முதலீட்டாளர்களுக்கு சாதகமாக இருக்குமென்றால் தேர்தலில் யார் வெற்றி என்பதை சட்டை செய்யாமல் முடிவுகளை வரவேற்கலாம். ஒருவேளை தேர்தல் முடிவுகளால் மத்திய அரசாங்கம் சமூக செலவினங்களை அதிகரிக்கும் என்ற சூழல் உருவானால் அப்போது சந்தை அதை எதிர்மறையாக அணுகும்" என்றார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

”இரட்டை இலை சின்னம் முடக்கம்?” சதிவலை பின்னும் பாஜக?” தப்பிப்பாரா எடப்பாடி..?
”இரட்டை இலை சின்னம் முடக்கம்?” சதிவலை பின்னும் பாஜக?” தப்பிப்பாரா எடப்பாடி..?
Pamban Paalam: மக்கள் உயிருடன் விளையாடும் ரயில்வே..! புதிய பாம்பன் பாலம் தரமாக இல்லை - பாதுகாப்பு ஆணையர் அறிக்கை
Pamban Paalam: மக்கள் உயிருடன் விளையாடும் ரயில்வே..! புதிய பாம்பன் பாலம் தரமாக இல்லை - பாதுகாப்பு ஆணையர் அறிக்கை
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

விஜய்யை தாக்கிய வெற்றிமாறன்! பின்னணியில் திமுக? கொந்தளிக்கும் தவெகவினர்”குறுக்க வர மாட்டோம்” மோடிக்கு CALL பண்ண ஷிண்டே! சோகத்தில் சிவசேனா”இவர் தான் என் காதலர்”மதம் மாறும் கீர்த்தி சுரேஷ்? கிறித்தவ முறைப்படி திருமணம்திமுக பக்கம் சாயும் நயினார்! EPS கொடுத்த அசைன்மெண்ட்! நேரில் சென்ற SP வேலுமணி

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
”இரட்டை இலை சின்னம் முடக்கம்?” சதிவலை பின்னும் பாஜக?” தப்பிப்பாரா எடப்பாடி..?
”இரட்டை இலை சின்னம் முடக்கம்?” சதிவலை பின்னும் பாஜக?” தப்பிப்பாரா எடப்பாடி..?
Pamban Paalam: மக்கள் உயிருடன் விளையாடும் ரயில்வே..! புதிய பாம்பன் பாலம் தரமாக இல்லை - பாதுகாப்பு ஆணையர் அறிக்கை
Pamban Paalam: மக்கள் உயிருடன் விளையாடும் ரயில்வே..! புதிய பாம்பன் பாலம் தரமாக இல்லை - பாதுகாப்பு ஆணையர் அறிக்கை
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை  - வானிலை அறிக்கை
TN Rain Update: சென்னைக்கு அருகில் ஃபெங்கல் புயல் - 12 மாவட்டங்களுக்கு கனமழை எச்சரிக்கை - வானிலை அறிக்கை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
Fengal Cyclone LIVE: புயல் எதிரொலி.! புதுச்சேரியில் பள்ளி கல்லூரிகளுக்கு விடுமுறை
“மருத்துவமனையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அனுமதி” மீண்டும் என்ன ஆனது அவருக்கு..?
“மருத்துவமனையில் ஈவிகேஎஸ் இளங்கோவன் அனுமதி” மீண்டும் என்ன ஆனது அவருக்கு..?
"மாவீரம் போற்றுதும்" மாவீரர் தினத்தை நினைவுகூர்ந்த தவெக தலைவர் விஜய்!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
Nainar Nagendran : ”திமுக-விற்கு செல்ல காய்நகர்த்தும் நயினார்?” அதிமுகவிற்கு அழைத்த எஸ்.பி.வேலுமணி..!
"BJP சொல்வதுதான் ஃபைனல்" உருக்கமாக பேசிய ஷிண்டே.. முதல்வர் பதவி ரேஸில் இருந்து விலகிய சிவசேனா!
Embed widget