HDFC Life Sanchay Plus : குழந்தைகளின் உயர்கல்வி இனிமேல் வெறும் கனவல்ல.. துணை நிற்கும் HDFC!
HDFC Life Sanchay Plus என்ற திட்டத்தை ஹெச்.டி.எஃப்சி லைஃப் அறிமுகம் செய்துள்ளது.
![HDFC Life Sanchay Plus : குழந்தைகளின் உயர்கல்வி இனிமேல் வெறும் கனவல்ல.. துணை நிற்கும் HDFC! HDFC Life Sanchay Plus: childs education here is how to achieve your financial dream HDFC Life Sanchay Plus : குழந்தைகளின் உயர்கல்வி இனிமேல் வெறும் கனவல்ல.. துணை நிற்கும் HDFC!](https://feeds.abplive.com/onecms/images/uploaded-images/2022/08/31/f26bbe13266ca28f3aed401a534da3151661939189884175_original.jpg?impolicy=abp_cdn&imwidth=1200&height=675)
பெரும்பாலான நடுத்தர குடும்பங்கள் சந்திக்கும் மிகப்பெரிய பிரச்னை தங்களுடைய குழந்தைகளின் படிப்பிற்கு கட்டணம் செலுத்துவதுதான். அதிலும் குறிப்பாக தங்களுடைய குழந்தைகளின் உயர்க்கல்வி கட்டணத்தை செலுத்த சிலர் மிகவும் சிரமத்திற்கு உள்ளாவது வழக்கம். இந்தியாவில் 2012-2020 ஆண்டுகளில் கல்வி கட்டணம் சுமார் 10 முதல் 12 மடங்கு உயர்ந்துள்ளதாக எட்ஜ்யூ ஃபண்ட் அமைப்பு ஆய்வில் தெரிவித்துள்ளது.
ஆகவே தங்களுடைய குழந்தைகளின் கட்டணத்தை சமாளிக்க பெற்றோர்கள் முன்பாகவே தங்களுடைய சேமிப்பை தொடங்க வேண்டும். இதற்காக பல்வேறு வங்கிகள் கல்வி கடன் தொடர்பான திட்டங்களை அறிவித்து வருகின்றன. இந்நிலையில் ஹெச்.டிஎஃப்சி லைஃப் தன்னுடைய பங்கிற்கு ஒரு திட்டத்தை அறிவித்துள்ளது. HDFC Life Sanchay Plus என்ற திட்டத்தை HDFC Life அறிமுகம் செய்துள்ளது.
பாலிசி காலத்தை முடிவு செய்தல்:
பொதுவாக கல்வி கட்டணத்திற்கான சேமிப்பில் முக்கியமாக எப்போது அது நமக்கு பயன்பட வேண்டும் என்பதை தீர்மானிக்க வேண்டும். அதன்பின்னர் அதற்கு ஏற்ப எப்படி தொகையை சேமிக்க வேண்டும் என்பதை முடிவு செய்ய வேண்டும். அதற்கு நீங்கள் சரியான ப்ரிமியம் காலம் மற்றும் பாலிசி வருடம் ஆகிய வற்றை சரியாக தேர்வு செய்வது முக்கியமான ஒன்று. உதாரணமாக 20 ஆண்டுகள் பாலிசியை எடுத்து அதற்கு 10 ஆண்டுகள் ப்ரிமியம் செலுத்தும் பட்சத்தில் உங்களுக்கு பாலிசி முடிவில் பெரிய தொகை சேமிப்பாக கிடைக்கும்.
தொடர்ச்சியான சேமிப்பு:
இந்தக் கல்வி கட்டணத்திற்கு சேமிப்பை தொடர்ச்சியாக செய்து வருவது முக்கியம். அதற்காக இந்த HDFC Life Sanchay Plus திட்டம் உதவியாக அமைந்துள்ளது. குறிப்பாக இந்தத் திட்டத்தில் 3 வகையான ப்ரிமியம் செலுத்தும் வசதி உள்ளது. அதாவது 5 வருடம், 6 வருடம், 10 வருடம் ப்ரிமியம் செலுத்தலாம். அதேபோல் பாலிசியும் 3 விதங்களில் உள்ளது. 10 வருடம், 12 வருடம் மற்றும் 20 வருடம் என்று உள்ளது.
இதர சலுகைகள்:
இவை தவிர இந்தத் திட்டத்தில் உறுதியான சேமிப்பு தொகை, உறுதியான வருமானம், நீண்ட கால பயன் உடனும் இந்த திட்டங்கள் வருகின்றன. அத்துடன் இந்தத் திட்டத்துடன் காப்பீட்டு திட்டமும் உள்ளது. மேலும் இந்த திட்டத்தை தனியாகவே அல்லது இணைந்தும் எடுக்கலாம். காப்பீட்டு திட்டத்தை பொறுத்தவரை ப்ரிமியன் தொகையிலிருந்து 1.25 மடங்கு அல்லது 10 மடங்கு ஆண்டு ப்ரிமியம் என்று இருக்கும். அத்துடன் இந்தத் திட்டத்தை எடுக்கும் பட்சத்தில் வாடிக்கையாளர்கள் வரி விலக்கு பெற முடியும். தற்போது உள்ள வருமான வரிச் சட்டத்தின் விலக்கு அளிக்கும் சேமிப்பு மற்றும் முதலீட்டு திட்டங்களில் HDFC Life Sanchay Plus இடம்பெற்றுள்ளது. ஆகவே உங்களுடைய குழந்தைகளின் கல்விக்காக ஒரு சிறந்த திட்டத்தை தேர்ந்தெடுக்க வேண்டும் என்றால் இதை தேர்வு செய்யலாம்.
மேலும் படிக்க:HDFC Life Sanchay Fixed Maturity Plan-இல், கனவு இல்லத்திற்கான தேடலை இன்றே தொடங்குவோம்..
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்
![ABP Premium](https://cdn.abplive.com/imagebank/metaverse-mid.png)
![வினய் லால்](https://cdn.abplive.com/imagebank/editor.png)