HDFC வங்கி வாடிக்கையாளர்களே கவனியுங்க.! இந்த 2 நாள் UPI வேலை செய்யாது.!
HDFC Bank UPI: தொழில்நுட்ப பராமரிப்பின் காரணமாக, நவம்பர் மாதத்தில் இரண்டு நாட்களுக்கு ஐந்து மணிநேரம் UPI சேவையை பயன்படுத்த முடியாது என எச்டிஎஃப்சி வங்கி அறிவித்துள்ளது.
எச்டிஎஃப்சி வங்கியின் வாடிக்கையாளர்களுக்கு, நவம்பர் மாதம் 2 நாட்களில் சில மணி நேரங்கள் UPI வசதி இயங்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
டிஜிட்டல் பரிவர்த்தனை:
இந்தியாவில், டிஜிட்டல் பரிவர்த்தனையானது தொடர்ந்து அதிகரித்து கொண்டே வருகிறது. சிறு சாலையோரக் கடைகள் முதல், மிகப்பெரிய வர்த்தக கடைகளில் கூட டிஜிட்டல் பரிவர்த்தனை நடைபெறுவதை பார்க்க முடிகிறது.
அதிலும் குறிப்பாக , கூகுள் பே, போன் பே , பே டி எம் உள்ளிட்ட செயலிகளின் வருகையை தொடர்ந்து , சாமானிய மக்களும் டிஜிட்டல் பரிவர்த்தனையை மேற்கொள்ள ஆரம்பித்தனர். ஏனென்றால், இவை பயன்பாட்டுக்கு மிகவும் எளிமையாகவும் , அணுகும் தன்மையை கொண்டதன் காரணத்தால் என்று சொல்லலாம்.
இதையடுத்து, ஒவ்வொரு வங்கிகளும் டிஜிட்டல் பரிவர்த்தனை திட்டத்திற்குள் வர தொடங்கின. UPI மூலமாக , வங்கிகளை சொந்தமாக செயலிகளை வடிவமைத்தும் பரிவர்த்தனைகளை ஏற்படுத்தினர்.
Video: அமெரிக்காவிலுள்ள புயலை வீடியோ எடுத்த சர்வதேச விண்வெளி நிலையம்.! வியக்க வைக்கும் காட்சி.!
எதிலும் யுபிஐ:
தற்போது உணவுப் பில், ஷாப்பிங் செய்வது அல்லது பெட்ரோல் -டீசல் கட்டணம் செலுத்துவது என எதுவாக இருந்தாலும், டிஜிட்டல் முறையில் பணம் செலுத்துவது வசதியானதாக கருதப்படுகிறது.
இந்நிலையில், மிகப்பெரிய தனியார் வங்கியான HDFC வங்கியானது வாடிக்கையாளர்களுக்கு, அறிவிப்பொன்றை அறிவித்துள்ளது. அதில் தெரிவித்துள்ளதாவது . “ எங்கள் விரிவான வங்கி முறைக்கு நன்றி, வாராந்திர விடுமுறைகள் மற்றும் வாரநாட்கள் உட்பட, வாரத்தின் ஒவ்வொரு நாளும் டிஜிட்டல் பணம் செலுத்துதல்கள் இயக்கப்படுகின்றன. எனினும், தொழில்நுட்ப பராமரிப்பு காரணமாக இரண்டு நாட்களில் சில மணி நேரம் யுபிஐ வசதி செயல்படாது .
இருப்பினும், வாடிக்கையாளர்களுக்கு UPI சேவை நிறுத்தப்படும் இந்த நாட்களில் குறைந்தபட்சம் சில மணி நேரங்கள் இருக்கலாம்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.
1.நவம்பர் 5 ஆம் தேதி நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 2 மணி வரை UPI சேவை மூடப்படும் என்று தெரிவித்துள்ளது.
2.நவம்பர் 23 ஆம் தேதி, UPI சேவை நள்ளிரவு 12 மணி முதல் அதிகாலை 3 மணி வரை மூன்று மணி நேரம் மூடப்படும் என்றும் தெரிவித்துள்ளது.
ஆகையால், வங்கி பயணர்கள், ஏதேனும் அவசர கால அடிப்படையில் பணம் அனுப்புவது, இந்த குறிப்பிட்ட நேரத்திற்குள் இருந்தால், முன்னரே உங்களது திட்டங்களை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்.
MACE Telescope: உலகிலேயே மிக உயரமான தொலைநோக்கி: இந்திய அணுசக்தி துறை அசத்தல்: பயன்கள் என்ன தெரியுமா?