மேலும் அறிய

Gold-Silver Price, 20 October: ஏற்றம் இறக்கம் கடந்து இரக்கம் காட்டிய தங்கம் !

Gold-Silver Price Today, 20 October: வாரத்தின் முதல் நாளில் குறைந்த தங்கம் விலை, இரண்டாம் நாளில் அதிகரித்து, மூன்றாம் நாளில் குறைந்தது.

Gold Silver Rate Today, 20 October: சென்னையில் நேற்று 22 காரட் ஆபரணத்தங்கம் கிராமிற்கு ரூபாய் 4,484க்கு விற்கப்பட்டது. சவரன் தங்கம் ரூபாய் 35,872க்கு விற்கப்பட்டது. இந்த நிலையில், காலை நேர நிலவரப்படி தங்கம் கிராமிற்கு ரூ.10 குறைந்து ரூ. 4,474க்கு விற்கப்படுகிறது. சவரன் ரூ.80 குறைந்து ரூபாய் 35,792க்கு விற்கப்படுகிறது.

சவரன் தங்கம் 36 ஆயிரத்தை கடந்து விற்பனை செய்யப்பட்டு வந்தநிலையில், தற்போது 35 ஆயிரத்திற்கு கீழ் குறைந்துள்ளது. அதேபோல, 24 காரட் தங்கம் கிராமிற்கு ரூபாய் 4,838க்கு விற்கப்படுகிறது. சவரன் தங்கம் ரூபாய் 38,704க்கு விற்கப்படுகிறது.

ஒரு கிராம் வெள்ளியின் விலை 10 காசு அதிகரித்து  ரூ.68.70க்கு விற்கப்படுகிறது. ஒரு கிலோ வெள்ளி ரூபாய் 67.700க்கு விற்பனை செய்யப்படுகிறது.

முன்னதாக, தங்கம் விலை தொடர்ந்து அதிகரிக்குமா என்பது குறித்து மெட்ராஸ் ஜூவல்லர்ஸ் மற்றும் டைமண்ட் மெர்ச்சன்ட் அசோசியேசன் தலைவர் ஜெயந்திலால் சலானி ஏபிபி நாடுக்கு பேட்டி அளித்தார். அந்தப் பேட்டியில் அவர் கூறும்போது, பொருளாதார மந்தமான  சூழ்நிலை ஏற்படும்போது, பொருளாதார துறையைச் சேர்ந்த பங்குச் சந்தைகள் சரிவை நோக்கிப்போகும். அப்படிப்பட்ட சூழலில் தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரிக்கும். இந்த மாதிரியான சூழ்நிலை தொடர்ந்து நீடித்தால் தங்கம் விலை இன்னும் அதிகரிக்கும். காரணம் முதலீட்டாளர்களிடம் உள்ள ஒரு பீதியால், தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரிக்கும். முதலீடுகள் எப்போதெல்லாம் அதிகரிக்கிறதோ, அப்போதெல்லாம் தங்கத்தின் விலை அதிகரிக்கக்கூடும் என்றார்.

Gold-Silver Price, 20 October: ஏற்றம் இறக்கம் கடந்து இரக்கம் காட்டிய தங்கம் !

மேலும், கொரோனா இரண்டாவது அலை உலகம் முழுவதும் இருந்த நிலையில், மூன்றாவது அலை சில நாடுகளில் உள்ளது. இதனால், இந்தியாவில் மட்டுமல்லாமல் உலகம் முழுவதுமே தங்கம் விலை உயரும் என்று கூறினார். கொரோனாவின் தாக்கத்தால் முதலீடுகள் அதிகரிக்கும் வாய்ப்புகள் உண்டாகும். ஏனென்றால், பங்குச்சந்தைகள் சரிவை நோக்கிப்போகும். தொழிற்துறையைச் சேர்ந்த எல்லாப் பொருட்களின் உற்பத்தி குறையும். உற்பத்தி குறைந்தால், அந்த உற்பத்தி சார்ந்த பங்குச்சந்தைகள் விலை மிகவும் குறையும். அப்படிப்பட்ட சூழ்நிலையில் முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீது முதலீடு செய்வார்கள். அதன் காரணமாக தங்கம் விலை உயரும் என்று கூறினார்.

மேலும், கொரோனாவின் தாக்கம் குறைந்து, பொருளாதாரம் மந்த நிலையில் இருந்து மீண்டு நல்ல நிலைக்கு சென்ற காரணத்தினால், பொருளாதார துறையைச் சேர்ந்த முதலீடுகள், பங்குச்சந்தைகள் அதிகரித்தன. அதன் காரணமாக தங்கம் விலை சரிந்தது. தற்போதைய சூழ்நிலையில் பங்குச்சந்தையில் முதலீடு செய்வதையே  முதலீட்டாளர்கள் விரும்புவார்கள். காரணம் எது லாபம் கொடுக்குமோ அதில்தான் அவர்கள் முதலீடு செய்வார்கள். இப்போதைய சூழ்நிலை இதுவே" என்று கூறினார். கொரோனா தொடர்ந்து அதிகரிக்கும்பட்சத்தில், தங்கத்தின் விலையும் தொடர்ந்து உயரும். தங்கத்தின் விலை சவரனுக்கு 40 ஆயிரம் ரூபாய் வரை கடக்க வாய்ப்புள்ளது என்றார். மீண்டும் தங்கம் விலை உயருமா, அல்லது குறையுமா என்பதை அடுத்தடுத்த நாட்களில் தெரிய வரும் என்றும் அவர் கூறினார்.

மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

DMDK Election Plan: திமுகவிற்கு பல்டி அடிக்கும் தேமுதிக.? இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்க போகும் பிரேமலதா.!! காத்திருக்கும் ட்விஸ்ட்
திமுகவிற்கு பல்டி அடிக்கும் தேமுதிக.? இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்க போகும் பிரேமலதா.!! காத்திருக்கும் ட்விஸ்ட்
200 கோடியை விட்டுட்டு வராரா விஜய்.!! 2 லட்சம் கோடி சம்பாதிக்க வராரு.. வெளுத்து வாங்கும் கருணாஸ்
200 கோடியை விட்டுட்டு வராரா விஜய்.!! 2 லட்சம் கோடி சம்பாதிக்க வராரு.. வெளுத்து வாங்கும் கருணாஸ்
Karnataka Accident 17 Dead: அதிகாலையில் சோகம்.! தூக்கத்திலேயே உயிரிழந்த 17 பேர்; கர்நாடகாவில் எரிந்த ஆம்னி பேருந்து
அதிகாலையில் சோகம்.! தூக்கத்திலேயே உயிரிழந்த 17 பேர்; கர்நாடகாவில் எரிந்த ஆம்னி பேருந்து
Top 10 News Headlines: SIR 4 நாட்கள் சிறப்பு முகாம், தேவாலயத்தில் மோடி, முடிவுக்கு வரும் ரஷ்யா-உக்ரைன் போர்? - 11 மணி செய்திகள்
SIR 4 நாட்கள் சிறப்பு முகாம், தேவாலயத்தில் மோடி, முடிவுக்கு வரும் ரஷ்யா-உக்ரைன் போர்? - 11 மணி செய்திகள்
ABP Premium

வீடியோ

தவெகவை டிக் அடித்த OPS? செங்கோட்டையனின் HINT! விஜய்யின் புது கணக்கு
”HINDUS 4 குழந்தை பெத்துக்கணும்! MUSLIMS-அ விடக் கூடாது” பாஜக தலைவர் சர்ச்சை பேச்சு
”விஜய் பத்தி பேசாதீங்க” பாஜகவினருக்கு வந்த ஆர்டர்! தலைமையின் பக்கா ப்ளான்
”உனக்கு பதவி கிடையாது” அதிரடி காட்டிய விஜய்! அந்தர்பல்டி அடித்த அஜிதா
Piyush Goyal on Vijay | ”விஜய் ஒரு SPOILER

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
DMDK Election Plan: திமுகவிற்கு பல்டி அடிக்கும் தேமுதிக.? இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்க போகும் பிரேமலதா.!! காத்திருக்கும் ட்விஸ்ட்
திமுகவிற்கு பல்டி அடிக்கும் தேமுதிக.? இபிஎஸ்க்கு ஷாக் கொடுக்க போகும் பிரேமலதா.!! காத்திருக்கும் ட்விஸ்ட்
200 கோடியை விட்டுட்டு வராரா விஜய்.!! 2 லட்சம் கோடி சம்பாதிக்க வராரு.. வெளுத்து வாங்கும் கருணாஸ்
200 கோடியை விட்டுட்டு வராரா விஜய்.!! 2 லட்சம் கோடி சம்பாதிக்க வராரு.. வெளுத்து வாங்கும் கருணாஸ்
Karnataka Accident 17 Dead: அதிகாலையில் சோகம்.! தூக்கத்திலேயே உயிரிழந்த 17 பேர்; கர்நாடகாவில் எரிந்த ஆம்னி பேருந்து
அதிகாலையில் சோகம்.! தூக்கத்திலேயே உயிரிழந்த 17 பேர்; கர்நாடகாவில் எரிந்த ஆம்னி பேருந்து
Top 10 News Headlines: SIR 4 நாட்கள் சிறப்பு முகாம், தேவாலயத்தில் மோடி, முடிவுக்கு வரும் ரஷ்யா-உக்ரைன் போர்? - 11 மணி செய்திகள்
SIR 4 நாட்கள் சிறப்பு முகாம், தேவாலயத்தில் மோடி, முடிவுக்கு வரும் ரஷ்யா-உக்ரைன் போர்? - 11 மணி செய்திகள்
Gold Rate Dec.25th: 1 லட்சம் ரூபாய தாண்டியும் அடங்க மாட்டேங்குதே.?! புதிய உச்சம் தொட்ட தங்கம், வெள்ளி; இன்றைய விலை
1 லட்சம் ரூபாய தாண்டியும் அடங்க மாட்டேங்குதே.?! புதிய உச்சம் தொட்ட தங்கம், வெள்ளி; இன்றைய விலை
Tamilnadu Roundup: முதல்வர், இபிஎஸ் கிறிஸ்துமஸ் வாழ்த்து, தவெகவில் டிடிவி, ஓபிஎஸ்?, புதிய உச்சத்தில் தங்கம், வெள்ளி - 10 மணி செய்திகள்
முதல்வர், இபிஎஸ் கிறிஸ்துமஸ் வாழ்த்து, தவெகவில் டிடிவி, ஓபிஎஸ்?, புதிய உச்சத்தில் தங்கம், வெள்ளி - 10 மணி செய்திகள்
Russia Ukraine War End.?: அப்பாடா.! ஒரு வழியாக ஒப்புக்கொண்ட ஜெலன்ஸ்கி; ரஷ்யாவின் முடிவு என்ன.? போர் தொடருமா.. முடியுமா.?
அப்பாடா.! ஒரு வழியாக ஒப்புக்கொண்ட ஜெலன்ஸ்கி; ரஷ்யாவின் முடிவு என்ன.? போர் தொடருமா.. முடியுமா.?
Election Commission: SIR படிவத்தில் தவறான தகவல்.! 10 லட்சம் பேருக்கு நோட்டீஸ்.? விளக்கம் அளிக்காவிட்டால் பெயர் நீக்கம்
SIR படிவத்தில் தவறான தகவல்.! 10 லட்சம் பேருக்கு நோட்டீஸ்.? விளக்கம் அளிக்காவிட்டால் பெயர் நீக்கம்
Embed widget