மேலும் அறிய

Gold Rate Shocks: பீதியை கிளப்பும் தங்கம் விலை.. ரூ.71,000-த்தை கடந்ததால் பொதுமக்கள் அதிர்ச்சி...

தங்கத்தின் விலை பொதுமக்களுக்கு பீதியை ஏற்படுத்தும் அளவிற்கு உயர்ந்து, 71 ஆயிரம் ரூபாயை கடந்துள்ளது. இன்றைய நிலை நிலவரம் என்னவென்று பார்ப்போம்.

சென்னையில் ஆபரணத் தங்கத்தின் விலை பொதுமக்களுக்கு பீதியை ஏற்படுத்தும் அளவிற்கு எகிறியுள்ளது. ஏற்கனவே 70 ஆயிரம் ரூபாயை கடந்து மக்களுக்கு அச்சத்தை ஏற்படுத்திய நிலையில், இன்று(17.04.25) 71 ஆயிரம் ரூபாயை கடந்து பீதியை கிளப்பியுள்ளது.

தொடர்ந்து உச்ச விலைகளை எட்டிவரும் தங்கம்

ஆபரணத் தங்கத்தின் விலை தினந்தோறும் மாற்றியமைக்கப்பட்டுவரும் நிலையில், கடந்த 10-ம் தேதி தங்கத்தின் விலை அதிரடியாக சவரனுக்கு 1,200 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 68,480 ரூபாயை எட்டியது. ஒரு கிராம் தங்கம் 8,560 ருபாயை எட்டியது. இதைத் தொடர்ந்து, 11-ம் தேதி, ஒரே நாளில் சவரனுக்கு 1,480 ரூபாய் உயர்ந்து பெரும் அதிர்ச்சியளித்து, சவரன் 69,960 ரூபாயாக உயர்ந்தது. ஒரு கிராம் தங்கத்தின் விலை 8,745 என்ற புதிய உச்ச விலையை அடைந்தது.

இந்நிலையில், 12-ம் தேதி பேரதிர்ச்சியாக, 70,000 ரூபாயை கடந்தது தங்கம் விலை. அன்று சவரனுக்கு 200 ரூபாய்தான் உயர்தது என்றாலும், ஒரு சவரன் 70,160 ரூபாய் என்ற வரலாற்று உச்சத்தை அடைந்தது. ஒரு கிராம் 8,770 ரூபாயை எட்டியது. இதைத் தொடர்ந்து, 13-ம் தேதி அதே விலையில் நீடித்தது.

பின்னர், இந்த வாரத்தின் முதல் நாளான 14-ம் தேதி, சவரனுக்கு 120 ரூபாய் குறைந்து, ஒரு சவரன் 70,040 ரூபாயாகவும், ஒரு கிராம் விலை 8,755 ரூபாயாகவும் விற்பனையானது. அதைத் தொடர்ந்து, 15-ம் தேதியும், சவரனுக்கு 280 ரூபாய் குறைந்து ஒரு சவரன் 69,760 ரூபாய்க்கும், ஒரு கிராம் 8,720 ரூபாய்க்கும் விற்கப்பட்டது.

இப்படி, 2 நாட்களாக சிறிதளவாக குறைந்து வந்த தங்கத்தின் விலை, நேற்று(16.04.25) ஒரே நாளில் 760 ரூபாய் உயர்ந்து, மீண்டும் 70 ஆயிரம் ரூபாயை கடந்தது. அதன்படி, நேற்று கிராமிற்கு 95 ரூபாய் உயர்ந்து ஒரு கிராம் 8,815 ரூபாயாகவும், சவரனுக்கு 760 ரூபாய் உயர்ந்து, ஒரு சவரன் 70,520 ரூபாய் என்ற புதிய வரலாற்று உச்ச விலையில் விற்பனையானது. இந்த நிலையில், இன்று அதிரடியாக 840 ரூபாய் விலை உயர்ந்து, சவரன் 71,000 ரூபாயை கடந்து பொதுமக்களுக்கு பீதியை ஏற்படுத்தியுள்ளது.

தங்கத்தின் இன்றைய விலை நிலவரம்

அதன்படி, இன்று ஒரு கிராம் தங்கத்தின் விலை 105 ரூபாய் உயர்ந்து, கிராம் 8,920 ரூபாயை எட்டியுள்ளது. ஒரு சவரன் தங்கம் 840 ரூபாய் உயர்ந்து சவரன் 71,360 ரூபாய்க்கு விற்கப்படுகிறது. இது தங்கம் இதுவரை காணாத வரலாற்று உச்ச விலையாகும்.

3 நாட்களாக ஒரே விலையில் நீடிக்கும் வெள்ளி

வெள்ளியின் விலை கடந்த 12-ம் தேதி கிராம் 110 ரூபாயாக உயர்ந்த நிலையில், 13-ம் தேதி அதே விலையில் நீடித்தது. பின்னர் வார தொடக்க நாளான 14-ம் தேதி கிராமிற்கு 2 ரூபாய் குறைந்து 108 ரூபாயாக விற்பனையானது. அதைத் தொடர்ந்து 15-ம் தேதி மீண்டும் 2 ரூபாய் உயர்ந்து 110 ரூபாயை எட்டியது வெள்ளி.

இந்நிலையில், நேற்று ஒரு கிராம் 110 ரூபாய் என்ற அளவில் நீடித்த வெள்ளியின் விலை, இன்றும் அதே விலையான 110 ரூபாயின் நீடிக்கிறது. அதன்படி, ஒரு கிலோ பார் வெள்ளி 1 லட்சத்து 10 ஆயிரம் ரூபாய்க்கு விற்கப்படுகிறது.

முற்றிய வர்த்தகப் போரால் தங்கம் விலை உயர்வா.?

அமெரிக்கா மற்றும் சீனா இடையே, வர்த்தகப் போர் முற்றி, உச்ச கட்ட பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. இரு நாடுகளும் விடாப்பிடியாக போட்டி போட்டு, மாறி மாறி வரிகளை உயர்த்திய நிலையில், தற்போது அமெரிக்கா சீனாவிற்கு விதித்துள்ள வரி வரலாறு காணாத அளவாக 245 சதவீதத்தில் உள்ளது. இதேபோல், சீனா அமெரிக்காவிற்கு விதித்துள்ள வரி 125%.

இப்படி, வர்த்தகப் போர் முற்றியதால், உலகளவில் பங்குச் சந்தைகள் பெரும் வீழ்ச்சியை சந்தித்து வருகின்றன. இதனால், தங்கத்தின் விலையும் உயர்ந்து வருவதாக கருதப்படுகிறது. இப்படியே போனால், பொதுமக்களின் நிலை என்ன ஆகும் என்ற கேள்வியே மிஞ்சுகிறது.

 

தலைப்பு செய்திகள்

TN Budget 2026: த.வெ.க. பட்ஜெட் 2026: அன்புமணி ராமதாஸ் சுட்டிக்காட்டிய பிளஸ் & மைனஸ்!
TN Budget 2026: த.வெ.க. பட்ஜெட் 2026: அன்புமணி ராமதாஸ் சுட்டிக்காட்டிய பிளஸ் & மைனஸ்!
Gold Rate Today Aug.5th: அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?
அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?
LIVE | Kerala Lottery Result Today (05.08.2026): கேரளா லாட்டரி: அதிர்ஷ்டம் மட்டுமல்ல, ஏழைகளின் உயிர்காக்கும் நிதி! இன்னிக்கு யாருக்கு?
LIVE | Kerala Lottery Result Today (05.08.2026): கேரளா லாட்டரி: அதிர்ஷ்டம் மட்டுமல்ல, ஏழைகளின் உயிர்காக்கும் நிதி! இன்னிக்கு யாருக்கு?
TN Budget 2026: ரீல், ரீல்ஸ் விடும் அரசு.. பட்ஜெட்ல ஒன்னும் இல்ல.. இபிஎஸ், பிரேமலதா கடும் விமர்சனம்!
TN Budget 2026: ரீல், ரீல்ஸ் விடும் அரசு.. பட்ஜெட்ல ஒன்னும் இல்ல.. இபிஎஸ், பிரேமலதா கடும் விமர்சனம்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Embed widget