(Source: ECI/ABP News/ABP Majha)
Gold, Sliver Price: வாரத்தின் முதல் நாளே ஷாக் கொடுத்த தங்கம், வெள்ளி விலை! இன்றைய நிலவரம் இதுதான்!!
தங்கம், வெள்ளி விலை உயர்வா? சரிவடைந்திருக்கிறதா? தெரிந்து கொள்ளலாம் வாங்க!
வர்த்தகத்தின் முதல் நாளான இன்று சந்தையில் தங்கம்,வெள்ளி விலை நிலவரம் என்னவென்று பார்ப்போம்.
சென்னையில் 22 காரட் ஒரு சவரன் ஆபரணத் தங்கத்தின் விலை ரூ.38,648 ஆகவும், ஒரு கிராம் தங்கத்தின் விலை ரூ.4,831 ஆகவும் விற்பனையாகிறது.
24 காரட் தங்கம் ஒரு சவரன் 41,840 ஆகவும், ஒரு கிராம் ரூ.5,230 ஆக விற்பனையாகிறது. இன்றைய நிலவரப்படி, ஆபண தங்கத்தின் விலை ரூ.112 உயர்ந்துள்ளது.
வெள்ளி விலை கிராம் ரூ.66.10க்கு விற்பனையாகிறது. இந்திய சந்தையில் தங்கம், வெள்ளி விலை கடுமையாக உயர்ந்துள்ளது.
ஃபெடரல் ரிசர்வ் தலைவர் ஜெரோம் பவல் ஜூன் மாதத்திற்கான சந்தை எதிர்பார்ப்புகளுக்கு மாறாக, வரவிருக்கும் கூட்டங்களில் 75-அடிப்படை புள்ளி விகித உயர்வை நிராகரித்ததால் தங்கம் மற்றும் வெள்ளி உயர்ந்தது. பொருளாதார மந்தமான சூழ்நிலை ஏற்படும்போது, பொருளாதார துறையைச் சேர்ந்த பங்குச் சந்தைகள் சரிவை நோக்கிப்போகும். அப்படிப்பட்ட சூழலில் தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரிக்கும். இந்த மாதிரியான சூழ்நிலை தொடர்ந்து நீடித்தால் தங்கம் விலை இன்னும் அதிகரிக்கும்.
காரணம் முதலீட்டாளர்களிடம் உள்ள ஒரு பீதியால், தங்கத்தின் மீது முதலீடுகள் அதிகரிக்கும். முதலீடுகள் எப்போதெல்லாம் அதிகரிக்கிறதோ, அப்போதெல்லாம் தங்கத்தின் விலை அதிகரிக்கக்கூடும். அந்த வகையில் உக்ரைன் போர் காரணமாக தொடர்ந்து பங்குச்சந்தைகள் வீழ்ச்சி அடைந்து வருகின்றன. அதனால் தங்கத்தின் விலையும் உயரத் தொடங்கியுள்ளது.
இதனால், கச்சா எண்ணெய், தங்கம் விலை கடுமையாக உயர்ந்து வருகின்றன. இதன் எதிரொலியாக இந்தியாவிலும் தங்கத்தின் விலை உயர்ந்து வருகிறது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்