மேலும் அறிய

Gold rate today : நகைப்பிரியர்களுக்கு குஷி.! தங்கம் விலை மீண்டும் குறைந்தது- ஒரு சவரனுக்கு எவ்வளவு தெரியுமா.?

Gold rate today : தங்கத்தின் விலையானது எதிர்பாராத வகையில் தொடர்ந்து குறைந்து வருகிறது. அந்த வகையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் 3 ஆயிரம் ரூபாய்க்கு மேல் குறைந்து நகைப்பிரியர்களை கொண்டாட வைத்தது. இந்த நிலையில் இன்று தங்கத்தின் விலை சவரனுக்கு 480 ரூபாய் குறைந்துள்ளது.

தங்கம் விலை திடீரென குறைந்தது

தங்கத்தின் மீதான மதிப்பு நாளுக்கு நாள் உயர்ந்து வருகிறது. இதன் காரணமாக எதிர்கால சேமிப்பாக தங்க நகைகளை இந்திய மக்கள் அதிகளவு வாங்கி வருகிறார்கள். அதே நேரம் டாலருக்கு பதிலாக தங்கள் நாட்டின் பணத்தின் மதிப்பை அதிகரிக்கும் வகையில் மத்திய வங்கிகளும் தங்க நகைகளை வாங்கி குவித்தது. இதன் காரணமாக கடந்த ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதத்தில் தங்கத்தின் விலையானது எதிர்பாரா உச்சத்தை தொட்டது. ஒரு சவரன் ஒரு லட்சத்து 34ஆயிரத்தை தாண்டியது. இதனால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி அடைந்த நிலையில், அடுத்த அடுத்த நாட்களில் குறைய தொடங்கியது.

தங்க நகை விலை குறைய காரணம் என்ன.?

இந்த நிலையில் நகைப்பிரியர்களுக்கு அடுத்த அதிர்ச்சியாக ஈரான்- அமெரிக்கா போர் காரணமாக தங்கம் விலை மீண்டும் அதிகரிக்கும் என அச்சப்பட்ட நிலையில் தலைகீழ் மாற்றமாக தங்கம் விலையானது குறைந்து வருகிறது. இது தொடர்பாக நகைப்பிரியர்கள் கூறுகையில்,  போர் காரணமாக முதலீட்டாளர்கள் தங்கத்தின் மீதான முதலீட்டிற்கு பதிலாக கச்சா எண்ணெய்யில் முதலீடு செய்து வருகிறார்கள். இதுவே தங்கம் விலை குறைவிற்கு முக்கிய காரணமாக கூறப்படுகிறது. அதேநேரம் போர் பதற்றம் குறைந்த அடுத்த நாள் முதல் தங்கம் விலை அதிகரிக்க கூடும் எனவும் தெரிவித்துள்ளனர். 

5 நாட்களில் தங்கம் விலை

  • பிப்ரவரி  12 - கிராம் ஒன்றுக்கு 150 ரூபாய் குறைந்து 14,970 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,200 ரூபாய் குறைந்து 1,19,960 ரூபாய்க்கு விற்பனை
  • பிப்ரவரி  13 - கிராம் ஒன்றுக்கு 70 ரூபாய் குறைந்து 14,900ரூபாய்க்கும், சவரனுக்கு 560 ரூபாய் குறைந்து 1,19,200 ரூபாய்க்கு விற்பனை
  • பிப்ரவரி  14- கிராம் ஒன்றுக்கு 140 ரூபாய் குறைந்து 14,760 ரூபாய்க்கும், சவரனுக்கு 1,120 ரூபாய் சரிந்து 1,18,080 ரூபாய்க்கு விற்பனை
  • பிப்ரவரி 15-  தங்கம் வெள்ளி விலையில் மாற்றமில்லை
  • பிப்ரவரி 16 - கிராம் ஒன்றுக்கு 50 ரூபாய் குறைந்து 14,710 ரூபாய்க்கும், சவரனுக்கு 400 ரூபாய் குறைந்து 1,17,680 ரூபாய்க்கும் விற்பனை

இன்றைய தங்கம் விலை

தங்கத்தின் விலையானது தொடர்ந்து குறைந்து நகைப்பிரியர்களை மகிழ்ச்சி அடைய செய்துள்ளது. அந்த வகையில் வாரத்தின் முதல் நாளான நேற்று 400 ரூபாய் குறைந்திருந்தது. இந்த நிலையில் இன்றும் தங்கத்தின் விலையானது குறைந்துள்ளது. இன்று கிராம் ஒன்றுக்கு 60 ரூபாய் குறைந்து 14,650 ரூபாய்கு விற்பனையாகிறது. சவரனுக்கு 480 ரூபாய் குறைந்து 1,17,200 ரூபாய்க்கு விற்பனை செய்யப்படுகிறது. 

வெள்ளி விலை கிராம் ஒன்றுக்கு 4 ரூபாய் உயர்ந்து 280 ரூபாய்க்கும், கிலோ பார் வெள்ளிக்கு 4ஆயிரம் ரூபாய் அதிகரித்து 2 லட்சத்து 80ஆயிரம் ரூபாய்க்கு விற்பனையாகிறது. 

தலைப்பு செய்திகள்

Iran's Revenge Hit List: லிண்ட்சேவை ஈரான் கொன்றதா.? திகிலை கிளப்பிய ஹிட் லிஸ்ட் புகைப்படம்; டாப்பில் ட்ரம்ப், நெதன்யாகு
லிண்ட்சேவை ஈரான் கொன்றதா.? திகிலை கிளப்பிய ஹிட் லிஸ்ட் புகைப்படம்; டாப்பில் ட்ரம்ப், நெதன்யாகு
Annamalai: திமுக-விற்கு புது தலைவலி.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
Annamalai: திமுக-விற்கு புது தலைவலி.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
E V Velu Explain : ஓடி ஒளிந்தேனா.? சென்னையில் கால் வைத்த அடுத்த நொடியே CM விஜய்க்கு ஆதாரத்தோடு பதிலடி கொடுத்த எ.வ.வேலு
ஓடி ஒளிந்தேனா.? சென்னையில் கால் வைத்த அடுத்த நொடியே CM விஜய்க்கு ஆதாரத்தோடு பதிலடி கொடுத்த எ.வ.வேலு
DMK vs TVK : சிஎம் விஜய்யை விடக்கூடாது.! ஆதாரத்தோடு மீண்டும் ஆளுநரை சந்திக்கும் திமுக- இது தான் காரணமா.?
சிஎம் விஜய்யை விடக்கூடாது.! ஆதாரத்தோடு மீண்டும் ஆளுநரை சந்திக்கும் திமுக- இது தான் காரணமா.?

வீடியோ

ஜெயலிதாவின் போயஸ் கார்டன் வீட்டை வாங்கும் விஜய்? ரூ.350 கோடிக்கு டீலிங்?
வியட்நாமில் சுற்றுலா படகு கவிழ்ந்து கோர விபத்து 10 தமிழர்கள் பரிதாப பலி!
எடப்பாடி vs சி.வி.சண்முகம் அடிதடியில் முடிந்த அதிமுக கூட்டம் விழுப்புரத்தில் பரபரப்பு

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Iran's Revenge Hit List: லிண்ட்சேவை ஈரான் கொன்றதா.? திகிலை கிளப்பிய ஹிட் லிஸ்ட் புகைப்படம்; டாப்பில் ட்ரம்ப், நெதன்யாகு
லிண்ட்சேவை ஈரான் கொன்றதா.? திகிலை கிளப்பிய ஹிட் லிஸ்ட் புகைப்படம்; டாப்பில் ட்ரம்ப், நெதன்யாகு
Annamalai: திமுக-விற்கு புது தலைவலி.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
Annamalai: திமுக-விற்கு புது தலைவலி.. ஆட்டத்தை ஆரம்பித்த அண்ணாமலை!
E V Velu Explain : ஓடி ஒளிந்தேனா.? சென்னையில் கால் வைத்த அடுத்த நொடியே CM விஜய்க்கு ஆதாரத்தோடு பதிலடி கொடுத்த எ.வ.வேலு
ஓடி ஒளிந்தேனா.? சென்னையில் கால் வைத்த அடுத்த நொடியே CM விஜய்க்கு ஆதாரத்தோடு பதிலடி கொடுத்த எ.வ.வேலு
DMK vs TVK : சிஎம் விஜய்யை விடக்கூடாது.! ஆதாரத்தோடு மீண்டும் ஆளுநரை சந்திக்கும் திமுக- இது தான் காரணமா.?
சிஎம் விஜய்யை விடக்கூடாது.! ஆதாரத்தோடு மீண்டும் ஆளுநரை சந்திக்கும் திமுக- இது தான் காரணமா.?
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
எ.வ.வேலு சிங்கப்பூருக்கு ஓடிப்போய்ட்டாரா.? உண்மையில் நடந்தது என்ன.? போட்டுடைத்த ஆ.ராசா
Iran Vs America: ஈரானை வெளுக்கும் அமெரிக்கா; “ஒருதலைபட்சமான புரிந்துணர்வு ஒப்பந்தம்“ என ட்ரம்ப்பை சாடும் காலிபாஃப்
ஈரானை வெளுக்கும் அமெரிக்கா; “ஒருதலைபட்சமான புரிந்துணர்வு ஒப்பந்தம்“ என ட்ரம்ப்பை சாடும் காலிபாஃப்
Yamaha Flex Fuel Bike: நார்மல் பெட்ரோலா.? E20-ஆ.? E85-ஆ.? நோ ப்ராப்ளம்.! வந்துவிட்டது யமாஹா FZ ப்ளூ Flex Fuel; விலை, அம்சங்கள் என்ன.?
நார்மல் பெட்ரோலா.? E20-ஆ.? E85-ஆ.? நோ ப்ராப்ளம்.! வந்துவிட்டது யமாஹா FZ ப்ளூ Flex Fuel; விலை, அம்சங்கள் என்ன.?
Iran US Tension: ஹார்முஸ் ஜலசந்தி; அதிபர் கருத்துக்கு எதிராக நிற்கும் ராணுவம்; ஈரானில் நடப்பது என்ன.? அமெரிக்கா வார்னிங்
ஹார்முஸ் ஜலசந்தி; அதிபர் கருத்துக்கு எதிராக நிற்கும் ராணுவம்; ஈரானில் நடப்பது என்ன.? அமெரிக்கா வார்னிங்
Embed widget