ஐபோன் உற்பத்தியில் அசத்தும் காஞ்சிபுரம்! களத்தில் இறங்கிய பாக்ஸ்கான்! வேலைவாய்ப்பு அதிகரிக்குமா?
Foxconn: சென்னை ஒரகடம் பகுதியில் புதிய உற்பத்தி பிரிவை, பாக்ஸ்கான் நிறுவனம் தொடங்க உள்ளது.

காஞ்சிபுரம் மாவட்டம் ஒரகடத்தில் புதிய உற்பத்தி பிரிவை, பாக்ஸ்கான் நிறுவனம் தொடங்க உள்ளது. இதில் ஐபோன்களில் பயன்படுத்தப்படும் வெளிப்புற அடைப்பான்கள், தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது
தமிழ்நாடு ஐபோன் தயாரிப்பும்
ஐபோன் தயாரிக்கும் நிறுவனம், சீனாவில் தனது செல்போன் உதிரிபாகங்கள் மற்றும் செல்போனை தயாரிப்பதை காட்டிலும், இந்தியாவில் தயாரிப்பதற்கு சமீப காலமாக முன்னுரிமை கொடுத்து வருகிறது. குறிப்பாக தமிழ்நாட்டில் ஸ்ரீபெரும்புதூர் பகுதியில், ஐபோன் தயாரிக்கும் தொழிற்சாலை செயல்பட்டு வருகிறது. இங்கு பல்லாயிரக்கணக்கான பெண் தொழிலாளர்கள் பணிபுரிந்து வருவது கூடுதல் சிறப்பாக பார்க்கப்படுகிறது.
Enclosure வெளிப்புற அடைப்பான்கள்
இந்தியாவைப் பொறுத்தவரை பல்வேறு உதிரி பாகங்கள், வெவ்வேறு நிறுவனங்களால் தயார் செய்யப்பட்டு வருகிறது. அந்த வகையில் Enclosure வெளிப்புற அடைப்பான்கள் இந்தியாவில் டாடா நிறுவனம் மட்டுமே தற்போது இந்த உதிரி பாகத்தில் உள்நாட்டிலேயே தயாரித்து வழங்கி வருகிறது. இந்தியாவைப் பொறுத்தவரை, Enclosure வெளிப்புற அடைப்பான்கள் என்ற உதிரி பாகத்தை தயாரிக்கும் ஒரே நிறுவனமாக டாட்டா இருக்கிறது.
பாக்ஸ்கான் நிறுவனம் - Foxconn
பாக்ஸ்கான் நிறுவனம் இந்தியாவில் அதன் செயல்பாடுகளை விரிவாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. அதன் ஒரு பகுதியாக, பாக்ஸ்கான் நிறுவனம் அதன் செயல்பாடுகளை விரிவாக்கம் செய்ய முடிவு எடுத்துள்ளது. அதன் ஒரு பகுதியாக, ஐபோன்களுக்கான Enclosure வெளிப்புற அடைப்பான்கள் என்னும் உடற்பாக்கத்தை தயாரிக்க திட்டமிடப்பட்டுள்ளது.
ஐபோன் உற்பத்தி தொழிற்சாலை
Enclosure வெளிப்புற அடைப்பான்கள் தயாரிப்பதற்காக காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் அடுத்துள்ள ஒரகடத்தில், பாக்ஸ்கான் நிறுவனம் புதிய உற்பத்தி பிரிவை தொடங்க உள்ளது. ஸ்ரீபெரும்புதூரில் உள்ள அதன் " டிஸ்ப்ளே மாட்யூல்" தயாரிப்பு ஆலையில் அமைப்பதற்கான பணிகள் தற்போது துவங்கி உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
இதன்மூலம் ஒட்டுமொத்த ஐபோன் உற்பத்தி மதிப்பு 3 சதவீதம் வரை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது மிகக் குறைந்த வளர்ச்சியாக பார்க்கப்பட்டாலும், சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தக்கூடிய வளர்ச்சியாக பார்க்கப்படுகிறது. கடந்த நிதியாண்டில் மட்டும் 1.5 லட்சம் கோடி ரூபாய் மதிப்பிலான, ஆப்பிள் ஐபோன்கள் இந்தியாவிலிருந்து வெளிநாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
வேலைவாய்ப்புகள் உருவாகுமா ?
புதிய உற்பத்தி பிரிவு தொடங்கப்பட உள்ளதால், பாக்ஸ்கான் தொழிற்சாலையில் நேரடியாகவோ மற்றும் மறைமுகமாகவும் பல்வேறு வேலைவாய்ப்புகள் உருவாகும் என எதிர்பார்க்கப்படுகிறது.





















