Japan PM Murder Echo: முன்னாள் ஜப்பான் பிரதமர் படுகொலை.. இந்திய பங்குச் சந்தைகளில் எதிரொலி
முன்னாள் ஜப்பான் பிரதமர் படுகொலை செய்யப்பட்டது இந்திய பங்குச்ச் சந்தைகளில் எதிரொலித்தது

இந்திய பங்குச் சந்தை குறியீடுகள்,அதிகரிப்பு
இந்த வாரத்தில் இந்திய பங்குச் சந்தைகள் குறியீடான சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி-ன் புள்ளிகள் சற்று அதிகரித்து முடிவடைந்தன. மேலும் பங்குச் சந்தைகள் குறியீடானது தொடர்ந்து மூன்றாவது நாளாக அதிகரித்து முடிவடைந்தன. தேசிய பங்குச் சந்தை குறியீடான சென்செக்ஸ் 81 புள்ளிகள் அதிகரித்து 16,221 புள்ளிகளாக உள்ளது. மும்பை சந்தை குறியீடான 427.49 புள்ளிகள் அதிகரித்து 54,482 புள்ளிகளாக உள்ளது.
Sensex climbs 303.38 points to end at 54,481.84; Nifty advances 87.70 points to 16,220.60
— Press Trust of India (@PTI_News) July 8, 2022
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ப்டுகொலை எதிரொலி:
ஜப்பானின் முன்னாள் பிரதமர் ஷின்சோ அபேயின் படுகொலைக்கு பின்னர், ஆசிய சந்தைகளில் பங்குகள் அதன் தாக்கம் ஏற்பட்டது. இதனால அதிகரித்து சென்ற பங்குச் சந்தைகள் சற்று சரிய ஆரம்பித்தன. இதில் அமெரிக்கவின் பங்குகளும் வீழ்ச்சியடைந்ததாக கூறப்படுகிறது.
டாடா மோடாரின் பங்குகள் அதிகரிப்பு:
டாடா மோடார்ஸ், எல் & டி, பவர் கிரிட், எண்டிபிசி, எஸ்பிஐ லைஃப்-ன் ஆகியவற்றின் பங்குகள் அதிகரித்து காணப்பட்டன. மேலும் எல்ஐசி-ன் பங்கின் விலை 1.38 சதவீதம் அதிகரித்து 707.80 ரூபாயாக உள்ளது. ஆனால் டாடா ஸ்டீல், மாருதி, டிசிஎஸ், ஏசியன்ஸ் பெயிண்ட்ஸ்,ஹச்சிஎல் உள்ளிட்டவைகளின் பங்குகள் வீழ்ச்சியை சந்தித்தன.
View this post on Instagram
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்
தலைப்பு செய்திகள்
ட்ரெண்டிங் செய்திகள்

