(Source: ECI/ABP News/ABP Majha)
FCI: கொள்முதல், பொது விநியோக மேலாண்மைக்கான மூலதனமாக ரூ.1.45 லட்சம் கோடி தேவை - உணவு கழகம்
2023-24 ஆம் நிதியாண்டில் கொள்முதல் மற்றும் பொது விநியோக மேலாண்மைக்கான குறுகிய கால இயக்க மூலதனமாக ரூ.1.45 லட்சம் கோடி தேவைப்படுவதாக இந்திய உணவுக் கழகம் மதிப்பிட்டுள்ளது
2023-24 ஆம் நிதியாண்டில் கொள்முதல் மற்றும் பொது விநியோக மேலாண்மைக்கான குறுகிய கால இயக்க மூலதனமாக ரூ.1.45 லட்சம் கோடி தேவைப்படுவதாக இந்திய உணவுக் கழகம் மதிப்பிட்டுள்ளது. இந்த மதிப்பீடு கடந்த 2022-23 ஆம் நிதியாண்டில் 89,425 கோடியாக இருந்தது என்றும் அது தெரிவித்துள்ளது.
2023-24 ஆம் நிதியாண்டில் உணவு தானிய கொள்முதல் அதிகரித்து காணப்படும் என்று கணக்கிடப்பட்டிருப்பதாகவும், அதன் அடிப்படையில் பொது விநியோகத் திட்டத்திற்கு ஆகும் செலவினத் தொகை மற்றும் மானியம் இந்த நிதியாண்டில் அதிகமாக இருக்கும் என்றும் கணக்கிடப்பட்டுள்ளது.
இந்திய உணவுக் கழகம், உணவு தானியங்களை எடுத்துச் செல்வதற்கான போக்குவரத்து செலவு, கிடங்குகள் மேலாண்மை போன்றவற்றுக்கான செலவினத் தொகை அதிகரித்திருப்பதோடு, வங்கிகளிடமிருந்து பெறப்பட்ட குறுகிய கால கடனை திருப்பி செலுத்துதல் போன்றவற்றுக்கு இந்தத் தொகை செலவிடப்படுகிறது.