மேலும் அறிய

8.5% interest on EPF deposits: வருங்கால வைப்பு நிதிக்கு 8.5 சதவிகிதம் வட்டி வழங்க மத்திய அரசு அனுமதி!

2021 நிதியாண்டில், வருங்கால வைப்பு நிதி நிறுவனம் தனது கடன் சார்ந்த முதலீடு,ஈக்விட்டி முதலீட்டில் இருந்து பெறப்பட்ட நிகர லாபத்தின் விளைவாக கூடுதல் வட்டி விகிதம் பரிந்துரைக்கப்பட்டுள்ளது.

தீபாவளி பண்டிகை காலத்தை முன்னிட்டு, 2020-21 நிதியாண்டில் பொது வருங்கால வைப்பு நிதிக்கு 8.5 சதவிகிதம் வழங்க மத்திய நிதி அமைச்சகம் அனுமதி அளித்துள்ளது. 

2021 நிதியாண்டில், வருங்கால வைப்பு நிதி நிறுவனம் தனது கடன் சார்ந்த முதலீடு மற்றும் ஈக்விட்டி முதலீட்டில் இருந்து பெறப்பட்ட வருமானம் ஆகியவற்றின் விளைவாக வட்டி விகிதம் பரிந்துரைக்கப்படுகிறது.

அரசு நெறிமுறைகளின் படி, வருங்கால வைப்பு நிதி தனது மொத்த முதலீட்டு தொகுப்பில் 85 சதவிகிதத்தை கடன் சார்ந்த முதலீடாகவும், 15 சதவிகிதத்தை, நிப்டி 50, சென்சக்ஸ்   மற்றும் ஐஓசி, எஸ்பிஐ, பிபீசிஎல், கோல் இந்தியா, உள்ளிட்ட பொதுத் துறையைச் சேர்ந்த 22 நிறுவனங்களின் பங்குகள் அடங்கிய பாரத்-22 இ.டி.எஃப் தொகுப்பில் (Bharat 22 Indices) முதலீடு செய்து வருகிறது. மேலும், இது தனிநபர் நிருவனங்களின் முதலீடு செய்வதில்லை.              

முன்னதாக, கொரோனா தொற்று காலத்தில், பணியாளர்கள் கொவிட்-19 முன்பணம் பெற்றுக் கொள்ளும் வசதியை இபிஎப்ஓ அறிமுகம் செய்தது. பலர் உடல்நிலை பாதிப்புக்கான உரிமைகளையும் கோரி விண்ணப்பம் செய்தனர். கொரோனா தொற்று கட்டுபாடுகளுக்கு இடையேயும், கடந்த ஏப்ரல் முதல் ஆகஸ்ட் மாதம் வரை 94.41 லட்சம் பேரின் விண்ணப்பங்களை ஏற்று ரூ.35,445 கோடி நிதியை உறுப்பினர்களுக்கு இபிஎப்ஓ வழங்கியது. 

மேலும்,  ஜூன் மாதம் வெளியிடப்பட்ட பணியாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் தரவுகளின்படி, 2021 ஏப்ரல் மாதம் சுமார் 12.76 லட்சம் புதிய சந்தாதாரர்கள் இணைந்துள்ளனர். கொவிட்-19 பெருந்தொற்றுக்கு இடையிலும், 11.22 லட்சம் நிகர உறுப்பினர்களை இந்த நிறுவனம் இணைத்து, சந்தாதாரர்களின் எண்ணிக்கையில் 13.73%-ஐ அதிகரித்துள்ளது. மார்ச் மாதத்துடன் ஒப்பிடுகையில் இந்த நிறுவனத்தில் இருந்து வெளியேறியவர்களின் எண்ணிக்கை 87,821 ஆகக் குறைந்து, மீண்டும் இணைந்துள்ளவர்களின் எண்ணிக்கை 92,864 ஆக அதிகரித்துள்ளது.

இந்த மாதத்தில் புதிதாக சேர்ந்துள்ள 12.76 லட்சம் சந்தாதாரர்களில் சுமார் 6.89 லட்சம் புதிய உறுப்பினர்கள், பணியாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் சமூக பாதுகாப்பு வரம்பிற்குள் முதன் முறையாக இணைந்துள்ளனர். சுமார் 5.86 லட்ச நிகர சந்தாதாரர்கள் வெளியேறி, பணியாளர் வருங்கால வைப்பு நிதி நிறுவனத்தின் வரம்பிற்குள் இயங்கும் வேறு நிறுவனங்களில் இணைந்து மீண்டும் இந்த நிறுவனத்தில் சேர்ந்துள்ளனர். 

ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்.

பேஸ்புக் பக்கத்தில் தொடர

ட்விட்டர் பக்கத்தில் தொடர

யூடிபில் வீடியோக்களை காண

தலைப்பு செய்திகள்

TN Budget 2026: த.வெ.க. பட்ஜெட் 2026: அன்புமணி ராமதாஸ் சுட்டிக்காட்டிய பிளஸ் & மைனஸ்!
TN Budget 2026: த.வெ.க. பட்ஜெட் 2026: அன்புமணி ராமதாஸ் சுட்டிக்காட்டிய பிளஸ் & மைனஸ்!
Gold Rate Today Aug.5th: அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?
அடப்பாவமே.! தங்கம் விலை ஒரே நாள்ல இவ்ளோ உயர்ந்துடுச்சே.! இப்போ விலை எவ்ளோ தெரியுமா.?
LIVE | Kerala Lottery Result Today (05.08.2026): கேரளா லாட்டரி: அதிர்ஷ்டம் மட்டுமல்ல, ஏழைகளின் உயிர்காக்கும் நிதி! இன்னிக்கு யாருக்கு?
LIVE | Kerala Lottery Result Today (05.08.2026): கேரளா லாட்டரி: அதிர்ஷ்டம் மட்டுமல்ல, ஏழைகளின் உயிர்காக்கும் நிதி! இன்னிக்கு யாருக்கு?
TN Budget 2026: ரீல், ரீல்ஸ் விடும் அரசு.. பட்ஜெட்ல ஒன்னும் இல்ல.. இபிஎஸ், பிரேமலதா கடும் விமர்சனம்!
TN Budget 2026: ரீல், ரீல்ஸ் விடும் அரசு.. பட்ஜெட்ல ஒன்னும் இல்ல.. இபிஎஸ், பிரேமலதா கடும் விமர்சனம்!

வீடியோ

தமிழ்நாட்டுக்குத் தலைகுனிவு? அசிங்கப்படுத்திய DK சிவகுமார் வாயைதிறங்க விஜய்
Cauvery Issue :
Kayalvizhi Alagiri Arrest : மு.க அழகிரி மகள் கைது! சென்னை போலீஸ் அதிரடி.. வெளியான அதிர்ச்சி வீடியோ
இர்பானுக்கு புது சிக்கல் சுகாதாரத்துறை நடவடிக்கை! விரைவில் கைதாகிறாரா?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
CM Vijay: பட்ஜெட் கூட்டத்தொடர் முடியட்டும்... பறிபோகப்போகும் பதவி..! அச்சத்தில் அமைச்சர்கள்!
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
Seeman: தவெக பட்ஜெட் வெற்று அறிக்கை... வெட்கக்கேடு - விஜய் அரசின் நிதிநிலை அறிக்கை விமர்சித்த சீமான்
MK Stalin on Budget: ‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
‘'Blast Blast'-ஆக மக்கள் எதிர்பார்த்த பட்ஜெட்.. ‘Waste Waste' ஆக இருக்கு.!“ - விளாசிய மு.க. ஸ்டாலின்
Hyundai Creta EV On EMI: 475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
475 கிமீ ரேஞ்ச் தரும் ஹூண்டாய் கிரெட்டா EV கார ரூ.2 லட்சம் முன்பணத்தில் வாங்கினால் EMI எவ்வளவு வரும்.?
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
தஞ்சை அரண்மனையில் தமிழக ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர்!
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
ஒரே சார்ஜில் 150 கி.மீட்டர் மைலேஜ்.. வரப்போகிறது Ather Konarc இ ஸ்கூட்டர்! விலை எவ்ளோ?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
Aadi Krithigai 2026: அரோகரா..! ஆடிக்கிருத்திகை நாளையா? நாளை மறுநாளா? விரதம் இருப்பது எப்படி?
iPhone 17 Pro Max Discount: ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
ஏங்க, ஐபோன் 17 ப்ரோ மேக்ஸ்ல ரூ.17,000 தள்ளுபடிங்க.! அருமையான வாய்ப்ப விட்றாதீங்க; எங்க வாங்குறது.?
Embed widget