மேலும் அறிய

TN Budget 2021: ஜனரஞ்சகமா? பற்றாக்குறையா? - எப்படி இருக்கிறது பி.டி.ஆர். பட்ஜெட்

உண்மையிலேயே தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் பட்ஜெட் அமைந்துள்ளதா? பொருளாதார வல்லுநர்களிடம் கேட்டோம்...

தமிழ்நாடு அரசின் இந்த ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதியமைச்சர் பி.டி.ஆர்.பழநிவேல் தியாகராஜன் இன்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். பட்ஜெட்டின் முக்கிய அம்சமாக சட்டமன்ற வரலாற்றில் முதன் முறையாக காகிதமில்லா பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.இந்த திருத்திய வரவு செலவு அறிக்கை இந்த நிதியாண்டின் எஞ்சிய 6 மாதங்களுக்கு பொருந்தும் என நிதியமைச்சர் குறிப்பிட்டார். பெட்ரோல் மீதான மாநில அரசின் வரி 3 ரூபாய் குறைக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. அரசின் கடன் சுமையை சரி செய்து நிதிநிலையை மேம்படுத்துவது தாங்கள் அளித்த வாக்குறுதிகளில் ஒன்று;  தேர்தல் வக்குறுதிகளுக்கு முன்னுரிமை அளித்து படிப்படியாக நிறைவேற்றப்படும் என நிதியமைச்சர் சட்டமன்றத்தில் குறிப்பிட்டார். உண்மையிலேயே தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றும் வகையில் பட்ஜெட் அமைந்துள்ளதா? பொருளாதார வல்லுநர்களிடம் கேட்டோம்...

TN Budget 2021: ஜனரஞ்சகமா? பற்றாக்குறையா? - எப்படி இருக்கிறது பி.டி.ஆர். பட்ஜெட்
பொருளாதார வல்லுநர் ஆனந்த் சீனிவாசன் கூறுகையில்,’இதை ஒரு ஜனரஞ்சகமான பட்ஜெட்டாகப் பார்க்கிறேன். முடிந்தவரை அனைத்து தரப்பினருக்குமான பட்ஜெட்டாக இது அமைந்துள்ளது. குடிநீர் மற்றும் தூய்மைப்பணிக்கான முக்கியத்துவம் பற்றி பட்ஜெட்டில் பேசப்பட்டுள்ளது.மேலும் 1 லட்சத்துக்கும் அதிகமான மக்கள் தொகை இருக்கும் ஊர்களில் தூய்மைப்பணித் திட்டம் தொடங்கப்படும் எனச் சொல்லப்பட்டிருக்கிறது. வரவேற்கத்தக்க திட்டம் என்றாலும் அது ஒரு வருடத்தில் முடியக் கூடிய காரியமில்லை. குடிசைகளற்ற தமிழ்நாடு பட்ஜெட்டில் முக்கிய அம்சமாக இருக்கிறது. நகர்புற மேம்பாட்டுக்கு பட்ஜெட்டில் நிறைய திட்டங்கள் கொண்டுவரப்பட்டுள்ளது. ஒன்பது இடத்தில் புதிய தொழிற்பேட்டைகள், விழுப்புரம் உள்ளிட்ட நான்கு இடங்களில் டைடல் பார்க் உள்ளிட்டவை அறிமுகமாகின்றன.

இனி பிழைப்பு தேடி சென்னைக்கு வரவேண்டிய அவசியமில்லை. இதுதவிர கடலோர மாநிலம் என்பதால் காலநிலை மாற்றத்துக்கு முக்கியத்துவம் கொடுக்கப்பட்டு பட்ஜெட் இயற்றப்பட்டுள்ளது. கொரோனா தொற்று காலத்தில் எதிர்பாராத அம்சமாக பெட்ரோல் வரி மூன்று ரூபாய் குறைக்கப்பட்டுள்ளது.  சென்னையில்  போக்குவரத்து நெரிசலைக் கட்டுப்படுத்த மூன்று முக்கிய இடங்களில் மேம்பாலங்கள் வரவிருக்கின்றன.  நிறுவன மோசடிகளைத் தடுக்க மறு டெண்டர் கொண்டுவரப்படும் என்றும் பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.இவை அனைத்துமே வரவேற்கக்கூடிய அம்சம்தான்’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

TN Budget 2021: ஜனரஞ்சகமா? பற்றாக்குறையா? - எப்படி இருக்கிறது பி.டி.ஆர். பட்ஜெட்
பாரதிய ஜனதா கட்சியின் அறிவுசார் பிரிவு ஆலோசகர் பேராசிரியர் ராஜலட்சுமி கூறுகையில், "சமாதான் திட்டத்தின் கீழ் வராத வரியை மீட்போம் எனக் கூறியிருக்கிறார்கள். கருணாநிதி பெயரில் மூன்று திட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. அது முழுக்க முழுக்க திமுகவை பிரபலப்படுத்துவதற்காகக் கொண்டுவரப்பட்டிருக்கும் திட்டம். அண்ணாவின் பெயரில் ஒரு திட்டம் கூட இல்லை, அவரை பட்ஜெட்டில் முழுவதுமாக மறந்துவிட்டார்கள். நமக்கு நாமே திட்டம் ஏற்கெனவே இதே அரசால் கொண்டு வரப்பட்டதுதான். அது கட்சிகாரர்களுக்காக உருவாக்கப்பட்ட திட்டம்.பெண்களுக்கு ஆயிரம் ரூபாய் கொடுப்பதும் புதிய பட்டியல் ஒன்று உருவாக்கி அதன்படி கொடுக்கப்படும் என்கிறார்கள். அது எப்போது செயல்படுத்தப்படும் எனத் தெரியவில்லை.

மோசடி நிறுவனங்கள் மீதான நடவடிக்கை என்பது அதிமுகவுக்கு எதிராகக் கொண்டுவரப்பட்டிருக்கும் திட்டம். டிஜிட்டல் முறை கல்வி ஏற்கனவே பெருந்தொற்று காலத்தில் நடைமுறையில் இருக்கிறது. இதில் ஒன்றாம் வகுப்பு முதல் டிஜிட்டல் கல்வி எனப் புதிய திட்டம் போல அறிமுகம் செய்கிறார்கள். ஏற்கெனவே மடிகணினி கடந்த ஆட்சி காலத்தில் மாணவர்களுக்கு இலவசமாகக் கொடுக்கப்பட்டது.அதை அப்டேட் செய்து தற்போது ஒன்றியவாரியாகப் பள்ளிகளுக்கு 40 டேப் (Tab) அளிப்பதாகச் சொல்லியிருக்கிறார்கள். கீழடி அகழ்வாராய்ச்சிக்கான நிதி ஒதுக்கீடு மட்டும் வரவேற்க்கக் கூடிய விஷயமாக இருக்கிறது. மற்றபடி இது  பற்றாக்குறை பட்ஜெட்தான். இது வெள்ளை அறிக்கை விடும்போதே எதிர்பார்க்கப்பட்டது" எனக் குறிப்பிட்டுள்ளார். 

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

HMPV Virus China | மீண்டும் LOCKDOWN? சீனாவிலிருந்து அடுத்த பயங்கரம் அச்சுறுத்தும் HMPV வைரஸ்! INDIASU Venkatesan Hospitalized : சு. வெங்கடேசனுக்கு நெஞ்சுவலி  தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிTamilisai Delhi vist | தமிழைசையின் டெல்லி முகாம்!பெரிய பதவிக்கு தூண்டில் இதற்காகதான் காய் நகர்தினாராபிரியும் நட்சத்திர ஜோடி?  தனஸ்ரீ - சஹல் DIVORCE?  UNFOLLOW ! DELETE!

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
பயங்கர பிளானா இருக்கே! விசிக Mission ON.. அடுத்து கம்யூனிஸ்ட்களுக்கு ரூட்டு போடும் விஜய்!
CPI-M: சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
சிபிஎம் புதிய மாநில செயலாளராக பெ.சண்முகம் தேர்வு.! யார் இவர்?
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்..   உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
ஒட்டுண்ணி பூச்சி கடித்தால்.. உடல் உறுப்புகள் பாதிப்பு..எச்சரிக்கை விடுக்கும் மருத்துவர்கள்
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
எங்கே போனது தனி மனித சுதந்திரம்! கல்யாணமாகாத தம்பதிகளுக்கு அனுமதி மறுப்பு.. OYO ரூல்ஸ்க்கு எதிர்ப்பு!
"பிரியங்கா காந்தியின் கன்னங்கள்.." சர்ச்சையாக பேசிய பாஜக தலைவர்!
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
நான் என்ன உங்க அடிமையா ? வெற்றிமாறனை தாக்கினாரா ராஜீவ் மேனன் ?
"ரெக்க கட்டி பறக்குதடி" அண்ணாமலை ரஜினி போன்று சைக்கிள் ஓட்டிய மன்சுக் மாண்டவியா!
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
CM Stalin: போடு வெடிய - ஒரு மில்லியன் அமெரிக்க டாலர்களை பரிசாக அறிவித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்
Embed widget