DA Hike : அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4% உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் - அமைச்சர் பியூஷ் கோயல்
DA Hike News in Tamil: அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி 4% உயர்த்த மத்திய அரசு ஒப்புதல் அளித்துள்ளது.
ஜனவரி 1, 2024 முதல் அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 4% உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதற்கான அறிவிப்பை மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் அறிவித்தார்.
மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள திட்டங்கள் தொடர்பாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ள திட்டங்கள் குறித்து தெரிவித்தார். அப்போது தெரிவித்ததாவது, அரசு ஊழியர்களுக்கான அகவிலைப்படி மற்றும் ஓய்வூதியதாரர்களுக்கான அகவிலைப்படியை 4% உயர்த்த மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது. இதன் மூலம் சுமார் 50 லட்சம் ஊழியர்களும், 68 லட்சம் ஓய்வூதியர்களும் பயனடைவார்கள்.
#WATCH | The Union Cabinet has approved the
— ANI (@ANI) March 7, 2024
Minimum Support Price (MSP) for Raw Jute for 2024-25 season at Rs 5,335 per quintal, an increase of Rs 285 per quintal over the previous season, announces Union Minister Piyush Goyal. pic.twitter.com/P9hNkemmPF
2024-25 பருவத்திற்கான சணல் குறைந்தபட்ச ஆதரவு விலையானது, குவிண்டாலுக்கு முந்தைய பருவத்தை விட குவிண்டாலுக்கு ரூ.285 அதிகரித்து மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
10,000 கோடி ரூபாய் செலவில் தேசிய அளவிலான இந்தியா ஏஐ நுட்பம் தொடர்பான மேம்பாட்டுக்கு, மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளதாக மத்திய அமைச்சர் பியூஷ் கோயல் தெரிவித்துள்ளார்.