மேலும் அறிய

Underwater Metro: ஆற்றுக்கு அடியில் 16மீட்டர் ஆழத்தில், 45 நொடிகள் - நீருக்கடியில் நாட்டின் முதல் மெட்ரோ சேவையை தொடங்கி வைத்த பிரதமர் மோடி

Kolkata Underwater Metro: நீருக்கடியிலான நாட்டின் முதல் மெட்ரோ ரயில் சேவை திட்டத்தை, கொல்கத்தாவில் பிரதமர் மோடி தொடங்கி வைத்தார்.

Kolkata Underwater Metro: கொல்கத்தாவில் உள்ள நீருக்கடியிலான நாட்டின் முதல் மெட்ரோ ரயில் சேவை திட்டத்தில், விரைவில் பயணிகள் சேவை தொடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

நீருக்கடியிலான மெட்ரோ ரயில் சேவை:

இந்தியாவின் முதல் நீருக்கடியிலான மெட்ரோ ரயில் சுரங்கப்பாதையை பிரதமர் நரேந்திர மோடி கொல்கத்தாவில் தொடங்கி வைத்தார். தொடர்ந்து, பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து மெட்ரோ ரயிலில் பயணித்தார்.  ஹூக்ளி ஆற்றின் கீழ் கட்டப்பட்ட மெட்ரோ சுரங்கப்பாதை கொல்கத்தா மெட்ரோவின் கிழக்கு-மேற்கு கேர்டாரின் ஒரு பகுதியாகும். இந்த பிரிவு ஹவுரா மைதானத்தை எஸ்பிளனேடுடன் இணைக்கிறது. திறப்பு விழா இன்று நடைபெற்ற நிலையில், பயணிகள் சேவைகள் பிற்காலத்தில் தொடங்கும், என்று CPRO மெட்ரோ ரயில்வே கௌசிக் மித்ரா தெரிவித்துள்ளார்.

சிறப்பம்சங்கள் என்ன?

  • கிழக்கு-மேற்கு மெட்ரோ வழித்தடத்தின் ஹவுரா மைதானம்-எஸ்பிளனேட் காரிடாரானது, ஹவுரா மெட்ரோ நிலையத்தில் இந்தியாவின் ஆழமான மெட்ரோ நிலையத்தைக் கொண்டிருக்கும்.
  • ஹவுரா மைதான் மற்றும் எஸ்பிளனேட் இடையே 4.8 கிலோமீட்டர் நீளத்திற்கு பரவியுள்ள இந்த இருப்புப் பாதை, கிழக்கு-மேற்கு மெட்ரோ நடைபாதையின் ஒரு முக்கியப் பகுதியை உருவாக்குகிறது. தகவல் தொழில்நுட்ப மையமான சால்ட் லேக் செக்டர் V போன்ற முக்கிய பகுதிகளை இணைக்கிறது.
  • கிழக்கு-மேற்கு மெட்ரோவின் 16.6 கிலோமீட்டர்களில், 10.8 கிலோமீட்டர் பாதை நிலத்திற்கு அடியில் அமைக்கப்பட்டது. இதில் ஹூக்ளி ஆற்றின் அடியில் உள்ள நிலத்தடி சுரங்கப்பாதையும் அடங்கும்
  •  ஹவுரா மைதானம் -எஸ்பிளனேட் மெட்ரோ பாதை இடையே ஹூக்ளி நதியின் நீர் மட்டத்தில் இருந்து 16 மீ ஆழத்தில் 520 மீ தூரத்துக்கு மெட்ரோ ரயில் பாதை வழித்தடம் அமைக்கப்பட்டுள்ளது. இந்த பாதையை மெட்ரோ ரயில் வெறும் 45 நொடிகளில் கடந்து செல்லும்
  • மெட்ரோ ரயில் சேவையின் இந்த பிரிவு, ஆறு நிலையங்களைக் கொண்டுள்ளது. அவற்றில் மூன்று சுரங்கப்பாதை நிலையங்கள் ஆகும். இவை பயணிகளுக்கு மேம்பட்ட அணுகலை உறுதியளிக்கிறது. அதோடு,  நகரத்தின் பரபரப்பான பகுதிகளை எளிதில் அணுக வழிசெய்கிறது.
  • ஏப்ரல் 2023 இல், இந்தியாவில் முதல் முறையாக நீர்மட்டத்திற்கு கீழே 32 மீட்டர் சுரங்கப்பாதை வழியாக ஹூக்ளி ஆற்றின் அடியில் ஒரு சோதனை பயணம் செய்யப்பட்டது.

  • கிழக்கு-மேற்கு மெட்ரோ வழித்தடத்திற்கான பணி 2009 இல் தொடங்கியது மற்றும் ஹூக்ளி ஆற்றின் கீழ் சுரங்கப்பாதை அமைக்கும் பணி 2017 இல் தொடங்கியது.

  • இந்தத் திட்டம் போக்குவரத்துத் தேவைகளை நிவர்த்தி செய்வது மட்டுமல்லாமல், கொல்கத்தாவில் நீண்ட காலமாக நிலவும் போக்குவரத்து நெரிசல் மற்றும் காற்று மாசுபாட்டையும் சமாளிக்கும்.

  • கொல்கத்தா மெட்ரோ ஜூன் அல்லது ஜூலையில் சால்ட் லேக் செக்டார் V மற்றும் ஹவுரா மைதானம் இடையே முழு கிழக்கு-மேற்கு பாதைக்கான வணிக நடவடிக்கைகளைத் தொடங்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
  • இது தவிர, கொல்கத்தாவில் கவி சுபாஷ்-ஹேமந்தா முகோபாத்யாய் மற்றும் தரதாலா-மஜெர்ஹாட் மெட்ரோ பிரிவுகளையும் பிரதமர் மோடி இன்று திறந்து வைத்தார். 
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 14 மாவட்டங்களில் மழை: எங்கெல்லாம்? - வானிலை மையம் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 14 மாவட்டங்களில் மழை: எங்கெல்லாம்? - வானிலை மையம் எச்சரிக்கை
"100 கோடி கேக்குறாங்க" அதிமுகவுடன் டீல் பேசும் கட்சிகள்.. ஓப்பனாக பேசிய திண்டுக்கல் சீனிவாசன்!
மாத உதவித்தொகையுடன் ஆராய்ச்சி செய்யலாம்; தமிழ்நாடு ஆவணக் காப்பகம் அழைப்பு- என்ன தகுதி?
மாத உதவித்தொகையுடன் ஆராய்ச்சி செய்யலாம்; தமிழ்நாடு ஆவணக் காப்பகம் அழைப்பு- என்ன தகுதி?
TVK DMK: தவெக நிர்வாகிகளுக்கு ஸ்கெட்ச், களமிறங்கிய உளவுத்துறை -  விஜயின் அடிமடியில் கைவைத்த திமுக?
TVK DMK: தவெக நிர்வாகிகளுக்கு ஸ்கெட்ச், களமிறங்கிய உளவுத்துறை - விஜயின் அடிமடியில் கைவைத்த திமுக?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Keerthi Suresh Wedding : கீர்த்தி சுரேஷ்-க்கு டும் டும் 15 வருடம் காதலா!காதலன் யார் தெரியுமா?Tiruchendur Elephant Attack : உணவு கொடுத்த பக்தர்!மிதித்து கொன்ற கோவில் யானை..Karur Women Crying : ’’Dress-லாம் கிழிச்சு அடிக்கிறாங்க’’கைக்குழந்தையுடன் கதறும் தாய்!NTK cadre resigns : நாதகவின் முக்கிய விக்கெட்!’’சீமான் தான் காரணம்’’பரபரக்கும் சேலம்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 14 மாவட்டங்களில் மழை: எங்கெல்லாம்? - வானிலை மையம் எச்சரிக்கை
தமிழ்நாட்டில் இரவு 7 மணிக்குள் 14 மாவட்டங்களில் மழை: எங்கெல்லாம்? - வானிலை மையம் எச்சரிக்கை
"100 கோடி கேக்குறாங்க" அதிமுகவுடன் டீல் பேசும் கட்சிகள்.. ஓப்பனாக பேசிய திண்டுக்கல் சீனிவாசன்!
மாத உதவித்தொகையுடன் ஆராய்ச்சி செய்யலாம்; தமிழ்நாடு ஆவணக் காப்பகம் அழைப்பு- என்ன தகுதி?
மாத உதவித்தொகையுடன் ஆராய்ச்சி செய்யலாம்; தமிழ்நாடு ஆவணக் காப்பகம் அழைப்பு- என்ன தகுதி?
TVK DMK: தவெக நிர்வாகிகளுக்கு ஸ்கெட்ச், களமிறங்கிய உளவுத்துறை -  விஜயின் அடிமடியில் கைவைத்த திமுக?
TVK DMK: தவெக நிர்வாகிகளுக்கு ஸ்கெட்ச், களமிறங்கிய உளவுத்துறை - விஜயின் அடிமடியில் கைவைத்த திமுக?
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே… இன்னும் 2 நாள்தான்; டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன தெரியுமா?
TNPSC Group 4: குரூப் 4 தேர்வர்களே… இன்னும் 2 நாள்தான்; டிஎன்பிஎஸ்சி சொன்னது என்ன தெரியுமா?
சென்னையில் நடிகையை டார்ச்சர் செய்த போதை ஆசாமி..‌ பிடித்துக்கொடுத்த பாஜக பிரமுகர் - நடந்தது என்ன?
சென்னையில் நடிகையை டார்ச்சர் செய்த போதை ஆசாமி..‌ பிடித்துக்கொடுத்த பாஜக பிரமுகர் - நடந்தது என்ன?
Kasthuri: நடிகை கஸ்தூரிக்கு ஜெயிலில் A வகுப்பு சிறையா? கொசுக்கடி தாங்கல போல!
Kasthuri: நடிகை கஸ்தூரிக்கு ஜெயிலில் A வகுப்பு சிறையா? கொசுக்கடி தாங்கல போல!
Post Office Money Double Scheme: ரூ.5 வெச்சா ரூ.10, ரூ.100 போட்டா ரூ.200 - பணத்தை இரட்டிப்பாக்கும் தபால் நிலைய சேமிப்பு திட்டம்
Post Office Money Double Scheme: ரூ.5 வெச்சா ரூ.10, ரூ.100 போட்டா ரூ.200 - பணத்தை இரட்டிப்பாக்கும் தபால் நிலைய சேமிப்பு திட்டம்
Embed widget