மேலும் அறிய

அச்சச்சோ...! இனி கிரெடிட் கார்டு பில்லை இப்படியெல்லாம் கட்ட முடியாது:  ஆர்.பி.ஐ அதிரடி திட்டம்

புதிய ஒழுங்குமுறைகளை ரிசர்வ் வங்கி அறிவித்துள்ளது. அதன்படி, இனி ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பில்லிங் நெட்வொர்க் வழியாக மட்டுமே கிரிடிட் கார்டு பில் கட்ட முடியும்.

கிரெடிட் கார்டு பில் கட்டுவதற்கு ரிசர்வ் வங்கி சில ஒழுங்குமுறைகளை நடைமுறைப்படுத்த உள்ளது. அதன்படி, இனி ரிசர்வ் வங்கி கட்டுப்பாட்டின் கீழ் உள்ள பில்லிங் நெட்வொர்க் வழியாக மட்டுமே கிரெடிட் கார்டு பில் கட்ட முடியும்.

கிரெடிட் கார்டு பில் கட்டுவதற்கு புதிய நடைமுறைகள்: நிதி தொழில்நுட்ப (ஃபின்டெக்) நிறுவனங்களான PhonePe, Cred, BillDesk மற்றும் Infibeam Avenues ஆகியவை ரிசர்வ் வங்கியின் சமீபத்திய ஒழுங்குமுறையால் பாதிக்கப்படும் எனத் தெரிகிறது. இந்த நடைமுறை வரும் ஜூலை 1ஆம் தேதி முதல் அமலுக்கு வர உள்ளது.

ஆக்சிஸ், ஹெச்டிஎஃப்சி, ஐசிஐசிஐ உள்ளிட்ட நாட்டின் முன்னணி வங்கிகள், 50 கோடிக்கும் மேலான கிரெடிட் கார்டுகளை விநியோகம் செய்துள்ளது. இருந்தபோதிலும், பாரத் பில் கட்டண முறை (BBPS) விதிகளை இந்த வங்கிகள் இன்னும் பின்பற்றவில்லை. 

BBPS விதிகளை பின்பற்றாத காரணத்தால் ஜூன் 30க்குப் பிறகு மேல்குறிப்பிட்ட வங்கியின் வாடிக்கையாளர்கள், கிரெட் மற்றும் ஃபோன்பே போன்ற ஃபின்டெக் தளங்கள் மூலம் தங்கள் கிரெடிட் கார்டு பில்களை செலுத்த முடியாது.

ரிசர்வ் வங்கி போட்ட அதிரடி உத்தரவு: வரும் ஜூன் 30ஆம் தேதிக்குள், அனைத்து கிரெடிட் கார்டு கட்டணங்களையும் பாரத் பில் பேமென்ட் சிஸ்டம் (பிபிபிஎஸ்) மூலம் செலுத்தி முடிக்க வேண்டும் என்பதை ரிசர்வ் வங்கி கட்டாயமாக்கியுள்ளது.

பாரத் பில் பேமென்ட் சிஸ்டத்தின் கீழ் PhonePe மற்றும் Cred போன்ற ஃபின்டெக் நிறுவனங்கள் ஏற்கனவே கொண்டு வரப்பட்டுவிட்டன. இருப்பினும், புதிய ஒழுங்குமுறைகளை பின்பற்றவில்லை என்றால் இந்த வங்கிகளால் கிரெடிட் கார்டு கட்டணத்தை செயல்படுத்த முடியாது.

நிதி தொழில்நுட்ப (ஃபின்டெக்) நிறுவனங்கள் தொடர்ந்து இயங்குவதற்கு, ஜூன் 30ஆம் தேதிக்குள் ரிசர்வ் வங்கியின் விதிமுறைகளை கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. தற்போதைக்கு, ​​அங்கீகரிக்கப்பட்ட 34 கிரெடிட் கார்டு வழங்கும் வங்கிகளில் எட்டு வங்கிகள் மட்டுமே பாரத் பில் கட்டண முறையை நடைமுறைப்படுத்தியுள்ளன.

ஃபெடரல் வங்கி, கோடக் மஹிந்திரா, இண்டஸ்இண்ட் வங்கி, எஸ்பிஐ கார்டு மற்றும் BoB கார்டு மட்டுமே இந்த கட்டண முறையை பின்பற்றி வருகிறது. மோசடியான பரிவர்த்தனைகளை கண்டுபிடிக்கவும் அதை தடுத்து நிறுத்தவும் கிரெடிட் கார்டு பில் கட்டணத்தை தங்கள் கட்டுப்பாட்டுகள் RBI கொண்டு வர உள்ளது.

இதையும் படிக்க: Bank FD Risk: பேங்க்ல எஃப்.டி,. போட போறிங்களா? இந்த 5 ஆபத்துகளை கட்டாயம் தெரிஞ்சுக்கங்க..!

About the author சுதர்சன்

Rookie Journalist. Writes on National, International, Politics, Human rights and Judiciary. Covered 2019 General Election, Apex Court Ayodhya judgement, 2021 Five state election, Pegasus etc.  
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

MGNREGA Scheme: 100 நாள் வேலை திட்டத்திற்கு கோவிந்தா.. மாநில அரசுகளின் தலையில் செலவை கட்டும் மத்திய அரசு
MGNREGA Scheme: 100 நாள் வேலை திட்டத்திற்கு கோவிந்தா.. மாநில அரசுகளின் தலையில் செலவை கட்டும் மத்திய அரசு
Free Laptop: மாணவர்களுக்கு எப்போது முதல் லேப்டாப்? அமைச்சர் அன்பில் மகேஸ் சொன்ன அசத்தல் தகவல்!
Free Laptop: மாணவர்களுக்கு எப்போது முதல் லேப்டாப்? அமைச்சர் அன்பில் மகேஸ் சொன்ன அசத்தல் தகவல்!
PM Modi TN Visit: தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி? 3 நாள், எங்கெங்கு விசிட்?
PM Modi TN Visit: தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி? 3 நாள், எங்கெங்கு விசிட்?
IPL Auction 2026: ஐபிஎல் மினி ஏலம்..! எங்கு? எப்போது? நேரலையில் பார்ப்பது எப்படி? 10 அணிகள் - 77 வீரர்கள் யார்?
IPL Auction 2026: ஐபிஎல் மினி ஏலம்..! எங்கு? எப்போது? நேரலையில் பார்ப்பது எப்படி? 10 அணிகள் - 77 வீரர்கள் யார்?
ABP Premium

வீடியோ

DMK Youth Meeting | 1.5 லட்சம் நிர்வாகிகள்!கடல்போல் திரண்ட கூட்டம்கெத்து காட்டிய முதல்வர்
Sreelekha IPS Profile | கேரளாவில் தடம்பதித்த பாஜகIPS அதிகாரி to முதல் மேயர்!யார் இந்த ஸ்ரீலேகா?
தவெக-விற்கு தாவும் வைத்திலிங்கம்?OPS-க்கு விரைவில் டாடா?பறிபோகும் ஆதரவாளர்கள் | Vaithilingam in TVK
கிளம்பிய LIONEL MESSIஆத்திரமடைந்த ரசிகர்கள் விழா ஏற்பாட்டாளர் கைது | Lionel Messi in Kolkata
சாக்கு சொன்ன சவுக்கு ARREST பேட்டி”G PAY-ல பணம் அனுப்புனா நான் பொறுப்பா?” | Savukku Shankar Arrest

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
MGNREGA Scheme: 100 நாள் வேலை திட்டத்திற்கு கோவிந்தா.. மாநில அரசுகளின் தலையில் செலவை கட்டும் மத்திய அரசு
MGNREGA Scheme: 100 நாள் வேலை திட்டத்திற்கு கோவிந்தா.. மாநில அரசுகளின் தலையில் செலவை கட்டும் மத்திய அரசு
Free Laptop: மாணவர்களுக்கு எப்போது முதல் லேப்டாப்? அமைச்சர் அன்பில் மகேஸ் சொன்ன அசத்தல் தகவல்!
Free Laptop: மாணவர்களுக்கு எப்போது முதல் லேப்டாப்? அமைச்சர் அன்பில் மகேஸ் சொன்ன அசத்தல் தகவல்!
PM Modi TN Visit: தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி? 3 நாள், எங்கெங்கு விசிட்?
PM Modi TN Visit: தேர்தல் வியூகம்..! தமிழகத்தில் பொங்கல் கொண்டாடும் பிரதமர் மோடி? 3 நாள், எங்கெங்கு விசிட்?
IPL Auction 2026: ஐபிஎல் மினி ஏலம்..! எங்கு? எப்போது? நேரலையில் பார்ப்பது எப்படி? 10 அணிகள் - 77 வீரர்கள் யார்?
IPL Auction 2026: ஐபிஎல் மினி ஏலம்..! எங்கு? எப்போது? நேரலையில் பார்ப்பது எப்படி? 10 அணிகள் - 77 வீரர்கள் யார்?
Scholarship:ரூ.50,000 உதவித்தொகை: மாணவர்கள் உயர் கல்வி பெற தமிழக அரசின் சூப்பர் திட்டம்! எப்படி விண்ணப்பிப்பது?
Scholarship:ரூ.50,000 உதவித்தொகை: மாணவர்கள் உயர் கல்வி பெற தமிழக அரசின் சூப்பர் திட்டம்! எப்படி விண்ணப்பிப்பது?
மீண்டும் கலக்கப்போகுது டபுள் டெக்கர் பஸ்.! இவ்வளவு வசதிகளா.? எந்த வழித்தடம்.? எப்போது தெரியுமா.?
மீண்டும் கலக்கப்போகுது டபுள் டெக்கர் பஸ்.! இவ்வளவு வசதிகளா.? எந்த வழித்தடம்.? எப்போது தெரியுமா.?
இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
இன்று முதல் ரூ.5000 அபராதம்.. மக்களே உஷார்.! வீடு வீடாக அதிரடி செக்கிங்- களம் இறங்கும் அதிகாரிகள்
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
TN Election 2026: திமுக பக்கம் திரும்புமா கொங்கு மண்டலம்? 10 மாவட்டங்கள், 68 தொகுதிகள் - அதிமுகவின் கோட்டை வீக்கானதா?
Embed widget