மேலும் அறிய

Cryptocurrency | கிரிப்டோ கரன்சி முதலீடு.. சொத்து கிடைக்காது, சொந்த ரிஸ்க்! அதிரடியாக பேசிய ரிசர்வ் வங்கி ஆளுநர்

கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனை தொடர்பாக ரிசர்வ் வங்கி ஆளுநர் சக்திகாந்தா தாஸ் கருத்து தெரிவித்துள்ளார்.

ரிசர்வ் வங்கியின் பண நிதி கொள்கை இன்று வெளியானது. இதை ரிசர்வ் வங்கியின் ஆளுநர் சக்திகாந்த தாஸ் வெளியிட்டார். அதில் அவர் பண நிதி கொள்கை தொடர்பாக பேசியுள்ளார். மேலும் இந்தியாவில் கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனை தொடர்பாகவும் அவர் சில கருத்துகளை முன்வைத்துள்ளார். 

அதன்படி, “கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனைகள் தொடர்பாக ரிசர்வ் வங்கி உறுதியான ஒரு கொள்கையை கொண்டுள்ளது. ஏனென்றால் தனியார் கிரிப்டோ கரன்சி பரிவர்த்தனை இந்திய பொருளாதார சிரதன்மைக்கு மிகவும் சவால் விடுக்கும் வகையில் அமைந்துள்ளது. அத்துடன் ரிசர்வ் வங்கி நிதி சிரதன்மையை கையாள இது மிகப்பெரிய சிக்கலை ஏற்படுத்தும். அதனால் இந்த கிரிப்டோ கரன்சிகளில் முதலீடு செய்பவர்களுக்கு நான் ஒன்றை கூறு கொள்கிறேன். அவர்கள் தங்களுடைய சொந்த ரிஸ்க்கில் இதில் முதலீடு செய்து வருகின்றனர்.கிரிப்டோ கரன்சி மூலம் எந்தவித சொத்தும் அவர்களுக்கு கிடைக்கப்போவதில்லை ” எனத் தெரிவித்துள்ளார். 

முன்னதாக ரிசர்வ் வங்கி பண நிதி கொள்கை இன்று வெளியானது. அதில், 2022-23 நிதி ஆண்டிற்கான மொத்த உள்நாட்டு உற்பத்தி (ஜிடிபி) 7.8 சதவீதமாக  இருக்கும் என எதிர்பார்க்கப்படுவதாக கூறினார். இ-ருபி டிஜிட்டல் வவுச்சருக்கான பண உச்ச வரம்பை 10,000ல் இருந்து 1 லட்சமாக உயர்த்தப்பட்டுள்ளது. அவசர சுகாதார சேவைகள் எளிதில் கிடைப்பதற்கும், கொவிட் தொடர்பான சுகாதார கட்டமைப்பு மற்றும் சேவைகளை அதிகரிப்பதற்கும், வங்கிகளுக்கு அளிக்கப்பட்டு வந்த பணபுழக்க வசதி (On-Tap Term Liquidity Facility to Ease Access to Emergency Health Services)  2022 ஜூன் 30ம் தேதிவரை நீட்டிக்கப்படுகிறது. ஒமிக்ரான் மூன்றாவது அலை காரணமாக நாட்டின் பொருளாதாரம் சற்று பாதிக்கப்பட்டுள்ளது. சுற்றுலா, வர்த்தகம், போக்குவரத்து போன்ற முக்கியத் துறைகளில் (Contact Intensive Sectors) மந்தநிலை காணப்படுகிறது.  

ரெப்போ/ ரிவர்ஸ் ரெப்போ என்றால் என்ன?

வணிக வங்கிகளுக்கு (Scheduled Commercial banks) ரிசர்வ் வங்கி குறுகிய கால கடன் வழங்கும்பொழுது விதிக்கும் வட்டி விகிதமே ரெப்போ விகிதம் எனப்படுகிறது. இவ்வங்கிகளுக்கு நிதிப்பற்றாக்குறை ஏற்படும்பொழுது அவைகள் பத்திரங்களை ஈடாக வைத்து இந்திய ரிசர்வ் வங்கியில் கடனைப் பெறும். அந்நிலையில், விதிக்கப்படும் வட்டி விகிதமே ரெப்போ விகிதம் எனப்படும். 

பணவீக்கத்தைக் (கட்டுப்படுத்த/ அதிகரிக்க) ரெப்போ விகிதத்தை (அதிகரிப்பதன்/குறைப்பதன்)  மூலம் கடன் வாங்குவதற்கான செலவை (அதிகப்படுத்தி/ குறையப்படுத்தி), கடன் வாங்குவதை இந்திய ரிசர்வ் வங்கி குறைக்கிறது/அதிகரிக்கிறது. 

 மேலும் படிக்க: இந்தியாவிலேயே அதிக சம்பளம் வாங்கும் சன் டிவியின் கலாநிதிமாறனும் அவரது மனைவியும்! பத்தாண்டுகளில் ரூ.1500 கோடி!

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை  அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Thiruchendur temple : முருகனை பார்க்க ஆயிரமா? கொந்தளிக்கும் பக்தர்கள்!திருச்செந்தூரில் நடப்பது என்ன?Rowdy John : ”கேட்ட இழுத்து மூடு டா” நீதிமன்றத்துக்குள் புகுந்த போலீஸ்! தட்டி தூக்கப்பட்ட ரவுடி!Thirumavalavan on Aadhav Arjuna : ”நான் பேசியது தவறு தான்”ஒப்புக்கொண்ட ஆதவ் அர்ஜுனா! - திருமாவளவன்Hindu Temple Attack : அமெரிக்காவில் எதிரொலிக்கும் go back Hindu! நடந்தது என்ன?

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Thrissur ATM Theft: சினிமா பாணியில் தப்பிச் சென்ற ஏடிஎம் கொள்ளையர்கள்; சிக்கியது எப்படி?- சேலம் டிஐஜி விளக்கம்
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க  முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
Breaking News LIVE 27th Sep 2024: இலங்கை சிறையில் உள்ள 145 மீனவர்களை மீட்க முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பிரதமரிடம் கோரிக்கை
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
கல்வி முறை , மனப்பாடம் செய்வதை தாண்டி , ஏன் ? எதற்கு ? என்று கேள்வி எழுப்ப வேண்டும் - ராம் நாத் கோவிந்த்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை  அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
தமிழக அரசு பழைய ஓய்வூதி திட்டத்தினை அமுல்படுத்த வேண்டும் - பாலகிருஷ்ணன்
"இந்தியாவில் முதலீடு செய்ய உலக நாடுகளே விரும்புகிறது" பெருமிதத்துடன் சொன்ன பிரதமர் மோடி!
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சொந்த காசில் சூனியம்.... அதிமுக நகரச் செயலாளர் வீட்டில் பெட்ரோல் குண்டு வீச்சில் திருப்பம்
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
சினிமாவை மிஞ்சிய நிஜம்: கட்டுக்கட்டாக பணம்; கன்டெய்னர் லாரியில் சென்ற கொள்ளையர்கள்- சுட்டுப்பிடித்த போலீஸ்!
MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!
MK Stalin Meets PM Modi: பிரதமர் மோடி - முதலமைச்சர் சந்திப்பில் நடந்தது என்ன? மு.க.ஸ்டாலின் வைத்த கோரிக்கைகள் இதுதான்!
Embed widget