Medicine Sales: மின்னல் வேகத்தில் எகிறும் விற்பனை.. இவ்வளவு மருந்துகள் விற்பனையாகிடுச்சா? ஏன்?
இந்தியாவில் காய்ச்சல் மற்றும் தொற்றுநோய்களின் பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக மருந்துகள் விற்பனை கடந்த ஜனவரி மாதத்தை விட பிப்ரவரியில் 25% அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
இந்தியாவில் காய்ச்சல் மற்றும் தொற்றுநோய்களின் பாதிப்பு அதிகரித்து வருவதன் காரணமாக மருந்துகள் விற்பனை கடந்த ஜனவரி மாதத்தை விட பிப்ரவரியில் 25% அதிகரித்துள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொதுவாக நோய் பாதிப்பு என்பது ஒவ்வொரு சீசன்களுக்கு ஏற்ப வேறுபடும். அந்த வகையில் சமீபகாலமாக காய்ச்சல் மற்றும் தொற்றுநோய்கள் அதிகரித்து வருகிறது. இன்புளூயென்சா வைரஸ் மூலம் பரவும் இந்த காய்ச்சலானது 6 நாட்கள் வரை இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. உரிய சிகிச்சை மூலம் இதனை குணப்படுத்தி விடலாம் என்றாலும் புளூ காய்ச்சல் நுரையீரலை பாதிக்கக்கூடியது.
இந்த நாட்களில் காய்ச்சல் நீடிக்கும். சளி, உடல் வலி, தலைவலி, இருமல், தொண்டை கரகரப்பு போன்ற பிரச்சனைகள் ஏற்படும். இது வயது வித்தியாசம் இல்லாமல் அனைவரையும் ஒரே மாதிரியாக பாதிக்கும் என்பதால், காய்ச்சல் வந்தவுடன் மருத்துவரை உடனடியாக அணுக வேண்டும். அதேசமயம் புளூ காய்ச்சலுடன் H1 N1 வகை வைரஸ் தொற்றும் பரவி வருகிறது.
இதனால் இந்தியாவில் இருமல் மருந்துகள், நோய் எதிர்ப்பு மருந்துகள் விற்பனை அதிகரித்துள்ளது. இது பிப்ரவரி மாதத்தில் ஜனவரியை விட 20 முதல் 25% வரை அதிகரித்துள்ளது. குறிப்பாக காய்ச்சல் மாத்திரையான பாராசிட்டமால், அசித்ரோமைசின் உள்ளிட்டவை அதிகளவில் விற்பனையாகி வருகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி மாதம் நோய் தொற்று எதிர்ப்பு மருந்துகள் 12.5 % அதிகரித்து ரூ.22,883 கோடியாகவும், இருமல் மருந்துகள் 8.1% அதிகரித்து ரூ.14,880 கோடியாகவும் இருந்தது. மேலும் நோய் எதிர்ப்பு சக்தி அளிக்கும் மருந்துகள் 26.1% அதிகரித்து ரூ.2,766 கோடியாக இருந்தது. இதேபோல் நுரையீரலில் வீக்கத்தைத் தடுக்கும் சிப்லாவின் புட்கார்ட் 23.3% அதிகரித்து ரூ.2,385 கோடியாகவும், வலி நிவாரணி மருந்துகள் 10.7% அதிகரித்து ரூ.12,898 கோடியாகவும் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள்
- உங்கள் கைகைளை அடிக்கடி கை கழுவ வேண்டும்.
- வெளியே சென்று வீட்டிற்கு வந்ததும் முடிந்தவரை குளிக்க வேண்டும். கை, கால்களை கண்டிப்பாக கழுவ வேண்டும்.
- முகக்கவசம் அணிவதோடு மட்டுமல்லாமல் அதிகம் கூட்டம் உள்ள இடங்களுக்கு செல்வதை தவிர்க்க வேண்டும்.
- தும்மல், இருமல் வரும்போது மூக்கு மற்றும் வாயை மூட வேண்டும்
- அடிக்கடி வாய் மற்றும் மூக்கை தொடுவதை தவிர்க்க வேண்டும்.
- குளிர்ந்த உணவுகளை சாப்பிடுவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும்
- காய்ச்சல் மற்றும் உடல்வலி ஏற்பட்டால் பரிந்துரைக்கப்பட்ட மருந்துகளை மருத்துவரின் ஆலோசனையின்படி மட்டும் எடுத்துக் கொள்ள வேண்டும்