(Source: ECI/ABP News/ABP Majha)
Stock Market Today: ஏற்றம் கண்ட பங்குச்சந்தை; 80,436 புள்ளிகள் வர்த்தகமான சென்செக்ஸ்!
Stock Market Today: சென்செக்ஸ் 80 ஆயிரம் புள்ளிகளை கடந்து வர்த்தகத்தை நிறைவு செய்தது.
இந்திய பங்குச்சந்தை ஏற்றத்துடன் வர்த்தகத்தை நிறைவு செய்துள்ளது. சென்செக்ஸ் மீண்டும் 80 ஆயிரம் புள்ளிகளை வர்த்தகமாகியது.
வர்த்தக நேர முடிவில், மும்பை பங்குச்சந்தை குறியீடான சென்செக்ஸ் 1,330. 96 அல்லது 1.68% புள்ளிகள் உயர்ந்து 80,436.84 ஆகவும், தேசிய பங்குச்சந்தை குறியீடான நிஃப்டி 397.40 அல்லது 1.65% புள்ளிகள் உயர்ந்து 24,541.15 ஆக வர்த்தகமாகியது.
கடந்த ஒரு வாரத்திற்கு பிறகு சென்செக்ஸ் 80 ஆயிரம் புள்ளிகளை கடந்து வர்த்தகமாகியது.
கடந்த ஆகஸ்ட் 5-ம் தேதி உலக அளவில் பங்குச்சந்தை கடும் சரிவை சந்தித்தது. பங்குச்சந்தை வீழ்ச்சியால் முதலீட்டாளர்களுக்கு ரூ.15 லட்சம் கோடி இழப்பு ஏற்பட்டது. இந்திய பங்குச்சந்தையிலும் அது பிரதிபலித்தது. 10 நாட்களில் பங்குச்சந்தை சரிவுடன் இருந்த நிலையில், இப்போது மீண்டுள்ளது. சென்செக்ஸ் 80 ஆயிரம் புள்ளிகளை கடந்து வர்த்தகமாகியுள்ளது.
ஜப்பான் யென் மதிப்பு சரிவை சந்திக்காததால் உலக அளவில் பங்குச்சந்தைகள் ஏற்றத்துடன் வர்த்தகமாகின. அமெரிக்காவின் ரீடெயில் சேல்ஸ் மதிப்பு வலிமையுடன் இருப்பதாலும் கடந்த வராங்களில் வேலையின்மை மதிப்பு குறைந்ததாலும் பங்குச்சந்தை ஏற்றம் காண காரணமாக அமைந்தது. இந்தியாவின் CPI பணிவீக்கம் எதிர்பார்த்ததை விட சரிந்ததால், பங்குச்சந்தை க்ரீனில் வர்த்தகமானது.
Nifty-50 Index கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 5.2% வளர்ச்சியை முதல் காலாண்டில் பதிவு செய்துள்ளது. CPI பணவீக்கம் 5.1%-ல் இருந்து 3.5% ஆக சரிந்துள்ளது.
லாப - நஷ்டத்துடன் வர்த்தகமான நிறுவனங்களின் விவரம்:
விப்ரோ, டெக் மஹிந்திரா, எல்.டிஎம்., மைண்ட் ட்ரீ, எம் & எம், டி.சி.எஸ்., டாடா மோட்டர்ஸ், ஹெச்.சி.எல். டெக், பி.பி.சி.எல்., அப்பல்லோ மருத்துவமனை, ஹிண்டால்கோ, க்ரேசியம். ஸ்ரீராம் ஃபினான்ஸ், ஐ.சி.ஐ.சி.ஐ. வங்ஜி, இன்ஃபோசின்ஸ், கோடாக் மஹிந்திரா, ஈச்சர் மோட்டர்ஸ், டாடா கான்ஸ், ப்ராட், ஹெச்.டி.எஃப்.சி. வங்கி, பவர்கிரிட் கார்ப்,ம் பஜாஜ் ஃபினான்ஸ்ம் இந்தஸ்லேண்ட் வங்கி, ஐ.டி.சி, நெஸ்லே, எஸ்.பி.ஐ., பாரதி ஏர்டெல், டாடா ஸ்டீல், பஜாஜ் ஃபின்சர்வ், பிரிட்டானியா, அதானி போர்ட்ஸ், ரிலையன்ஸ், சிப்ளா, ஹீரோ மோட்டர்கார்ப், அதானி எண்டர்பிரைசிஸ், கோல் இந்தியா, டைட்டன் கம்பெனி, லார்சன், ஜெ.எஸ்.டபுள்யு, பஜாஜ் ஆட்டோ, ஏசியன் பெயிண்ட்ஸ், என்.சி.பி.சி., ஹெச்.யு.எல்., மாருதி சுசூகி, சன் ஃபார்மா ஆகிய நிறுவனங்கள் மட்டும் லாபத்துடன் வர்த்தகமாகின.
டிவிஸ் லேப்ஸ், எஸ்.பி.ஐ. லைஃப் இன்சுரா, டாக்டர் ரெட்டிஸ் லேப்ஸ் ஆகிய நிறுவனங்களின் பங்குகள் சரிவுடன் வர்த்தகமாகின.