Budget 2024 LIVE: நெருங்கும் மத்திய பட்ஜெட் - உச்சகட்ட எதிர்பார்ப்பில் நடுத்தர மக்கள் - கனவுகள் நிறைவேறுமா?
Union Budget 2024 Live updates: பல்வேறு எதிர்பார்ப்புகளுக்கு இடையே மத்திய அரசின் 2024-25 நிதியாண்டிற்கான, விரிவான பட்ஜெட் வரும் 23ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
LIVE
Background
Union Budget 2024 Live updates: மத்திய அரசின் 2024-25 நிதியாண்டிற்கான விரிவான பட்ஜெட், வரும் 23ம் தேதி நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது.
மோடி 3.0 அரசின் முதல் பட்ஜெட்:
பிரதமராக மோடி மூன்றாவது முறையாக பதவியேற்றபின், முதல்முறையாக வரும் 22ம் தேதி நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத் தொடர் தொடங்க உள்ளது. அதைதொடர்ந்து, 2024-25 நிதியாண்டிற்கான விரிவான பட்ஜெட்டை, நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் வரும் 23ம் தேதி தாக்கல் செய்ய உள்ளார். மோடி 3.0 அரசின் முதல் பட்ஜெட் என்பதால், இதன் மீது பல்வேறு எதிர்பார்ப்புகள் நிலவுகிறது. குறிப்பாக நடுத்தர மக்கள் பயன்பெறும் வகையிலான பல்வேறு அறிவிப்புகள் பட்ஜெட்டில் இடம்பெறும் என கூறப்படுகிறது.
நடுத்தர மக்களை குளிர்விக்கும் திட்டங்கள்?
அண்மையில் நடந்து முடிந்த மக்களவை தேர்தலில், 10 ஆண்டுகளுக்குப் பிறகு பாஜக பெரும்பான்மையை இழந்தது. இதனால், கூட்டணி கட்சிகளின் ஆதரவுடன் தற்போது ஆட்சி அமைத்துள்ளது. வேலைவாய்ப்பின்மை, தனிநபர் வருவாய் சரிவு, நடுத்தர மக்களின் எதிர்பார்ப்புகளை பூர்த்தி செய்யாதது போன்ற காரணங்களால் தான், பாஜக பெரும்பான்மையை இழந்ததாக அரசியல் வல்லுநர்கள் கருதுகின்றனர். இதனால், நடுத்தர மக்களின் மனதை குளிர்விக்கும் வகையிலும், அவர்களின் வரிச்சுமையை குறைத்து நுகர்வுக்கான கையிருப்பை அதிகரிக்கும் நோக்கில் பல்வேறு திட்டங்கள் பட்ஜெட்டில் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. அவற்றில் சில முக்கிய எதிர்பார்ப்புகள் கீழே பட்டியலிடப்பட்டுள்ளன.
நடுத்தர மக்களின் எதிர்பார்ப்புகள் என்ன?
- புதிய வரிவிதிப்பு முறையில் ரூ.3 லட்சம் வரையிலான வருமானத்துக்கு வரி விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. இந்நிலையில், பட்ஜெட்டில் இது ரூ.5 லட்சமாக அதிகரிக்கப்படலாம் என கூறப்படுகிறது.
- நிதியமைச்சர் வரி விகிதங்களை 18% லிருந்து 12%/15% ஆகவும், 28% லிருந்து 18%/23% ஆகவும் குறைக்கலாம். இது சரக்குகள் மற்றும் சேவைகளின் விற்பனை அளவு அதிகரிப்பதற்கு வழிவகுப்பதன் மூலம் நுகர்வுக்கு ஊக்கமளிக்கும்.
- வீட்டுக் கடனுக்கான விலக்கு வரம்பை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.2.5 லட்சம் முதல் ரூ.3 லட்சமாக உயர்த்துவதையும் அரசாங்கம் கவனத்தில் கொள்ளலாம்.
- 50,000 ரூபாய் வரையிலான வட்டி வருமானத்திற்கு வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது.அது ஒரு லட்ச ரூபாயாக உயர்த்தப்படலாம்,
- விவசாயிகளுக்கு வழங்கப்படும் ஆண்டிற்கு ரூ.6,000 என்ற உதவித்தொகை 8,000 முதல் 9,000 ரூபாய் வரை உயர்த்தலாம்
- ஆயுஷ்மான் பாரத் திட்டத்தின் கீழ் 5 லட்ச ரூபாய் மருத்துவ காப்பீடு வழங்கப்பட்டு வரும் நிலையில், அதன் வரம்பு 10 லட்ச ரூபாயாக உயர்த்தலாம்
- நிதி அமைச்சகம் புதிய வரி முறையின் கீழ் வழங்கும் நிலையான விலக்குகளை ரூ.50 ஆயிரத்தில் இருந்து ரூ.1 லட்சமாக உயர்த்தலாம்
- வீட்டு வாடகை கொடுப்பனவு (HRA) கழிப்பிலும் நிவாரணம் எதிர்பார்க்கப்படுகிறது
ஆனால், இவை அனைத்தும் நிறைவேறுமா என்பதை பொறுத்து இருந்துதான் பார்க்க வேண்டும்.
விவசாயிகளுக்கான உதவித்தொகை உயருமா?
தற்போது மத்திய அரசு சார்பில் விவசாயிகளுக்கு ஒவ்வொரு ஆண்டும் தற்போது ரூ.6,000 உதவித்தொகையாக வழங்கப்பட்டு வருகிறது. அந்த தொகையை ரூ.8,000 முதல் 9,000 ரூபாய் வரை உயர்த்த வேண்டும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
வட்டி வருமானத்திற்கான விலக்கு உயருமா?
ஏற்கனவே சேமிப்பு திட்டங்களில் கிடைக்கு 50,000 ரூபாய் வரையிலான வட்டி வருமானத்திற்கு வரியிலிருந்து விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. அது, புதிய பட்ஜெட்டில் ஒரு லட்ச ரூபாயாக உயர்த்தப்படலாம் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
வீட்டுக் கடன் விலக்கு வரம்பு உயருமா?
மத்திய அரசின் பட்ஜெட்டில், “வீட்டுக் கடனுக்கான விலக்கு வரம்பை ரூ.2 லட்சத்தில் இருந்து ரூ.2.5 லட்சம் முதல் ரூ.3 லட்சமாக உயர்த்துவதையும் அரசாங்கம் கவனத்தில் கொள்ளலாம்” என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.
மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் - மத்திய அரசுக்கு முதலமைச்சர் கடிதம்
மெட்ரோ ரயில் திட்டத்திற்கு அதிக நிதி ஒதுக்க வேண்டும் என்று மத்திய அரசுக்கு முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.
ஜிஎஸ்டி வரி விகிதங்களில் மாற்றம் வருமா?
நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ள பட்ஜெட்டில், ஜிஎஸ்டி வரி விகிதங்களை 18% லிருந்து 12%/15% ஆகவும், 28% லிருந்து 18%/23% ஆகவும் குறைக்கலாம். இது சரக்குகள் மற்றும் சேவைகளின் விற்பனை அளவு அதிகரிப்பதற்கு வழிவகுப்பதன் மூலம் நுகர்வுக்கு ஊக்கமளிக்கும் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது.