Budget 2024 Highlights: பட்ஜெட் 2024-25ல் நிதியமைச்சரின் டாப் 7 அறிவிப்புகள்: உங்களுக்காக..!
Union Budget 2024 Highlights in Tamil: நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்த 2024-25 நிதி ஆண்டு பட்ஜெட்டில் முக்கிய அறிவிப்புகளை பார்ப்போம்.
2024-25 நிதியாண்டு பட்ஜெட்டில் வருமான வரி மாற்றங்கள், தங்கம் , மொபைல் உள்ளிட்டவற்றுக்கான வரி விலக்கு உள்ளிட்ட டாப் 7 அறிவிப்புகளை தெரிந்து கொள்வோம்.
பட்ஜெட் 2024-25:
புதிதாக அமைக்கப்பட்ட நரேந்திர மோடி தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணி அரசின் மூன்றாவது முறையான ஆட்சியில் முதல் பட்ஜெட் தாக்குதல் செய்யப்பட்டது. இது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனின் ஏழாவது முழு பட்ஜெட்டாகும். இன்று தாக்கல் செய்த பட்ஜெட்டில் டாப் 7 முக்கிய சிறப்பம்சங்களை ABP நாடு உங்களுக்கு வழங்குகிறது.
1.வருமான வரியில் மாற்றங்கள்
புதிய வரி விதிப்பின் கீழ், சம்பளம் பெறும் ஊழியர்களுக்கான நிலையான விலக்கு ₹50,000ல் இருந்து ₹75,000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. அதேபோல், ஓய்வூதியதாரர்களுக்கான குடும்ப ஓய்வூதியத்தில் பிடித்தம் ₹15,000லிருந்து ₹25,000ஆக உயர்த்தப்படுகிறது. இந்த மாற்றங்களால் சம்பளம் பெறும் சுமார் 4 கோடி நபர்கள் மற்றும் ஓய்வூதியதாரர்கள் பயனடைவார்கள்.
2.New Tax Regime வரி விதிப்பில் புதிய மாற்றங்கள்:
3.தங்கம் வரி குறைப்பு:
தங்கம் மற்றும் விலைமதிப்பற்ற உலோக ஆபரணங்களின் உள்நாட்டு மதிப்பை அதிகரிக்க, தங்கம் மற்றும் வெள்ளி மீதான சுங்க வரி 6% ஆகவும், பிளாட்டினம் மீதான 6.4% ஆகவும் குறைக்கப்பட்டுள்ளது. முன்னதாக, இந்த உலோகங்கள் மீதான சுங்க வரியின் விகிதம் 15% ஆக இருந்தது குறிப்பிடத்தக்கது.
4.மொபைல் வரி குறைப்பு:
மொபைல் போன்கள், மொபைல் பிரிண்டட் சர்க்யூட் போர்டு அசெம்பிளி ( PCBA ) மற்றும் மொபைல் சார்ஜர்கள் மீதான அடிப்படை சுங்க வரி ( CUSTOM DUTY ) கஸ்டம் டூட்டி (பிசிடி) 15% ஆக குறைக்கப்படும். இந்த குறைப்பு மொபைல் யூனிட்களின் விலையில் குறைப்புக்கு வழிவகுக்கும்.
5.வேலைவாய்ப்பு அதிகரிக்கும் முயற்சி
வேலையில்லா திண்டாட்டத்தை சமாளிக்க, அரசாங்கம் தனது பட்ஜெட்டில் 500க்கும் மேற்பட்ட முன்னணி நிறுவனங்களில் 1 கோடி இளைஞர்களுக்கு வாய்ப்புகளை வழங்கும் புதிய இன்டர்ன்ஷிப் திட்டத்தை அறிவித்தது.
- மாதாந்திர உதவித்தொகை ரூ 5,000
- ஒரு முறை உதவித்தொகை ரூ 6,000
மேலும், அடுத்த ஐந்து ஆண்டுகளில் சுமார் 4.1 கோடி இளைஞர்களுக்கு வேலை வாய்ப்புகளை உருவாக்குவதற்கான விரிவான திட்டத்தை அரசாங்கம் மேற்கோள் காட்டியது. இதற்கான கணிசமான பட்ஜெட் ஒதுக்கீடு ரூ. 2 லட்சம் கோடியாகும். இந்த முயற்சியானது நாட்டில் வேலைவாய்ப்பிற்கு குறிப்பிடத்தக்க ஊக்கத்தை வழங்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக கூறப்படுகிறது.
6.ஏஞ்சல் வரி நீக்கம்:
இந்திய ஸ்டார்ட்-அப் சூழலை வலுப்படுத்தவும், தொழில் முனைவோர் உணர்வை அதிகரிக்கவும், புதுமைகளை ஆதரிப்பதற்காகவும், முதலீட்டாளர்களுக்கும் ஏஞ்சல் வரி ரத்து செய்யப்பட்டுள்ளது.
7.உற்பத்தி மற்றும் சேவைகளுக்கான ஆதரவு
உத்தரவாதம் ( Securities ) அல்லது மூன்றாம் தரப்பினர் உத்தரவாதம் இல்லாமல் இயந்திரங்கள் மற்றும் உபகரணங்களை வாங்குவதற்கு MSME களுக்கு கால கடன்களை எளிதாக்க, கடன் உத்தரவாத திட்டம் அறிமுகப்படுத்தப்படும்.
'தருண்' பிரிவின் கீழ் கடன் பெற்று வெற்றிகரமாகச் செலுத்திய தொழில்முனைவோருக்கு, முத்ரா கடன்களின் வரம்பு தற்போதைய ₹10 லட்சத்தில் இருந்து ₹20 லட்சமாக உயர்த்தப்படும்.