Budget 2024: 9 அம்சங்களை உள்ளடக்கிய பட்ஜெட் : என்ன தெரியுமா?
9 Priorities of Budget: 2024 - 25 ஆம் நிதி ஆண்டுக்கான முழு பட்ஜெட்டில், 9 முன்னுரிமைகளை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.
Budget Priorities: மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், நாடாளுமன்றத்தின் மக்களவையில் 2024 -25 ஆண்டுக்கான முழு பட்ஜெட் தாக்கல் செய்தார். அப்போது மத்திய பட்ஜெட்டில் ஒன்பது முன்னுரிமைகளை நிர்மலா சீதாராமன் அறிவித்தார்.
2024-25 பட்ஜெட் தாக்கல்:
முழு பட்ஜெட்டானது, பொதுவாக பிப்ரவரி மாதத்தில் தாக்கல் செய்யப்படும். ஆனால், இந்த வருடத்தில், மக்களவைத் தேர்தல் நடைபெற்றதால் முழு பட்ஜெட் தாக்கல் செய்யப்படவில்லை. அதற்கு பதிலாக, புதிய அரசு அமையும் வரையிலான கால வரையில் இடைக்கால பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டது.
இதையடுத்து, தேர்தல் முடிவடைந்த நிலையில், பாஜக தலைமையிலான பாஜக கூட்டணி பொறுப்பேற்றுள்ள நிலையில், தற்போது முழு ஆண்டுக்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்படுகிறது. இது பிரதமர் மோடி தலைமையில், 3வது ஆட்சியில் தாக்கல் செய்யப்படும் முதல் பட்ஜெட்டாகும். இது நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்யும் 7வது முழு பட்ஜெட்டார்கும்.
மக்களவையில், பட்ஜட்டை தாக்கல் செய்த நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் 9 துறைகளுக்கு முன்னுரிமைகள் அளிக்க திட்டமிட்டுள்ளதாக அறிவித்துள்ளார்.
9 முன்னுரிமைகள்:
1.வேளாண்மை
2.வேலைவாய்ப்பு
3. அனைவரையு உள்ளடக்கிய வளர்ச்சி
4. உற்பத்தி மற்றும் சேவைகள்
5.நகர்ப்புற வளர்ச்சி
6. ஆற்றல்
7. உள்கட்டமைப்பு வசதி
8.புதுமை, ஆராய்ச்சி மற்றும் மேபாடு
9. அடுத்த தலைமுறை சீர்திருத்தங்கள்
இதர முக்கிய அம்சங்கள் என்னென்ன ?
இந்த பட்ஜெட் ஏழைகள், பெண்கள், இளைஞர்கள், விவசாயிகளை மையப்படுத்தி தயாரிக்கப்பட்டுள்ளது என்றும் அதிலும் நடுத்தர வர்க்கத்தினர் பயன்பெறும் வகையில் இந்த பட்ஜெட் இருக்கும் என்றும் நிதியமைச்சர் தெரிவித்துள்ளார்.
- நாடு முழுவதும் உள்ள 10 லட்சம் மாணவர்களுக்கு கல்வி கடன் ரத்து செய்யப்படும் என்றும் அறிவித்துள்ள நிர்மலா சீதாராமன்,
- மேலும், நாடு முழுவதும் தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும்
- 12 தொழில் பூங்காங்களுக்கு விரைவில் ஒப்புதல்
- டாமிட்ரி பாணியில் வாடகை வீடுகள் - தொழிலாளர்களுக்கு வழங்கப்படும்
- 5 ஆண்டுகளில் ஒரு கோடி மாணவர்களுக்கு தொழில் பயிற்சி
- மகளிர் மேம்பாட்டுக்கு 3 ஆயிரம் கோடியில் புதிய திட்டங்கள்
- 500 பெரிய தொழில் நிறுவனங்களில் பயில இளைஞர்களுக்கு வாய்ப்பு உருவாக்கித் தரப்படும்
- நிறுவனங்களுக்காக புதிய தீர்ப்பாயம் அமைக்கப்படும் - திவாலான நிறுவனங்களிடமிருந்து மக்களின் பணத்தை பெற புதிய ஆணையம்
- பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின்படி, நகர்புறங்களில் ஒரு கோடி வீடுகள் கட்டித் தரப்படும் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மத்திய நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.
- பெண்கள் தொழில் பயிற்சி பழக மத்திய அரசு உதவியுடன் மாநிலங்களுடன் இணைந்து பயிற்சிகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.