TN Agri Budget 2022: ஆஹா.. என்ன ஒரு ஒற்றுமை..! 1 மணி 51 நிமிடங்களில் பட்ஜெட்டை வாசித்து முடித்த அமைச்சர்கள் எம்.ஆர்.கே - பி.டி.ஆர்..!
TN Agri Budget 2022: வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வமும், நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜனும் பட்ஜெட் உரையை துல்லியமாக 1 மணி நேரம் 51 நிமிடங்களில் வாசித்து முடித்துள்ளனர்.
தமிழ்நாட்டின் 2022-2023ம் ஆண்டுக்கான வேளாண் நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது. வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் இந்த வேளாண் பட்ஜெட்டில் சட்டப்பேரவையில் படித்தார். காலை 10 மணிக்கு தொடங்கிய இந்த பட்ஜெட் உரை சரியாக காலை 11.51 மணிக்கு நிறைவு பெற்றது.
நேற்று தமிழ்நாட்டின் 2022-2023ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்தார். அவரும் காலை 10 மணிக்கு தொடங்கிய தனது பட்ஜெட் உரையை சரியாக மதியம் 11.51 மணி வரைக்கு நிறைவு செய்தார்.
நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தாக்கல் செய்த நிதிநிலை அறிக்கையும், வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வமும் தாக்கல் செய்த வேளாண் பட்ஜெட்டும் சரியாக 1 மணி நேரம் 51 நிமிடங்கள் வாசிக்கப்பட்டது.
நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் நிதிநிலை அறிக்கையை வாசிக்கத் தொடங்கிய உடனே எதிர்க்கட்சியான அ.தி.மு.க.வினர் அமளியில் ஈடுபட்டனர். இதனால், அவையில் சிறிது நேரம் பரபரப்பு ஏற்பட்டது. இதனால் நிதியமைச்சர் பட்ஜெட் உரை வாசிப்பதை நிறுத்திவிட்ட சில நிமிடங்கள் தனது இருக்கையில் அமர்ந்தார். மேலும், நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் தமிழில் வாசிப்பதற்கு மிகவும் தடுமாறினார். ஆனால், ஆங்கிலத்தில் மிகவும் சரளமாக பட்ஜெட் உரையை படித்தார்.
ஆனால், வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர்செல்வம் வேளாண் அறிக்கையை சமர்ப்பிக்கும்போது எந்தவித இடையூறும் ஏற்படவில்லை. இதனால், அவர் எந்தவித இடையூறும் இன்றி வேளாண் பட்ஜெட்டை வாசித்து முடித்தார். வேளாண் பட்ஜெட் வாசித்து நிறைவு செய்த பிறகு இன்றைய நாளுக்கான அவை நடவடிக்கை இத்துடன் நிறைவு பெறுவதாக பேரவைத் தலைவர் அப்பாவு அறிவித்தார்.
இதையடுத்து, நிதிநிலை அறிக்கை தொடர்பான விவாதம் வரும் திங்கள்கிழமை சட்டப்பேரவைக் கூட்டம் மீண்டும் தொடங்க உள்ளது. இந்த கூட்டத்தொடர் வரும் 24-ந் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த கூட்டத்தொடரில் நிதிநிலை மற்றும் வேளாண் பட்ஜெட் தொடர் மீதான விவாதம் நடைபெற உள்ளது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்