மேலும் அறிய

TN Budget 2024: தமிழக அரசின் மொத்த பட்ஜெட் மதிப்பு ரூ.3.48 லட்சம் கோடி - நிதி பற்றாக்குறை எவ்வளவு தெரியுமா?

Tamil Nadu Budget 2024: தமிழ்நாடு அரசின் 2024-25 நிதியாண்டிற்கான மொத்த வருவாய் செலவினம், ரூ. 3,48,289 கோடி என நிதிநிலை அறிக்கையில் மதிப்பிடப்பட்டுள்ளது.

Tamil Nadu Budget 2024: தமிழ்நாடு அரசின் 2024-25 நிதியாண்டிற்கான நிதிநிலை அறிக்கையை நிதியமமைச்சர் தங்கம் தென்னரசு சட்டப்பேரவையில் தாக்கல் செய்தார். தொடர்ந்து அந்த உரையை வாசித்தபோது, 2023-24 நிதியாண்டில் தமிழக அரசின் நிதிப்பற்றாக்குறை  92 ஆயிரத்து 75 கோடியாக மதிப்பிடப்பட்டு இருந்த நிலையில், திருத்த மதிப்பீட்டில் அது 94 ஆயிரத்து 60 கோடியாக அதிகரிக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. மாநிலத்தின் உள்நாட்டு உற்பத்தியில் 3.25 சதவிகிதமாக கணக்கிடப்பட்டு இருந்த நிதிப்பற்றாக்குறை திருத்த மதிப்பீடுகளில்   3.45 சதவிகிதமாக அதிகரிக்கும் என கணக்கிடப்பட்டுள்ளது.

2024-25 வரவு செலவு திட்டங்கள்:

மாநில பொருளாதார வளர்ச்சி, வரி விகிதங்களில் மேற்கொள்ளப்பட்ட மாற்றங்கள் உள்ளிட்டவை மூலம் 2024-25 நிதியாண்டிற்கான மாநிலத்தின் சொந்த வரி வருவாய் 14.73 சதவிகித வளர்ச்சியுடன் ஒரு லட்சத்து 95 ஆயிரத்து 173 கோடியாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது. இதில் வணிக வரி மூலம் ஒரு லட்சத்து 43 ஆயிரத்து 381 கோடி ரூபாய், முத்திரை தாள் மற்றும் பதிவு கட்டணங்கள் மூலம் 23 ஆயிரத்து 370 கோடி ரூபாய், மாநில ஆயத்தீர்வுகள் மூலம் 12 ஆயிரத்து 247 கோடி ரூபாய், வாகனங்களின் மீதான வரிகள் மூலம் 11 ஆயிரத்து  520 கோடி ரூபாயும் கிடைக்கப் பெறும். மாநிலத்தின் சொந்த வரி அல்லாத வருவாயாக 30 ஆயிரத்து 728 கோடி ரூபாய் மதிப்பிடப்பட்டுள்ளது. வரும் நிதியாண்டில் ஜிஎஸ்டி வரி வருவாய் முற்றிலும் நின்று விடும். ஒன்றிய அரசின் வரிகளில் மாநில அரசின் பங்கு 49 ஆயிரத்து 750 கோடி ரூபாய் என மதிப்பிடப்பட்டுள்ளது.

மொத்த வருவாய் செலவினம் - ரூ. 3,48,289 கோடி

வருவாய் பற்றாக்குறை - ரூ.49,278.73 கோடி

ஊதியச் செலவினங்கள் - ரூ. 84,931 கோடி

சம்பளம் அல்லாத செலவினங்கள் - ரூ.15,013 கோடி

ஓய்வூதிய பலன்களுக்கான செலவுகள் - ரூ.37,663 கோடி

மானியங்கள் , உதவி மானியங்கள் வழங்குவதற்கான மதிப்பீடுகள் - ரூ.1, 46,908 கோடி 

பொதுக்கடனுக்கான வட்டித்தொகை - ரூ.63,722 கோடி

மூலதனச் செலவினம் - ரூ.47, 681 கோடி

இழபீட்டுத் தொகை நீங்கலாக வருவாய் பற்றாக்குறை - ரூ. 34 ஆயிரத்து 834 கோடி

நிதிப்பற்றாக்குறை 3.44 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.

கடன் விவரங்கள்:

பட்ஜெட் அறிக்கையின்படி, ஒன்றிய அரசு நிர்ணயிக்கும் ஒட்டுமொத்தக் கடன் வரம்பின் அடிப்படையில், கடன் பெறுதலும் திரும்பச் செலுத்துதலும் மதிப்பிடப்பட்டுள்ளன. 2024-25 ஆம் ஆண்டில் மாநில அரசு 1,55,584.48 கோடி ரூபாய் அளவிற்கு மொத்தக் கடன் பெற திட்டமிட்டுள்ளது. மேலும், 49,638.82 கோடி ரூபாய் மதிப்பிலான பொதுக்கடனை அரசு திருப்பிச் செலுத்தும். இதன் விளைவாக, 31.03.2025 அன்று நிலுவையில் உள்ள கடன் 8,33,361.80 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்படுகிறது. 2024-25 ஆம் ஆண்டில் மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் இது 26.41 சதவீதம் ஆகும். மாநில மொத்த உற்பத்தி மதிப்பில் நிலுவையிலுள்ள மொத்தக் கடன் விகிதம் 2025-26 ஆம் ஆண்டில் 25.75 சதவீதமாகவும், 2026-27 ஆம் ஆண்டில் 25 சதவீதமாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. இது 15-வது நிதிக்குழு பரிந்துரைத்த இலக்கிற்குள் உள்ளது” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 59 ஆக அதிகரிப்பு
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 59 ஆக அதிகரிப்பு
Advertisement
Advertisement
Advertisement
metaverse

வீடியோ

Accident News :  BIKE-ல் மோதிய பேருந்து..தூக்கி வீசப்பட்ட இளைஞர் பதற வைக்கும் CCTV காட்சிNEET Exam  : நீட் மறு தேர்வு..எழுத வராத மாணவர்கள்! நடந்தது என்ன?Amudha IAS Transfer? : இப்படி பண்ணிட்டிங்களே. அமுதா IAS Transfer? அப்செட்டில் ஸ்டாலின்!Trichy Surya |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
TN Assembly: 6 டிப்ளமோ படிப்புகள் அறிமுகம், அரசுக் கல்லூரிகளில் ஏஐ, எந்திரனியல் ஆய்வகம்- அமைச்சர் பொன்முடி அறிவிப்பு
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
பிறப்புறுப்பில் மிளகாய் தூள் தடவி டார்ச்சர்! பொது இடத்தில் பழங்குடி பெண்ணுக்கு நேர்ந்த அநீதி!
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
'இத்தனை நாளா எங்கய்யா இருந்தே'... ரூ.600 செலவில் தஞ்சை பள்ளி மாணவரின் அட்டகாச கண்டுபிடிப்பு கருவி
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 59 ஆக அதிகரிப்பு
Breaking News LIVE: கள்ளக்குறிச்சி கள்ளச்சாராய உயிரிழப்பு 59 ஆக அதிகரிப்பு
Vijay: பிறந்தநாள் வாழ்த்து! சீமான், திருமா, அன்புமணிக்கு சிறப்பு நன்றி - வியூகம் வகுக்கும் விஜய்
Vijay: பிறந்தநாள் வாழ்த்து! சீமான், திருமா, அன்புமணிக்கு சிறப்பு நன்றி - வியூகம் வகுக்கும் விஜய்
TN Assembly: 'அகல்விளக்கு', 'திசைதோறும் திராவிடம்'- பள்ளிக் கல்வித்துறைக்கு 25 புது அறிவிப்புகள்!- என்னென்ன?
TN Assembly: 'அகல்விளக்கு', 'திசைதோறும் திராவிடம்'- பள்ளிக் கல்வித்துறைக்கு 25 புது அறிவிப்புகள்!- என்னென்ன?
Jayam Ravi: கோலிவுட்டில் அடுத்த விவாகரத்து? கணவர் ஜெயம் ரவி புகைப்படங்களை நீக்கிய மனைவி ஆர்த்தி!
Jayam Ravi: கோலிவுட்டில் அடுத்த விவாகரத்து? கணவர் ஜெயம் ரவி புகைப்படங்களை நீக்கிய மனைவி ஆர்த்தி!
TN RAIN: மக்களே! 7 மாவட்டங்களுக்கு 3 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை - வெளுக்கப் போகும் கனமழை!
TN RAIN: மக்களே! 7 மாவட்டங்களுக்கு 3 நாட்களுக்கு மஞ்சள் எச்சரிக்கை - வெளுக்கப் போகும் கனமழை!
Embed widget