TN Budget 2022: உக்ரைன் - ரஷ்ய போரால் பொருளாதார மீட்டெடுப்பு பணிகள் பாதிப்பு - அமைச்சர் பிடிஆர்
Tamil Nadu Budget 2022: திமுக தலைமையிலான அரசு தாக்கல் செய்யும் முழுமையான முதல் பட்ஜெட் இதுவாகும்.
2022-23 ஆம் ஆண்டுக்கான தமிழ்நாடு பட்ஜெட்டை நிதியமைச்சர் பழனிவேல் தியாகராஜன் இன்று தாக்கல் செய்தார். திமுக தலைமையிலான அரசு தாக்கல் செய்யும் முழுமையான முதல் பட்ஜெட் இதுவாகும்.
பட்ஜெட்டை தாக்கல் அமைச்சர் தனது உரையில் பல்வேறு அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இந்த நிலையில், உக்ரைன் - ரஷ்ய போரால் பொருளாதார மீட்டெடுப்பு பணிகள் பாதிக்கப்படக்கூடும் என்று நிதியமைச்சர் பி.டி.ஆர். பழனிவேல் தியாகராஜன் பட்ஜெட் தாக்கலில் அறிவித்துள்ளார்.
TN BUDGET 2022 LIVE | PTR-ன் முழு முதல் பட்ஜெட்-நேரலை! | MK Stalin | PTR Palanivel Thiagarajan | DMK https://t.co/99KxJWVr7L
— ABP Nadu (@abpnadu) March 18, 2022
முன்னதாக,இந்த கூட்டத்தொடரில் பங்கேற்றுள்ள எதிர்க்கட்சியான அ.தி.மு.க. அமளியில் ஈடுபட்டு வருகிறது. பட்ஜெட் தாக்கலுக்கு முன்பு பேச வாய்ப்பு அளிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் எடப்பாடி பழனிசாமி வாய்ப்பு கேட்டார்.
ஆனால், சபாநாயகர் அப்பாவு பேசுவதற்கு வாய்ப்பு அளிக்க மறுத்தார். இதனால், அ.தி.மு.க.வினர் அமளியில் ஈடுபட்டனர். அ.தி.மு.க.வினர் தொடர்ந்து அமளியில் ஈடுபட்டதால் நிதிநிலை அறிக்கையை படித்து வந்த நிதியமைச்சர் பட்ஜெட் வாசிப்பதை சில நிமிடங்கள் நிறுத்தி அமர்ந்தார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்