மேலும் அறிய

TN Agriculture Budget 2024 LIVE: இலவச மரக்கன்றுகள் முதல் பாசன மின் இணைப்பு வரை! தமிழக வேளாண் பட்ஜெட் முக்கிய அறிவிப்புகள் இதோ!

TN Agriculture Budget 2024 LIVE: தமிழ்நாடு அரசின் வேளாண் பட்ஜெட் தொடர்பான தகவல்களை உடனுக்குடன் அறிந்துகொள்ள, ABP இணைய செய்தி தளத்துடன் தொடர்ந்து இணைந்திருங்கள்

LIVE

Key Events
TN Agriculture Budget 2024 LIVE:  இலவச மரக்கன்றுகள் முதல் பாசன மின் இணைப்பு வரை! தமிழக வேளாண் பட்ஜெட் முக்கிய அறிவிப்புகள் இதோ!

Background

TN Agriculture Budget 2024: தமிழ்நாடு அரசின் 2024-25 நிதியாண்டிற்கான வேளாண் பட்ஜெடை, அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்கிறார்.

தமிழக அரசின் வேளாண் பட்ஜெட்:

தமிழ்நாடு அரசின் 2024-25 நிதியாண்டிற்கான பட்ஜெட்டை,  சட்டப்பேரவையில் அமைச்சர் தங்கம் தென்னரசு நேற்று தாக்கல் செய்தார். அதில் 7 அம்சங்களில் பல்வேறு தரப்பினருக்கான திட்டங்கள் தொடர்பான முக்கிய அறிவிப்புகள் இடம்பெற்று இருந்தன. இந்நிலையில் இன்று, தமிழக அரசின் வேளாண் பட்ஜெட் சட்டப்பேரவையில் இன்று தாக்கல் செய்யப்படுகிறது. வேளாண் அமைச்சர் எம்.ஆர்.கே. பன்னீர் செல்வம் இந்த பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். திமுக தலைமையில் 2021ம் ஆண்டு ஆட்சி அமைந்ததுமே முதலே,  தமிழக சட்டப்பேரவையில் வேளாண் பட்ஜெட் தனியாக தாக்கல் செய்யப்பட்டு வருவது குறிப்பிடத்தக்கது. 2023-24 ஆம் நிதி ஆண்டில் வேளாண் பட்ஜெட்டில் ரூ.38,904 கோடி நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது. 2024-25 நிதியாண்டிற்கான வேளாண் பட்ஜெட் சற்றே உயர்ந்து இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இதையும் படிங்க: TN Budget 2024: தமிழக அரசின் மொத்த பட்ஜெட் மதிப்பு ரூ.3.48 லட்சம் கோடி - நிதி பற்றாக்குறை எவ்வளவு தெரியுமா?

மக்களவை தேர்தல் தாக்கல் இருக்குமா?

வேளாண் பட்ஜெட்டில், வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல், வேளாண் வணிக பிரிவுக்கான திட்டங்கள் மட்டுமின்றி, கூட்டுறவு, பால்வளம், மீன்வளம், கால்நடை பராமரிப்பு மற்றும் மின்சாரம் உள்ளிட்ட விவசாயிகள் தொடர்புடைய துறைகளுக்கான திட்டங்களும் அறிவிக்கப்பட்டு வருகிறது. பொது பட்ஜெட்டில் பல்வேறு பிரிவினருக்கு அறிவிக்கப்பட்ட நலத்திட்டங்களை போன்று, இன்றைய வேளாண் பட்ஜெட்டில் தங்களுக்கான நலத்திட்டங்கள் இடம்பெறும் என விவசாயிகள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருக்கின்றனர். நாடாளுமன்ற மக்களவை தேர்தலும் நெருங்குவதால், வெற்றி, தோல்வியை தீர்மானிக்கும் சக்தி வாய்ந்த விவசாயிகளை கவரும் நோக்கில் கவர்ச்சிகரமான திட்டங்கள் இடம்பெறும் என எதிர்பார்க்கப்படுகிறது. 

தையும் படிங்க: TN Budget Highlights: அரசின் அட்டகாச பட்ஜெட்; முதல்வரின் முத்தான 15 முக்கிய திட்டங்கள் இவைதான்!

முக்கிய அறிவிப்புகள் வெளியாகுமா?

மூத்த விவசாயிகளுக்கு உதவித்தொகை வழங்குவது,  மண்வள மேம்பாட்டிற்கு முக்கியத்துவம் அளிப்பது, வேளாண் விளைபொருட்கள் உற்பத்தியை அதிகரிப்பது மற்றும் பயிர்களுக்கான குறைந்தபட்ச ஆதார விலை, காப்பீட்டு தொகையை விடுவிப்பது, கிராமங்கள் தோறும் உலர் களங்கள் அமைப்பது, நேரடி கொள்முதலை அதிகரிப்பது, அரசும் தனியாரும் இணைந்து ஒவ்வோர் ஊராட்சியிலும் உழவர் உதவி மையம், விவசாய மேலாண்மை மையங்களை செயல்படுத்துவது மற்றும் அரசு உதவிகள் பெறுவதில் உள்ள சிக்கல்களை தீர்ப்பது உள்ளிட்டவை தொடர்பான அறிவிப்புகள் வெளியாகுமா என விவசாயிகள் எதிர்பார்க்கின்றனர். கடந்த பட்ஜெட்டில் கரும்பு விவசாயிகளுக்கு பல்வேறு புதிய சலுகைகள் அறிவிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. 

11:53 AM (IST)  •  20 Feb 2024

TN Agriculture Budget 2024 LIVE: வேளாண் கண்காட்சி நடத்த ரூ.9 கோடி

விவசாயிகள், பொதுமக்கள் பயன்பெறும் வகையில் ரூ.9 கோடி செலவில் மூன்று இடங்களில் வேளாண் கண்காட்சிகள் நடத்தப்படும் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 

11:51 AM (IST)  •  20 Feb 2024

TN Agriculture Budget 2024 LIVE: ஆடு, கோழி வளர்ப்போருக்கு ரூ.200 கோடி வட்டி மானியம்

ஆடு, மாடு, கோழி, மீன் வளர்ப்போருக்கு நடைமுறை முதலீட்டுக் கடனுக்கான வட்டி மானியத்திற்கு ரூ.200 கோடி ஒதுக்கீடு - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் 

11:41 AM (IST)  •  20 Feb 2024

TN Agriculture Budget 2024 LIVE: பொருளீட்டுக்கடன் வரம்பு ரூ.5 லட்சமாக உயர்வு

பொருளீட்டுக்கடன் வரம்பு ரூ.3 லட்சத்தில் இருந்து ரூ.5 லட்சமாக உயர்த்தப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார்.  

11:43 AM (IST)  •  20 Feb 2024

TN Agriculture Budget 2024 LIVE: பண்ணை வழி வர்த்தகம் செய்ய ரூ.60 கோடி

விவசாயிகளுக்கு சிறந்த விலை கிடைக்க ரூ.60 கோடியில் விளைபொருட்களை பண்ணை வழி வர்த்தகம் செய்ய வழிவகை செய்யப்படும் - அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம்  

11:37 AM (IST)  •  20 Feb 2024

TN Agriculture Budget 2024 LIVE: மேலும் 10 பொருட்களுக்கு புவிசாய் குறியீடு பெறப்படும்

2024-25ஆம் ஆண்டில் மேலும் 10 பொருட்களுக்கு புவிசா குறியீடு பெறப்படும்.  சத்தியமங்கலம் செவ்வாழை, கொல்லிமலை மிளகு, மீனம்பூர் சீரக சம்பாவுக்கு புவிசார் குறியீடு பெற நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது என்று அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் தெரிவித்துள்ளார். 

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனாவுக்கு பதவி: 19 பேருக்கு பொறுப்புகளை வழங்கிய விஜய்
தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனாவுக்கு பதவி: 19 பேருக்கு பொறுப்புகளை வழங்கிய விஜய்
TVK : புஸ்ஸாகும் புஸ்ஸி ஆனந்த்! ஆதவ் எண்ட்ரியால் களேபரம்.. தவெகவில் நடப்பது என்ன?
TVK : புஸ்ஸாகும் புஸ்ஸி ஆனந்த்! ஆதவ் எண்ட்ரியால் களேபரம்.. தவெகவில் நடப்பது என்ன?
Kovai Sathyan: தவெக-வில் சேருகிறேனா? இதெல்லாம் அசிங்கம்! கோபப்பட்ட கோவை சத்யன்
Kovai Sathyan: தவெக-வில் சேருகிறேனா? இதெல்லாம் அசிங்கம்! கோபப்பட்ட கோவை சத்யன்
Feb 2025 Govt Holidays: தொடங்கும் பிப்ரவரி; எந்தெந்த நாட்களில் அரசு விடுமுறை தெரியுமா?
Feb 2025 Govt Holidays: தொடங்கும் பிப்ரவரி; எந்தெந்த நாட்களில் அரசு விடுமுறை தெரியுமா?
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

புஸ்ஸான புஸ்ஸி ஆனந்த்! நம்பர் 2 ஆகும் ஆதவ்! விஜய் போட்ட கண்டிஷன்மோதும் அண்ணாமலை நயினார்! களத்தில் இறங்கும் அமித்ஷா! பரபரக்கும் கமலாலயம்ஓரங்கட்டிய சீமான்! அப்செட்டான காளியம்மாள்! உடனே அழைத்த விஜய்Parasakthi Title Issue |

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனாவுக்கு பதவி: 19 பேருக்கு பொறுப்புகளை வழங்கிய விஜய்
தவெகவில் இணைந்த ஆதவ் அர்ஜூனாவுக்கு பதவி: 19 பேருக்கு பொறுப்புகளை வழங்கிய விஜய்
TVK : புஸ்ஸாகும் புஸ்ஸி ஆனந்த்! ஆதவ் எண்ட்ரியால் களேபரம்.. தவெகவில் நடப்பது என்ன?
TVK : புஸ்ஸாகும் புஸ்ஸி ஆனந்த்! ஆதவ் எண்ட்ரியால் களேபரம்.. தவெகவில் நடப்பது என்ன?
Kovai Sathyan: தவெக-வில் சேருகிறேனா? இதெல்லாம் அசிங்கம்! கோபப்பட்ட கோவை சத்யன்
Kovai Sathyan: தவெக-வில் சேருகிறேனா? இதெல்லாம் அசிங்கம்! கோபப்பட்ட கோவை சத்யன்
Feb 2025 Govt Holidays: தொடங்கும் பிப்ரவரி; எந்தெந்த நாட்களில் அரசு விடுமுறை தெரியுமா?
Feb 2025 Govt Holidays: தொடங்கும் பிப்ரவரி; எந்தெந்த நாட்களில் அரசு விடுமுறை தெரியுமா?
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு செய்முறைத் தேர்வு தேதிகள் அறிவிப்பு- முக்கிய விதிகள் என்ன?
பத்தாம் வகுப்பு பொதுத்தேர்வு செய்முறைத் தேர்வு தேதிகள் அறிவிப்பு- முக்கிய விதிகள் என்ன?
மத்திய பட்ஜெட்டில் இதை உறுதி செய்யணும் - விவசாயிகள் வலியுறுத்தியது என்ன?
மத்திய பட்ஜெட்டில் இதை உறுதி செய்யணும் - விவசாயிகள் வலியுறுத்தியது என்ன?
உள்துறை செயலாளர் ஆஜராக வேண்டும்; இல்லையேல் பிடிவாரண்ட் – எச்சரித்த நீதிபதி – ஏன்? எதற்கு?
உள்துறை செயலாளர் ஆஜராக வேண்டும்; இல்லையேல் பிடிவாரண்ட் – எச்சரித்த நீதிபதி – ஏன்? எதற்கு?
TVK: வெயிட்டான ஆட்களை தூக்கிய விஜய்.. ஆதவ் அர்ஜுனாவுடன் காளியம்மாளும் தவெகவிற்கு ஜம்ப் - எடப்பாடி ஷாக்
TVK: வெயிட்டான ஆட்களை தூக்கிய விஜய்.. ஆதவ் அர்ஜுனாவுடன் காளியம்மாளும் தவெகவிற்கு ஜம்ப் - எடப்பாடி ஷாக்
Embed widget