TN Farm Budget 2022: பனை ஏறும் கருவி கண்டுபிடிப்போருக்கும், துறையில் சிறந்தவருக்கும் பரிசு : வேளாண்துறை அமைச்சர்
வேளாண்மைத்துறையில் சிறந்து விளங்கும் விவசாயிகளுக்கு பரிசு வழங்கப்படும் என்று அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் அறிவித்துள்ளார்.
தமிழ்நாடு அரசின் 2022-2023-ஆம் நிதியாண்டிற்கான பட்ஜெட் நேற்று சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. இதை நிதியமைச்சர் பி.டி.ஆர் பழனிவேல் தியாகராஜன் நேற்று தாக்கல் செய்தார். அந்தப் பட்ஜெட்டில் பல முக்கியமான அறிவிப்புகள் வெளியாகியின. இருப்பினும் பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட சில அறிவிப்புகள் வெளியாகவில்லை என்று எதிர்க்கட்சிகள் மற்றும் சிலர் குற்றம்சாட்டி வந்தனர்.
இந்நிலையில் நேற்று பொது பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட பிறகு சபாநாயகர் அப்பாவு தலைமையிலான அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் நடைபெற்றது. அதில் சில முடிவுகள் எடுக்கப்பட்டது. அதில், இன்று வேளாண்துறையின் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதாக அறிவிக்கப்பட்டது. அதன்படி, இந்த வேளாண் பட்ஜெட்டை இன்று காலை 10 மணி முதல் வேளாண்துறை அமைச்சர் எம்.ஆர்.கே பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் தாக்கல் செய்து வருகிறார்.
அவர் அறிவித்த பட்ஜெட்டில், விவசாயிகளை ஊக்குவிக்கும் வகையில் பல புதிய அறிவிப்புகள் வெளியிடப்பட்டது. அதில், பனை மரம் ஏறும் கருவி கண்டுபிடிப்பவர்களுக்கு பரிசு வழங்கப்படும் என்று தெரிவித்தார். தொடர்ந்து வெளியிட்ட அறிக்கை பின்வருமாறு :
உழவர் பெருமக்களுக்கு வேளாண் கருவிகள் வழங்குதல் :
விவசாயப் பெருமக்கள் மத்தியில் வரவேற்பைப் பெற்றுள்ள " வேளாண் கருவிகள் தொகுப்பு" 2022-23 ஆண்டிலும் அரை இலட்சம் சிறு, குறு விவசாயிகளுக்கு ரூபாய் மானியத்தில் வழங்கப்பட இருக்கிறது.
இளைஞர்களை வேளாண் தொழில் முனைவோராக்குதல் :
வேளாண்மை, தோட்டக்கலை, வேளாண் பொறியியல் பட்டப்படிப்பு படித்த 200 இளைஞர்களுக்கு, 2022-23 ஆம் நிதி ஆண்டில் இரண்டு கோடி ரூபாய் மதிப்பீட்டில் அக்ரி கிளினிக் அல்லது வேளாண் சார்ந்த தொழில் தொடங்குவதற்கு பட்டதாரி ஒருவருக்கு ஒரு இலட்சம் ரூபாய் வீதம் நிதி உதவி வழங்கப்பட இருக்கிறது.
ஊரக இளைஞர்களுக்குத் திறன் மேம்பாட்டுப் பயிற்சி :
விவசாயம், விவசாயம் சார்ந்த தொழிலை இலாபகரமாக மாற்ற, இரண்டு ஆயிரத்து 500 ஊரக இளைஞர்களுக்கு திறன் மேம்பாட்டுப் பயிற்சிகள் கடந்த ஆண்டைப் போலவே 2022-23 ஆம் ஆண்டிலும் வழங்கப்பட இருக்கிறது.
வேளாண்மையில் சிறப்பாகச் செயலாற்றும் விவசாயிகளுக்குப் பரிசு :
இயற்கை வேளாண்மை, விளைபொருள் ஏற்றுமதி, புதிய ள்ளூர் கண்டுபிடிப்புகளில் சிறந்து விளங்கும் விவசாயிகளை இந்த அரசு தொடர்ந்து ஊக்குவித்து பரிசு அளிக்கும் என்றும், பாராட்டி மகிழும் என்றும் தெரிவிக்கப்பட்டது.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்