(Source: ECI/ABP News/ABP Majha)
TN Farm Budget 2022: தக்காளி விலையை குறைக்க நடவடிக்கை.. உதவித்தொகை விவரம் பட்ஜெட்டில் அறிவிப்பு..
தேன் முருங்கை, கொடி தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை சாகுபடி செய்ய ஏக்கருக்கு ரூ.8000 வீதம் உதவித்தொகை வழங்கப்படும்
தக்காளி விலையை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கப்படும் என்று பட்ஜெட் உரையின் அமைச்சர் பன்னீர்செல்வம் கூறினார்.
2022-23ஆம் ஆண்டுக்கான வேளாண் பட்ஜெட்டை தமிழ்நாடு சட்டப்பேரவையில் வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் இன்று தாக்கல் செய்தார். அவர் வேளாண் சார்ந்த பல அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். அதில், காய்கறிகளில் பாரம்பரிய ரகங்களை மீட்டெடுக்க ரூ.2 கோடியும், பருவம் இல்லாத தக்காளி சாகுபடியை ஊக்குவிக்க ரூ.4 கோடியும் ஒதுக்கீடு செய்யப்படும் என்று கூறினார். தமிழ்நாட்டில் கண்ணாடி கத்திரி, வாசுதேவநல்லூர் கத்திரி, வைகை கத்திரி ஆகிய ரகங்களின் உற்பத்தியை அதிகரிக்க திட்டமிட்டுள்ளதாகவும், தேன் முருங்கை, கொடி தக்காளி உள்ளிட்ட காய்கறிகளை சாகுபடி செய்ய ஏக்கருக்கு ரூ.8000 வீதம் உதவித்தொகை வழங்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்துள்ளார்.
TN Agriculture Budget 2022 LIVE: இலவச தென்னங்கன்று... வேளாண் செய்யும் இளைஞர்களுக்கு நிதி உதவி... வேளாண் பட்ஜெட் அறிவிப்புகள் இதோ
மேலும், தென்னை, மா, கொய்யா, வாழை உள்ளிட்டவை பயிரிட்டுள்ள விவசாயிகளுக்கு 38,000 ஏக்கர் பரப்பளவில் ரூ.27.51 கோடியில் ஊடுபயிர் சாகுபடியை ஊக்குவித்தல் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும், தேனீக்கள் வளர்ப்பை ஊக்குவிக்க 37 தேனீ தொகுப்புகள் 8.51 கோடி ரூபாய் ஒதுக்கீட்டில் செயல்படுத்தப்படும் எனவும் கூறினார். ஆடு, மாடு, கோழி உள்ளிட்ட வேளாண் சார்ந்த தொழில்களை ஊக்கப்படுத்த 65 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்படும் என்றும், எண்ணெய் வித்து சாகுபடியை அதிகப்படுத்த 28 கோடி ரூபாய் ஒதுக்கீடு எனவும் கூறினார்.
முன்னதாக, வேளாண் பட்டப்படிப்பு முடித்த 200 இளைஞர்களுக்கு அக்ரி கிளினிக் அல்லது வேளாண் சார்ந்த தொழில் தொடங்க நிதி உதவி வழங்கப்படும் என்றும், 200 இளைஞர்களுக்கு தலா ரூ.1 லட்சம் வீதம் 2 கோடி ரூபாய் நிதியுதவி வழங்கப்படும் என்றும் அமைச்சர் அறிவித்தார்.
மேலும், கிராமங்களில் வீடுகளுக்கு இலவச தென்னங்கன்று வழங்கும் திட்டம் ரூ.300 கோடியில் செயல்படுத்தப்படும் என்றும், முதல் கட்டமாக 3200 கிராம ஊராட்சிகளில் அண்ணா மறுமலர்ச்சித் திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் கூறினார்.
மேலும் செய்திகளை காண, ABP நாடு செய்திகளை Google News -ல் பின் தொடர இங்கே கிளிக் செய்யவும்
ABP நாடு செய்திகளை சமூக வலைத்தள பக்கங்களிலும் பின் தொடரலாம்