மேலும் அறிய
Advertisement
President Speech: இதுவரை மக்களுக்கு மத்திய அரசு செய்தது என்ன? - தெரிந்து கொள்ள வேண்டிய ஜனாதிபதி உரையின் சிறப்பம்சங்கள்!
Budget 2023: புதிய இந்தியாவை உருவாக்க அடுத்த 25 ஆண்டுகள் முக்கியம் என்று குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பேசியுள்ளார்.
நாடாளுமன்றத்தில் இரு அவை உறுப்பினர்கள் முன்னிலையிலும் குடியரசுத் தலைவர் திரௌபதி முர்மு பேசினார். அப்போது, அவர் பேசியதாவது,
“இந்தியாவின் டிஜிட்டல் வளர்ச்சி, உலக நாடுகளுக்கு முன்னுதாரணமாக திகழ்கிறது. அனைத்து தரப்பினருக்கும் நிலையான, சீரான வளர்ச்சியே அரசின் இலக்கு. புதிய இந்தியாவை கட்டமைக்க அடுத்து வரும் 25 ஆண்டகள் மிகவும் முக்கியமானதாகும்.
- ஜி.எஸ்.டி. வரி, ஆயுஷ்மான் திட்டம் போன்றவை இந்தியாவின் முதுகெலும்பாக திகழ்கின்றன.
- கொரோனா பரவல் காலத்தில் 80 கோடி மக்களுக்கு இலவச உணவு பொருட்கள் வழங்கப்பட்டன. அடித்தட்ட மக்களின் வாழ்வாதாரத்தை மேம்படுத்த மத்திய அரசு முக்கியத்துவம் அளித்து வருகிறது.
- சுமார் 3 கோடி ஏழைகளுக்கு இலவசமாக வீடுகளை மத்திய அரசு கட்டிக்கொடுத்துள்ளது.
- கொரோனா பெருந்தொற்று காலத்தில் ஏழைகளை கேடயம் போல மத்திய அரசு பாதுகாத்துள்ளது.
- மத்திய அரசின் நடவடிக்கையால் இந்தியா விரைவில் ஊழல் இல்லாத நாடாக மாறும்.
- பிற்படுத்தப்பட்ட வகுப்பினரின் எதிர்பார்ப்புகளை மத்திய அரசு பூர்த்தி செய்து வருகிறது.
- சிறு மற்றும் குறு விவசாயிகளுக்கு ரூபாய் 2.25 லட்சம் கோடி நிதி உதவி செயயப்பட்டுள்ளது.
- விளைபொருட்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலையை மத்திய அரசு உறுதி செய்துள்ளது.
- ஏழைகளின் பிரச்சினைகளுக்கு நிரந்தர தீர்வு கண்டு, வாழ்வாதாரத்த உயர்த்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
- நாடு முழுவதும் 11 கோடி வீடுகளுக்கு குழாய் மூலம் குடிநீர் இணைப்பு வசதி செய்யப்பட்டுள்ளது.
- நாட்டு மக்களுக்கு வெளிப்படைத் தன்மையுடன் ரூபாய் 27 லட்சம் கோடி நிதி வழங்கப்பட்டுள்ளது.
- மத்திய அரசின் உதவியால் கொரோனா காலத்தில் கோடிக்கணக்கான மக்கள் வறுமையில் சிக்காமல் மீட்கப்பட்டுள்ளனர்.
- உலகநாடுகளுடன் ஒப்பிடும்போது இந்தியாவின் நிலை தற்போது சிறப்பாக உள்ளது.
- ஜம்மு காஷ்மீரில் பயங்கரவாதம் ஒழிக்கப்பட்டு சுற்றுலா மேம்படுத்தப்பட்டுள்ளது.
- நாட்டின் ஒவ்வொரு துறைகளிலும் பெண்களின் பங்களிப்பு இருப்பதை மத்திய அரசு உறுதி செய்துள்ளது.
- ஜல்ஜீவன் திட்டத்தின் கீழ் நாடு முழுவதும் 11 கோடி மக்களுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்பட்டுள்ளது.
- நாட்டில் இருந்த காலனி கால அடிமைத்தன அடையாளங்கள் மத்திய அரசால் அகற்றப்பட்டுவிட்டன.
இவ்வாறு அவர் பேசினார்.
சமீபத்திய வர்த்தக செய்திகளையும், ட்ரெண்டிங் செய்திகளையும், அறிய Abpnadu-இல் வணிக செய்திகளைத் (Tamil Business News) தொடரவும்.
மேலும் காண
Advertisement
தலைப்பு செய்திகள்
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
தமிழ்நாடு
Advertisement
Advertisement
ட்ரெண்டிங் செய்திகள்
Advertisement
வினய் லால்Columnist
Opinion