Richest Indian : உலகின் டாப் 10 பணக்காரர்கள் பட்டியல்... அதானியை ஓரம் கட்டிய அம்பானி.... பட்ஜெட் உரையில் அமைச்சர் சொன்னது என்ன?
உலகின் டாப் 10 பணக்கார பட்டியிலில் இருந்து அதானினை பின்னுக்கு தள்ளிய முகேஷ் அம்பானி என்று பட்ஜெட் உரையில் நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.
கவுதம் அதானி 10ஆம் இடம்
இந்த வார தொடக்கத்தில் உலகின் டாப் 3 பணக்காரர்களில் ஒருவராக இருந்த இந்தியாவின் கவுதம் அதானி, பங்குச்சந்தையில் ஏற்பட்ட தடாலடி வீழ்ச்சியின் காரணமாக, உலக மெகா கோடீஸ்வரர்கள் வரிசையில் 10ஆம் இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார். சரியான மதிப்பீடு இல்லாவிட்டாலும், கிட்டத்தட்ட பல லட்சம் கோடி ரூபாய் இழப்பு சில தினங்களிலேயே அவரது சொத்து மதிப்பில் ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் அவரது சொத்து மதிப்பு குறைந்துள்ளது.
இந்நிலையில் அமெரிக்காவைச் சேர்ந்த ஹிண்டன்பர்க் நிறுவனம் கடந்த ஜனவரி 24ஆம் தேதி ஆய்வறிக்கை ஒன்று வெளியிட்டிருந்தது. ஆய்வறிக்கை வெளியிட்ட ஒரு வாரத்திற்குள்ளேயே அதானியின் சொத்து மதிப்பு 34.6 பில்லியன் டாலர்கள் வீழ்ச்சியடைந்துள்ளது. அதானி குழுமத்தின் சந்தை மதிப்பில் ரூ.5.57 லட்சம் கோடியை இழந்தது என்று கூறப்படுகிறது.
முகேஷ் அம்பானி 9ஆம் இடம்
இந்தியாவின் 2023-2024ம் ஆண்டுக்கான நிதிநிலை அறிக்கையை மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்து அறிவிப்புகளை வெளியிட்டு வருகிறார். இந்தியாவின் கடந்த கால பொருளாதார வளர்ச்சிகளுடன், புதிய அறிவிப்புகளையும் வெளியிட்டு பேசி வரும் நிர்மலா சீதாராமன் பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசும்போது, முகேஷ் அம்பானி மற்றும் கவுதம் அதானி பற்றி பேசினார்.
அப்போதுஅவர் கூறியதாவது, 84.3 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் உலகப் பணக்காரர்கள் பட்டியலில் முகேஷ் அம்பானி 9வது இடத்தில் உள்ளார். 84.1 பில்லியன் டாலர் சொத்து மதிப்புடன் கௌதம் அதானி 10வது இடத்திற்கு தள்ளப்பட்டுள்ளார் என்று பேசியுள்ளார்.
Mukesh Ambani overtakes Gautam Adani as the richest Indian in the world according to the Forbes Real-time Billionaires list. pic.twitter.com/fczk8MXtSq
— ANI (@ANI) February 1, 2023
அதானி பங்குகள் நிலவரம்
பட்ஜெட் தாக்கலுக்கு பிறகு அதானி குழுமத்தை சேர்ந்த 9 நிறுவனங்களின் பங்குகளும் தொடர்ந்து கடும் வீழ்ச்சி அடைந்து வருகின்றன. அதன்படி,
குழுமத்தின் பிரதான நிறுவனமான அதானி என்டர்பிரைசஸ் பங்குகள் விலை 20 சதவீதம் வீழ்ச்சி அடைந்துள்ளது. அதானி டோட்டல் கேஸ் நிறுவன பங்கு விலை ரூ.211 குறைந்து ரூ.1,897 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. அதானி டிரான்ஸ்மிஷன் பங்கு விலை ரூ.177 சரிந்து ரூ.1,595 ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. அதானி கிரீன் எனர்ஜி பங்குகள் விலை ரூ.121 சரிந்து ரு.1,103 ஆக உள்ளது. அதானி போர்ட் நிறுவன பங்கு விலை ரூ.57 குறைந்து ரூ.555ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது. அதானி பவர் நிறுவன பங்கு விலை ரூ.11 குறைந்து ரூ.213ஆ இருக்கிறது. அதானி வில்மர் பங்கு விலை ரூ.23 குறைந்து ரூ.443ஆக வீழ்ச்சி அடைந்துள்ளது.
அதானியின் பங்குகள் தொடர் சரிவில் சென்றுள்ளது அனைவரையும் அதிர்ச்சி அடைய வைத்துள்ளது. மேலும் உலக பணக்காரர் பட்டியலில் 10ஆம் இடத்தை தாண்டி செல்லாம் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது.