மேலும் அறிய

Household Consumer Expenditure: 10 ஆண்டுகளில் இரட்டிப்பான மாதாந்திர குடும்ப செலவு, தனிநபருக்கு இவ்வளவா? - ஆய்வில் தகவல்

Household Consumer Expenditure: இந்தியாவில் மாதாந்திர குடும்ப செலவு இரண்டு மடங்கு அதிகரித்து இருப்பதாக, மத்திய அரசின் ஆய்வறிக்கையில் தெரிய வந்துள்ளது.

Household Consumer Expenditure: இந்தியாவில் மாதாந்திர குடும்ப செலவு இரண்டு மடங்கு அதிகரித்து இருப்பது, தேசிய புள்ளியல் அலுவலகத்தின் ஆய்வில் தெரிய வந்துள்ளது.

மாதாந்திர செலவு தொடர்பான ஆய்வறிக்கை:

கடந்த  11 ஆண்டுகளில் முதல் முறையாக ஆகஸ்ட் 2022 மற்றும் ஜூலை 2023 க்கு இடையிலான காலகட்டத்தில்,  மேற்கொள்ளப்பட்ட அகில இந்திய குடும்ப நுகர்வு செலவின கணக்கெடுப்பின் விவரங்களை மத்திய அரசு வெளியிட்டுள்ளது.  முக்கியமான பொருளாதார குறியீடுகளான மொத்த உள்நாட்டு உற்பத்தி (GDP), வறுமை நிலைகள் மற்றும் நுகர்வோர் விலை பணவீக்கம் (CPI) ஆகியவற்றை மதிப்பாய்வு செய்வதில் இந்த தரவுகள் முக்கிய பங்கு வகிக்கின்றன. குடும்ப நுகர்வுச் செலவுக் கணக்கெடுப்பு வழக்கமாக தேசிய புள்ளியியல் அலுவலகத்தால் ஐந்தாண்டுகளுக்கு ஒருமுறை நடத்தப்படும்.  ஆனால் கடந்த 2017-18 ஆம் ஆண்டில் பண மதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டி வரி வசூல் அமல்படுத்தப்பட்ட பிறகு, நடத்திய ஆய்வில் தரவுகளின் தரத்தில் சிக்கல் இருப்பதாக கூறி முடிவுகளை மத்திய அரசு வெளியிடவில்லை. இந்நிலையில், 11 ஆண்டுகளுக்குப் பிறகு இந்திய குடும்ப நுகர்வு செலவின கணக்கெடுப்பின் விவரங்கள் வெளியாகியுள்ளது. அதன்படி, நாட்டில் தனிநபர் மாதாந்திர குடும்ப செலவு கடந்த 10 அண்டுகளில் இரு மடங்காக அதிகரித்துள்ளது.

இரண்டு மடங்காக அதிகரித்த செலவினங்கள்:

நாட்டில் உள்ள அனைத்து மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களைச் சேர்ந்த, 2,61,746 குடும்பங்களிடம் இருந்து தரவுகளை பெற்று இந்த ஆய்வு செய்யப்பட்டுள்ளது. அதில் 1,55,014 குடும்பங்கள் கிராமப்புறங்களை சேர்ந்தவையகும். ஆய்வின்படி, இந்திய குடும்பங்களில் சராசரி மாதாந்திர தனிநபர் நுகர்வுச் செலவு (MPCE) நகர்ப்புற குடும்பங்களில்,  2011-12 காலகட்டத்தை காட்டிலும் 33.5% அதிகரித்து ரூ.3,510 ஆக உள்ளது. அதேநேரம், கிராமப்புறங்களில் MPCE 40.42 சதவிகிதம் அதிகரித்து ரூ. 2,008-ஐ எட்டியுள்ளது. 2011-12ல் 52.9% ஆக இருந்த கிராமப்புற குடும்பங்களுக்கு உணவுக்கான செலவின விகிதம் 46.4% ஆகக் குறைந்துள்ளது. அதே நேரத்தில் நகர்ப்புற மக்களின் மொத்த மாதாந்திர செலவில் வெறும் 39.2% உணவுக்காக செலவழித்துள்ளனர்.

ஆய்வின்படி, தற்போதைய விலையில் சராசரி தனிநபர் மாதாந்திர குடும்ப செலவு நகர்ப்புறங்களில் கடந்த 2011-12-ஆம் ஆண்டில் ரூ.2,630- லிருந்து கடந்த 2022-23-ஆம் ஆண்டில் ரூ.6,459-ஆக இருமடங்காக அதிகரித்துள்ளது. அதேபோல், கிராமப்புறங்களில் ரூ.1,430-லிருந்து ரூ.3,773-ஆக உயர்ந்துள்ளது. ஆனால், இதே காலகட்டத்தில் தனிநபர் வருமானம் நகர்ப்புறங்களில் 1.3 மடங்கும், கிராமப்புறங்களில் 1.4 மடங்கும் மட்டுமே அதிகரித்துள்ளது.

தமிழக நிலவரம்:

மாநிலங்களில் சிக்கிமில் அதிகபட்சமாக கிராமப்புறத்தில் சராசரியாக ரூ.7,731-யும், நகர்ப்புறத்தில் சராசரியாக ரூ.12,105-யும் மாதம் ஒரு குடும்பத்தால் செலவிடப்படுகிறது.  மிகக் குறைவாக சத்தீஸ்கரில் கிராமப்புற குடும்பங்கள் சராசரியாக ரூ.2,466-யும், நகர்ப்புற குடும்பங்கள் சராசரியாக ரூ.4,483-யும் மாதம் ஒரு குடும்பத்தால் செலவிடப்படுகிறது. தமிழ்நாட்டில் கிராமப்புறங்களில் மாதம் ரூ.5,310 மற்றும் நகர்ப்புறங்களில் மாதம் ரூ.7,630 சராசரியாக செலவிடப்படுகிறது. ஆந்திராவில் முறையே ரூ.4,870 மற்றும் ரூ.6,782 செலவிடப்படுகிறது. 

Enthusiastic Journalist Kulasekaran Munirathnam, who has worked in leading news organizations, has 8 years of experience in the media industry. He entered the media industry on his own volition after completing his studies in Mechanical Engineering. He researches and provides accurate and detailed updated news on automobiles, which play a vital role in people's daily commute, financial advice for future savings, and infrastructure for development. In addition, he brings information related to politics and international events to the public through news. He works as an Associate Producer on the ABP NADU Tamil website.
Read
மேலும் படிக்கவும்
Sponsored Links by Taboola

தலைப்பு செய்திகள்

Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? இதில் இவ்ளோ லாபம் இருக்கா? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? இதில் இவ்ளோ லாபம் இருக்கா? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு
Radha Nagar Subway: 15 வருட இழுபறி.. சென்னை ராதாநகர் சுரங்கப்பாதை ரெடி, ட்ராஃபிக் ஓவர், ரூ.32 கோடி, ஜன.7 திறப்பு
Radha Nagar Subway: 15 வருட இழுபறி.. சென்னை ராதாநகர் சுரங்கப்பாதை ரெடி, ட்ராஃபிக் ஓவர், ரூ.32 கோடி, ஜன.7 திறப்பு
BiggBoss Tamil 9: கம்ருதீன் கையில கிடைச்சா அவ்ளோதான்.. கடுப்பில் பிரஜின்!
BiggBoss Tamil 9: கம்ருதீன் கையில கிடைச்சா அவ்ளோதான்.. கடுப்பில் பிரஜின்!
Hyundai Venue: பேய் ஓட்டம் ஓடிட்டு இருக்கு.. இதுல வென்யு புது எடிஷனுமா.. கூடுதல் அம்சங்கள், HX5+ விலை, விவரங்கள்
Hyundai Venue: பேய் ஓட்டம் ஓடிட்டு இருக்கு.. இதுல வென்யு புது எடிஷனுமா.. கூடுதல் அம்சங்கள், HX5+ விலை, விவரங்கள்
ABP Premium

வீடியோ

Police Helps Pregnant Women|'’மனைவிக்கு பிரசவ வலி’’DRUNK & DRIVEல் வந்த கணவன் போலீஸ் நெகிழ்ச்சிசெயல்
Tambaram Boys Atrocity | பட்டாக்கத்தி உடன் REELSதாம்பரம் சிறுவர்கள் அராஜகம்தட்டித்தூக்கிய போலீஸ்
Jananayagan Bhagavanth Kesari | பகவந்த் கேசரி ரீமேக்கா? ஜனநாயகன் பட சீக்ரெட்! இயக்குநர் OPENS UP
Manickam Tagore | ”வைகோ, திருமா தலையிடாதீங்க” மாணிக்கம் தாகூர் பரபர POST! நடந்தது என்ன?
DMK Congress Alliance | ”ஆட்சியில பங்கு கேட்காதீங்க” முடிவு கட்டிய திமுக! ப.சிதம்பரத்திடம் மெசேஜ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? இதில் இவ்ளோ லாபம் இருக்கா? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு
Old Pension Scheme: மீண்டும் பழைய ஓய்வூதிய திட்டம்? இதில் இவ்ளோ லாபம் இருக்கா? முதலமைச்சர் ஸ்டாலின் இன்று அறிவிப்பு
Radha Nagar Subway: 15 வருட இழுபறி.. சென்னை ராதாநகர் சுரங்கப்பாதை ரெடி, ட்ராஃபிக் ஓவர், ரூ.32 கோடி, ஜன.7 திறப்பு
Radha Nagar Subway: 15 வருட இழுபறி.. சென்னை ராதாநகர் சுரங்கப்பாதை ரெடி, ட்ராஃபிக் ஓவர், ரூ.32 கோடி, ஜன.7 திறப்பு
BiggBoss Tamil 9: கம்ருதீன் கையில கிடைச்சா அவ்ளோதான்.. கடுப்பில் பிரஜின்!
BiggBoss Tamil 9: கம்ருதீன் கையில கிடைச்சா அவ்ளோதான்.. கடுப்பில் பிரஜின்!
Hyundai Venue: பேய் ஓட்டம் ஓடிட்டு இருக்கு.. இதுல வென்யு புது எடிஷனுமா.. கூடுதல் அம்சங்கள், HX5+ விலை, விவரங்கள்
Hyundai Venue: பேய் ஓட்டம் ஓடிட்டு இருக்கு.. இதுல வென்யு புது எடிஷனுமா.. கூடுதல் அம்சங்கள், HX5+ விலை, விவரங்கள்
பாலியல் வன்கொடுமை.. 19 வயது மாணவியின் வாழ்க்கையை நாசமாக்கிய பேராசிரியர்.. உயிரும் போச்சு!
பாலியல் வன்கொடுமை.. 19 வயது மாணவியின் வாழ்க்கையை நாசமாக்கிய பேராசிரியர்.. உயிரும் போச்சு!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
JCD Prabhakar: தவெகவில் அதிமுக முன்னாள் எம்.எல்.ஏ., ஜேசிடி பிரபாகரன்.. தனித்து விடப்படும் ஓபிஎஸ்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
ரெடியா மக்களே! தமிழகமெங்கும் 'குறள்' புயல்! வியக்கவைக்கும் அரசு ஏற்பாடுகள்!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
திருப்பரங்குன்றம் கந்தூரி விழா: தடை கோரிய வழக்கில் பரபரப்பு.. பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவு!
Embed widget