Stock Market:Stock Market: முதலீட்டாளர்கள் கவனத்திற்கு..பிப்.1-ம் தேதி பட்ஜெட் தாக்கல் - பங்குச்சந்தை செயல்படும்!
Budget 2025 Stock Market: பிப்ரவரி 1-ம் தேதி பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருப்பதால் பங்குச்சந்தையில் சிறப்பு வர்த்தகம் நடைபெறுகிறது.

நாடாளுமன்றத்தில் பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்ட உள்ளதால், பிப்ரவரி 1-ம் தேதி இந்திய பங்குச்சந்தை செயல்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.
பிப்ரவரி 1-ம் தேதி பங்குச்சந்தை செயல்படுமா?
இந்திய பங்குச்சந்தைக்கு வார இறுதி நாட்களான சனிக்கிழமை, ஞாயிற்று கிழமையில் விடுமுறை. 2025-26-ம் நிதியாண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட இருப்பதால் பிப்ரவரி-1ம் தேதி பங்குச்சந்தை செயபடும் என National Stocl Exchange Of India Limited தெரிவித்துள்ளது. இந்திய பங்குச்சந்தை வழக்கும்போல் செயல்படும் என்று அறிவிக்கப்பட்டது.
- Pre-market trading: 9:00 am to 9:08 am
- Regular session: 9:15 am to 3:30 pm
சனிக்கிழமையிலும் செயல்படுவது ஏன்?
வார இறுதி நாளான சனிக்கிழமையில் இந்திய பங்குச்சந்தை செயல்படுவது ஏன்? பட்ஜெட் தாக்கல் போன்ற பெரிய நிகழ்வு நடைபெறும்போது முதலீட்டாளர்கள் வர்த்தகத்தில் ஈடுபட விரும்புவதை நோக்கத்தில் கொண்டு செயல்படுகிறது. வருமான வரி விகிதத்தில் மாற்றம், புதிய அறிவிப்புகள் ஆகியவை பங்குச்சந்தையில் மாற்றத்தை ஏற்படுத்தும்.
நிகழ் நேரத்தில் நிதி துறையில் நடைபெரும் முன்னேற்றங்கள், அறிவிப்புகளின் தாக்கம் பங்குச்சந்தையில் தாக்கத்தை ஏற்படுத்தும். இந்த நேரத்தில் முதலீட்டாளர்கள் வர்த்தகத்தில் ஈடுபட விரும்பவதும் இதற்கு காரணம்.
2020, பிப்ரவரி 1, பட்ஜெட் தாக்கல் மற்றும் 2015ல் பிப்ரவர் 28-ம் தேதி தாக்கல் செய்யப்பட்ட பட்ஜெட் இரண்டும் வார இறுதி நாட்களில்தான். அப்போதும் பங்குச்சந்தை வழக்கம்போல் செயல்பட்டது.
மத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் 2025:
நாடாளுமன்ற பட்ஜெட் கூட்டத்தொடர் முதல் அமர்வு ஜனவரி 31-ம் முதல் பிப்ரவரி 13-ம் தேதி வரை நடைபெறுகிறது. பிப்ரவரி, 1-ம் தேதி நாடாளுமன்றத்தில் நிர்மலா சீதாராமன் பொது பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். எட்டாவது முறையாக மக்களவையில் பட்ஜெட் உரையை தாக்கல் செய்ய இருக்கிறார்.
பட்ஜெட் கூட்டத்தொடர் 31-ம் தேதி வரை முதல் பிப்ரவரி 13-ம் தேதி வரை நடைபெறும். அடுத்து மார்ச் 10ம் தேதி நாடாளுமன்றம் மீண்டும் கூடும். நாடாளுமன்ற கூட்டத்தொடர் ஏப்ரல் 4-ம் தேதி முடிவடையும்.
நிபுணர்கள் சொல்வது என்ன?
பட்ஜெட் அறிவிப்புகளைப் பொறுத்து பங்குச்சந்தையில் மாற்றம் நிகழும். அதற்கேற்றவாறு முதலீட்டாளர்கள் கவனமுடன் வர்த்தகத்தில் ஈடுபட வேண்டும்.
மேலும் வாசிக்க..
Budget 2025: ராணுவத்தில் ட்ரோன்கள்: பாதுகாப்புக்கு கூடுதலாக நிதி ஒதுக்க திட்டமிட்டுள்ள இந்திய அரசு.!

