Union Budget 2022 | 1947 முதல் 2022 வரை… மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்தவர்கள் யார் யார்?
ஏப்ரல் 1ல் தொடங்கி அடுத்த ஆண்டு மார்ச் 31ல் முடிவடையும் நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நாட்டின் நிதி அமைச்சராக இருப்பவர் தாக்கல் செய்வார். சுதந்திரம் அடைந்தது முதல் இன்றுவரை பட்ஜெட் தாக்கல் செய்தவர்கள்:
இந்திய நாடாளுமன்றத்தின் 2022-23 நிதியாண்டுக்கான பட்ஜெட் (நிதிநிலை) கூட்டத்தொடர் ஜனவரி 31ஆஆம் தேதி தொடங்க உள்ளது, இந்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் பிப்ரவரி 1ஆம் தேதி தமது நான்காவது பட்ஜெட்டை தாக்கல் செய்ய உள்ளார். இந்திய அரசமைப்புச் சட்டத்தின்படி, ஓர் ஆண்டுக்கான மத்திய பட்ஜெட் அரசின் உத்தேசிக்கப்பட்ட வரவு செலவுகளின் பட்டியலாகும். பொருளாதாரத்தின் ஒவ்வொரு பிரிவினருக்கும் இந்த மத்திய பட்ஜெட் அறிவிப்பு மீது சொந்த எதிர்பார்ப்புகள் இருக்கும்.
இந்த பட்ஜெட்டில் விலை ஏற்றம் அல்லது வீழ்ச்சியை காண்பதற்கான வரி, சலுகை, திட்டங்கள் போன்ற அறிவிப்பு இடம்பெறுமோ என்ற ஆர்வமே இந்த எதிர்பார்ப்புக்கான காரணம். இந்திய அரசியலமைப்பின் 112ஆவது பிரிவு, யூனியன் பட்ஜெட் அல்லது வருடாந்திர நிதிநிலை அறிக்கையை இந்திய அரசின் மதிப்பிடப்பட்ட வரவுகள் மற்றும் செலவினங்களின் அறிக்கையாக வரையறுக்கிறது.
ஒவ்வோர் நிதியாண்டும் ஏப்ரல் 1ல் தொடங்கி அடுத்த ஆண்டு மார்ச் 31ல் முடிவடையும். இந்த நிதியாண்டுக்கான பட்ஜெட்டை நாட்டின் நிதி அமைச்சராக இருப்பவர் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்வார். இந்தியா சுதந்திரம் அடைந்தது முதல் இன்றுவரை யார்யார் பட்ஜெட் தாக்கல் செய்தார்கள் என்று பார்க்கலாம்.
- ஆர்.கே.சண்முகம் (1947 - 1949 வரை) இரண்டு முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.
- ஜான் மத்தாய் (1949 - 1950) - இரண்டு முறை பட்ஜெட் தாக்கல் செய்தார்.
- சி.டி. தேஷ்முக் (1950 - 1957) - 7 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்
- டி.டி.கிருஷ்ணமாச்சாரி (1957 - 1958), (1963 - 1965) - 6 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.
- ஜவஹர்லால் நேரு (பிப்ரவரி 13 1958 முதல் மார்ச் 13 1958 வரை) - ஒரு முறை மட்டுமே பட்ஜெட் தாக்கல் செய்தார்.
- மொரார்ஜி தேசாய் (1958 - 1963), (1967 - 1969) - 10 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.
- சச்சிந்தரா சதுர்வேதி (1965 - (1967) - 2 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.
- இந்திரா காந்தி (1970 - 1971) - ஒரு முறை பட்ஜெட் தாக்கல் செய்தார்.
- ஒய்.பி. சவாண் (1971 - 1975) - 7 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.
- சி.சுப்பிரமணியம் - (1975 - 1977) - 2 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.
- எம்.பாட்டீல் (1977 - 1979 - 3 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.
- சரண் சிங் ( ஜன. 24, 1979 - ஜூலை 28, 1979) - ஒரு முறை மட்டுமே பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.
- என்.பகுகுணா ஜூலை 28, 1979 - ஜனவரி 14, 1980) - ஒரு முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்
- ஆர்.வெங்கட்ராமன் (ஜனவரி 14, 1980 - ஜனவரி 15, 1982) - 3 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்
- பிரணாப் (ஜனவரி 15, 1982 - டிசம்பர் 31, 1984), ஜனவரி 24, 2009 - ஜூன் 26, 2012) - 7 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்
- வி.பி.சிங் (டிசம்பர் 31, 1984 - ஜனவரி 24, 1987) - 3 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்
- ராஜீவ் காந்தி (ஜனவரி 24, 1987 - ஜூலை 25, 1987) - ஒரு முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.
- என்.டி. திவாரி (ஜூலை 25, 1987 - ஜூன் 25, 1988) - ஒரு முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.
- எஸ்.பி. சவாண் (ஜூன் 25, 1988 - டிசம்பர் 2, 1989) - ஒரு முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.
- மது தண்டவதே (டிசம்பர் 2, 1989 - நவம்பர் 10, 1990) - ஒரு முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.
- யஷ்வந்த் சின்ஹா (நவம்பர் 10, 1990 - ஜூன் 21, 1991), மே 16, 1996 - ஜூன்1, 1996), மார்ச் 19, 1998 - ஜூலை 1, 2002) ஆண்டுகளில் ஏழுமுறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.
- மன்மோகன் சிங் (ஜூன் 21, 1991 - மே 16, 1996), (நவம்பர் 30, 2008 - ஜனவரி 24, 2009), (ஜூன் 26, 2012- ஜூலை 31, 2012) - 6 முறை.
- ப.சிதம்பரம் (ஜூன் 1, 1996 - ஏப்ரல் 21, 1997), மே 1, 1997 - மார்ச் 19, 1998), (மே 22, 2004-நவம்பர் 30, 2008), ஜூலை 31, 2012 - மே 16, 2-14) - 7 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.
- ஐ.கே. குஜ்ரால் (ஏப்ரல் 21, 1997 - மே 1, 1997) - ஒரு முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.
- ஜஸ்வந்த் சிங் (ஜூலை 1, 2002 - மே 22, 2004) - 2 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.
- அருண் ஜெட்லி (2014 முதல் 2019) - 6 முறை பட்ஜெட் தாக்கல் செய்துள்ளார்.
- நிர்மலா சீதாராமன் 2019 முதல் பட்ஜெட் தாக்கல் செய்து வருகிறார். இவர்தான் பட்ஜெட் தாக்கல் செய்யும் முதல் முழுநேர பெண் நிதியமைச்சர் என்பது கூடுதல் தகவல்.
சுதந்திர இந்தியாவின் முதலாவது பட்ஜெட் 1947ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் தேதி அன்றைய நிதியமைச்சர் ஆர்.கே.சண்முகம் செட்டியாரால் தாக்கல் செய்யப்பட்டது. இந்த சண்முகம் செட்டியார் கோயம்புத்தூரில் பிறந்தவர். ஜவாஹர்லால் நேரு அமைச்சரவையில் ஓராண்டு மட்டுமே நிதியமைச்சராக இருந்தவர். பத்து மத்திய பட்ஜெட்டுகளை நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்த ஒரே நபர் முன்னாள் பிரதமர் மொரார்ஜி தேசாய் மட்டுமே. அடுத்து, ஒன்பது பட்ஜெட்களை தாக்கல் செய்தவர் காங்கிரஸ் கட்சியைச் சேர்ந்த ப. சிதம்பரம். குடியரசு இந்தியாவின் முதல் பட்ஜெட்டை தாக்கல் செய்தவர் ஜான் மத்தாய் . முன்னாள் பிரதமர் ஜவஹர்லால் நேரு தலைமையிலான மத்திய அரசு தாக்கல் செய்த பட்ஜெட் இதுவாகும்.
1991-92 ஆம் ஆண்டு பட்ஜெட் நிதியமைச்சர் மன்மோகன் சிங் தாக்கல் செய்தார். சுதந்திர இந்தியாவில் தாக்கல் செய்யப்பட்ட மிகச்சிறந்த பட்ஜெட்டாக பார்க்கப்படுகிறது. மன்மோகன் சிங் தாக்கல் செய்த பட்ஜெட் இந்திய பொருளாதாரத்தை மாற்றிமைக்கும் வகையில் இருந்தது. தாராளமயமாக்கலின் தொடக்கமாக அமைந்த இந்த பட்ஜெட், ஏற்றுமதி - இறக்குமதி கொள்கையை மாற்றியமைத்தது என்று கூறுவார்கள். அதுபோல யஸ்வந்த் சின்ஹாவின் மில்லினியம் பட்ஜெட், ப.சி.யின் கனவு பட்ஜெட், யஷ்வந்த்ரோ பி.சவானின் கருப்பு பட்ஜெட் என்று பல வரலாற்று சிறப்பு வாய்ந்த பட்ஜெட்டுகள் உள்ளன.