Economic Survey 2023: பொருளாதார ஆய்வறிக்கையில் இடம்பெற்றுள்ள சிறப்பம்சங்கள்..
பொருளாதார ஆய்வறிக்கை மூலம், இந்தியா பொருளாதாரத்தில் எந்த நிலையில் உள்ளது என்பதை தெரிந்து கொள்வோம்.
பொருளாதார ஆய்வறிக்கை என்பது நாட்டின் பொருளாதாரதன்மையை காண்பிக்கும் அறிக்கையாகும். பொருளாதார அடிப்படையில், நாடு எந்த அளவு வளர்ச்சி அடைந்துள்ளது, அடுத்த வருடம் பொருளாதார வளர்ச்சி எவ்வாறு இருக்கும் குறித்த தகவல்களை அளிக்கும் ஆவணமாகும்.
பொருளாதார ஆய்வறிக்கையானது, பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக ஒரு நாள் முன்னதாக தாக்கல் செய்யப்படுவது வழக்கம். இதன் மூலம் நாட்டின் பொருளாதார தன்மையை அறிந்து பட்ஜெட் தயாரிப்பதற்கும் இந்த அறிக்கை உதவும்.
பொருளாதார ஆய்வறிக்கையானது இந்திய தலைமை பொருளாதார ஆலோசகரின் தலைமையின் கீழ் தயாரிக்கப்படும். தயாரிக்கப்பட்ட அறிக்கையை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்தார்.
இந்நிலையில் பொருளாதார ஆய்வறிக்கையின் சிறப்பம்சங்களை தெரிந்து கொள்வோம்.
- அதன்படி, இந்தியாவின் பொருளாதார வளர்ச்சி நடப்பாண்டில் ( 2022-23 ) 7 சதவீதமாக இருக்கும் என கணிப்பு .
- அடுத்த நிதியாண்டில் ( 2022-23 )பொருளாதார வளர்ச்சி 6 முதல் 6.8 சதவீதமாக இருக்கலாம் என கணிப்பு
-
நடப்பு நிதியாண்டில் வேளாண் துறையில் தனியார் துறையின் பங்களிப்பு 9.3 சதவீதமாக அதிகரித்துள்ளது.
-
வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் தாயகத்திற்கு அனுப்பிய தொகை 100 பில்லியன் டாலராக உயர்ந்துள்ளது.
-
சிறு, குறு தொழில்துறையினருக்கான கடன் வழங்கல் 30.6 சதவீதமாக அதிகரித்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவுக்குள் வரும் அந்நிய முதலீடு 4 மடங்கு உயர்ந்துள்ளதாக பொருளாதார ஆய்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது. குறிப்பாக மருந்து உற்பத்தி தொழில் மட்டுமே 2000 கோடி டாலர் ரூ.1,63,440 கோடி அந்நிய முதலீடு குவிந்துள்ளதாக தெரிகிறது.
-
நாட்டின் மொத்த மக்கள் தொகையில் 65 சதவீதம் பேர் கிராமப்புறங்களில் வசிப்பதாகவும், இதில் 47 சதவீத மக்கள் விவசாயத்தை வாழ்வாதாரமாக கொண்டு இருப்பதாகவும் பொருளாதார அறிக்கை 2022-23 தெரிவிக்கிறது.
- 2020-21 ஆம் ஆண்டில் விவசாயத்தில் தனியார் முதலீடு 9.3% ஆக அதிகரிப்பு
-
2022-23 ஆம் ஆண்டு பொருளாதார ஆய்வறிக்கையில், கடந்த ஆறு ஆண்டுகளில் இந்தியாவின் விவசாயத் துறை சராசரி ஆண்டு வளர்ச்சி விகிதமான 4.6 சதவீதத்துடன் உள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
-
2022 ஏப்ரல் முதல் நவம்பர் வரையிலான காலத்திற்கான நேரடி வரி வசூல் தொடர்ந்து அதிகரித்து வருகிறது.
- நேரடி வரி மற்றும் சரக்கு மற்றும் சேவை வரி (ஜிஎஸ்டி) வலுவான வளர்ச்சியால் 2022 ஏப்ரல் முதல் நவம்பர் வரை நேரடி வரி மற்று ஜிஎஸ்டி வரி 15.5 சதவீத வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
-
வாங்கும் திறன் சமநிலை அடிப்படையில் இந்தியா மூன்றாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது, பரிமாற்ற விகிதத்தின் அடிப்படையில் ஐந்தாவது பெரிய பொருளாதாரமாக உள்ளது