Chennai Corporation Budget 2022 LIVE : சென்னை மாநகராட்சி பள்ளி மாணவர்களுக்கு காலை உணவு - பட்ஜெட்டில் அறிவிப்பு
சென்னை மாநகராட்சிக்கு ரூ.2 ஆயிரம் கோடி கடன் உள்ள நிலையில் ரூ.5 ஆயிரம் கோடிக்கு பட்ஜெட் தாக்கலாக வாய்ப்பு இருக்கிறது.
LIVE
Background
சென்னை மாநகராட்சியின் 2022-23ஆம் ஆண்டுக்கான பட்ஜெட் இன்று காலை 10 மணிக்கு தாக்கல் செய்யப்படுகிறது. மாநகராட்சி தலைமை அலுவலகமான ரிப்பன் மாளிகையில் மேயர் பிரியா தலைமையில் பட்ஜெட் கூட்டம் நடைபெறுகிறது. வரி விதிப்பு, நிதிக்குழு தலைவரான 41ஆவது வார்டு கவுன்சிலர் சர்பஜெயதாஸ் பட்ஜெட்டை தாக்கல் செய்கிறார். சொத்து வரி, மக்கள் திட்டங்கள் உள்ளிட்ட முக்கிய அறிவிப்புகளை மேயர் பிரியா வெளியிட இருக்கிறார். சென்னை மாநகராட்சிக்கு ரூ.2 ஆயிரம் கோடி கடன் உள்ள நிலையில் ரூ.5 ஆயிரம் கோடிக்கு பட்ஜெட் தாக்கலாக வாய்ப்பு இருக்கிறது.
தேங்காய் மட்டை கழிவுகள் மறுசுழற்சி செய்யப்படும்
இந்த நிதியாண்டில் ஆயிரம் 54 ஆயிரம் மெட்ரிக் டன் அளவிலான தோட்டம் மற்றும் தேங்காய் மட்டை கழிவுகள் மறுசுழற்சி செய்யப்படும்.
திடக்கழிவு மேலாண்மை தொடர்பான அறிவிப்புகள்
திடக்கழிவு மேலாண்மை தொடர்பான அறிவிப்புகள்
கடந்த நிதி ஆண்டில் 16,500 எண்ணிக்கையிலான நெகிழி குப்பை தொட்டிகள் ரூபாய் 2.90 கோடி மதிப்பீட்டில் கொள்முதல் செய்யப்படும்.
இந்த நிதியாண்டில் ஒவ்வொரு மாதமும் 100 மெட்ரிக் டன் அளவில் மொத்தம் 1200 மெட்ரிக் டன் உரம் தமிழ்நாடு கூட்டுறவு சந்தைப்படுத்துதல் கூட்டமைப்பு லிமிடெட் நிறுவனத்திற்கு விற்பனை செய்யப்படும்.
2.40 கோடி செலவில் 3 வீடற்றவர்களுக்கான காப்பகம் - சென்னை பெருநகர பட்ஜெட்டில் அறிவிப்பு
2.40 கோடி செலவில் 3 வீடற்றவர்களுக்கான காப்பகம் - சென்னை பெருநகர பட்ஜெட்டில் அறிவிப்பு
2022 - 2023 ஆண்டில் 3 டயாலிசிஸ் செயல்பட்டு வருகிறது இது மேலும் அனைத்து மண்டலங்களில் கொண்டு வரப்படும்- மேயர்
2022 - 2023 ஆண்டில் 3 டயாலிசிஸ் செயல்பட்டு வருகிறது இது மேலும் அனைத்து மண்டலங்களில் கொண்டு வரப்படும்- மேயர்
2022-2023 ஆம் கல்வியாண்டில் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளியில் 1.86 கோடியில் internet connection வழங்கப்படும்
2022-2023 ஆம் கல்வியாண்டில் உயர் மற்றும் மேல்நிலைப்பள்ளியில் 1.86 கோடியில் internet connection வழங்கப்படும்