மேலும் அறிய

Budget 2024 LIVE: மாநிலங்களுக்கு ரூ.1.3 லட்சம் கோடி வட்டியில்லா கடன் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரை

Budget 2024 LIVE Updates: 2024-25 நிதியாண்டிற்கான இடைக்கால பட்ஜெட் தொடர்பான தகவல்களுக்கு இணைந்திருங்கள் உடனுக்குடன்.

LIVE

Key Events
Budget 2024 LIVE: மாநிலங்களுக்கு ரூ.1.3 லட்சம் கோடி வட்டியில்லா கடன் - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் உரை

Background

Budget 2024 LIVE Updates:

ஏப்ரல், மே மாதங்களில் மக்களவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில், அடுத்த நிதியாண்டிற்கான வரவு செலவுகளை தீர்மானிக்கும் இடைக்கால பட்ஜெட்(Interim Budget) இன்று நாடாளுமன்றத்தில் தாக்கல் செய்யப்பட உள்ளது. இதையொட்டி, ஆண்டின் முதல் நாடாளுமன்ற கூட்டத்தொடரான பட்ஜெட் கூட்டத்தொடர், குடியரசு தலைவர் திரௌபதி முர்முவின் உரையுடன் நேற்று தொடங்கியது. 

பிப்ரவரி 9ஆம் தேதி வரை, பட்ஜெட் கூட்டத்தொடர் நடைபெற உள்ளது. மக்களவை பொதுத்தேர்தல் நடந்து முடிந்த பிறகு அமையும் புதிய அரசு முழு பட்ஜெட்டை தாக்கல் செய்யும். இந்த கூட்டத்தொடரை சுமூகமாக நடத்துவதற்காக நேற்று முன்தினம் நாடாளுமன்ற அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது.

எதிர்பார்ப்பை கிளப்பிய இடைக்கால பட்ஜெட்:

பொதுவாக பட்ஜெட் என்றால் எந்த திட்டத்திற்கு எவ்வளவு செலவு செய்யப்படும், எந்த துறைக்கு எவ்வளவு நிதி ஒதுக்கப்படும் என்பது குறித்த அனைத்து தகவல்களும் அடங்கியிருக்கும். எவ்வளவு வரி விதிக்கப்படும், அரசின் கொள்கைகள் என்பது குறித்தும் பட்ஜெட்டில் சொல்லப்படும். 

ஆனால், தேர்தல் ஆண்டில் ஆட்சி மாறுவதற்கான வாய்ப்பிருப்பதால், எந்த ஒரு அரசாலும் முழு பட்ஜெட்டை தாக்கல் செய்ய முடியாது. அதற்கு பதில், தேர்தல் நடந்து முடியும் வரை, இடைக்காலத்துக்கு பட்ஜெட் தாக்கல் செய்யப்படும். இதன்மூலம், தினசரி செலவுக்கான நிதியை பயன்படுத்தவே அரசுக்கு அனுமதி வழங்கப்படும். இது, Vote on Account என சொல்லப்படுகிறது.

நிதி பற்றாக்குறையை குறைப்பதிலும் சமூக நல திட்டங்களுக்கு அதிக நிதி ஒதுக்குவதிலும் இன்றைய பட்ஜெட்டில் கவனம் செலுத்தப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஆனால், அதே சமயத்தில் கொள்கை அளவில் பெரிய மாற்றங்களை பட்ஜெட்டில் எதிர்பார்க்க முடியாது என்றும் பொருளாதார நிபுணர்கள் கூறுகின்றனர். 

பட்ஜெட்டின் மீதான எதிர்பார்ப்புகள்:

விவசாயம்: அடுத்த நிதியாண்டில் விவசாயக் கடன் இலக்கு 22-25 லட்சம் கோடி ரூபாயாக உயர்த்தப்படும் என்றும், தகுதியுள்ள ஒவ்வொரு விவசாயிக்கும் அரசின் நிறுவனங்கள் மூலம் கடன் கிடைப்பதை உறுதிசெய்யவும் அரசு திட்டமிட்டுள்ளது. அரசு வழங்கும் மானியங்களில் பெரும்பகுதி உணவு மற்றும் உரத்துக்கும் வழங்கப்படுகிறது. தகுதியான பயனாளிகளை பாதிக்காத வகையில் யாருக்கு சென்றடைய வேண்டுமோ அவர்களை குறிவைத்து மானியம் வழங்க வேண்டும் என நிபுணர்கள் கூறுகின்றனர். 

ரயில்வே: இந்தாண்டு இடைக்கால பட்ஜெட்டில் ரயில்வேஸின் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்த 2.8 முதல் 3 லட்சம் கோடி ரூபாய் வரை ஒதுக்கப்பட வாய்ப்புள்ளதாக நிபுணர்கள் கூறுகின்றனர்.

பாதுகாப்பு: 2 உள்நாட்டு விமானம் தாங்கி போர்க்கப்பல் மற்றும் 97 தேஜாஸ் மார்க்-1A விமானங்களை வாங்கும் முக்கியமான திட்டங்களுக்கு பட்ஜெட்டில் குறிப்பிடத்தக்க முக்கியத்துவம் அளிக்கப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. நாட்டின் பாதுகாப்பை வலுப்படுத்தும் விதமாக ஆயுதங்கள், போர் கப்பல்கள், போர் விமானங்கள் உள்ளிட்டவற்றை வாங்குவதற்கு 5-7 சதவீதம் அதிக நிதி ஒதுக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

ரியல் எஸ்டேட்: இந்திய ரியல் எஸ்டேட் துறை வளர்ச்சி அடைந்து வரும் நிலையில், ​​அதன் முன்னேற்றத்தைத் தடுக்க பல சவால்கள் இருக்கின்றன என்றும் அதை போக்க கவனம் தேவைப்படுகிறது என்றும் நிபுணர்கள் கூறுகின்றனர். கட்டுமான பொருள்களுக்கு விதிக்கப்படும் வரி 28 சதவீதமாக உயர்ந்துள்ளது. கட்டுமான பணிகள் மீதான வரி 18 சதவீதம் உயர்ந்துள்ளது. இதனால், மனையில் விலையில் மாற்றம் ஏற்பட்டுள்ளது. எனவே, இந்த வரிகளை குறைக்க வேண்டும் என நிபுணர்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

16:14 PM (IST)  •  01 Feb 2024

அவர்கள் காத்திருக்கிறார்கள். ஆனால் அடுத்த பட்ஜெட்டை நாங்கள் சிறப்பாக தாக்கல் செய்வோம் - எம்.பி திருச்சி சிவா

13:05 PM (IST)  •  01 Feb 2024

பட்ஜெட்டில் எதுவுமே இல்லை - காங்கிரஸ் எம்.பி கார்த்தி சிதம்பரம்

12:48 PM (IST)  •  01 Feb 2024

இது வரலாற்று சிறப்புமிக்க பட்ஜெட்டாகும் - மத்திய அமைச்சர் ஜோதிராதித்ய சிந்தியா பாராட்டு

11:58 AM (IST)  •  01 Feb 2024

Budget 2024 LIVE : வருமான வரி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவிப்பு

வருமான வரி செலுத்துவதற்கான வரம்பு அதிகரிக்கப்படும் என எதிர்பார்க்கப்பட்ட நிலையில், அதில் எந்த மாற்றமும் இல்லை. வருமான வரி விகிதத்தில் எந்த மாற்றமும் இல்லை - நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன்

11:52 AM (IST)  •  01 Feb 2024

Budget 2024 LIVE: மாநிலங்களுக்கு வட்டியில்லா கடன் ரூ. 1.3 லட்சம் கோடி

மாநிலங்களுக்கு வட்டியில்லா கடனாக ரூ.1.3 லட்சம் கோடி வழங்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். 

Load More
New Update
Advertisement

தலைப்பு செய்திகள்

ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

21 நாட்கள் ராகுலின் சம்பவம்! PARLIAMENT-ஐ அலறவிட்ட I.N.D.I.A! விழிபிதுங்கிய பாஜக”இந்துக்களின் தலைவராகும் ப்ளான்” மோடி மீது RSS தலைவர் அட்டாக்!One Nation One Election  | பாஜக சதித் திட்டம்!அதிபர் ஆட்சியை நோக்கி இந்தியா?போட்டுடைத்த SPL! | SP LakshmananAmbedkar Controversy : பறிபோகும் தலித் வாக்குகள்!கடும் நெருக்கடியில் பாஜக!ஆட்டத்தை தொடங்கிய காங்கிரஸ்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு  சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
ஊருக்குப் போறீங்களா? கிறிஸ்துமஸ், புத்தாண்டுக்கு சிறப்பு ரயில் - எப்போ தெரியுமா?
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
நடுரோட்டிலே தர்ம அடி! பாலியல் தொல்லை தந்த உதவி ஜெயிலர் சஸ்பெண்ட்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன்,  வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Nirmala Sitharaman: வரிபோட்ட நிர்மலா சீதாராமன், வெச்சு செய்யும் நெட்டிசன்கள் - கொட்டும் மீம்ஸ் மழை, கலங்கும் மக்கள்
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Bus Accident: கோர விபத்து - பேருந்து கவிழ்ந்ததில் 38 பயணிகள் உடல்நசுங்கி பலி - பறந்து வந்த கிரானைட் பாறை..!
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
Popcorn GST: ஏற்கனவே அநியாய விலை! பாப் கார்னுக்கு 18 சதவீத ஜி.எஸ்.டி.யா? புலம்பும் ரசிகர்கள்
Breaking News LIVE:பா.ஜ.க.வுக்கும், சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம்? சீமான் கேள்வி
Breaking News LIVE:பா.ஜ.க.வுக்கும், சமூகநீதிக்கும் என்ன சம்பந்தம்? சீமான் கேள்வி
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
DMK Meeting: விஜயை சமாளிப்பது எப்படி? உள்ளாட்சி தேர்தல் - இன்று கூடுகிறது திமுக செயற்குழு கூட்டம், ஸ்டாலின் உத்தரவு என்ன?
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Pushpa 2 Collection: அடங்காத வசூல்! அரண்டு போன பாலிவுட்! கோடிகளை குவிக்கும் புஷ்பா 2!
Embed widget