மேட்டூர் அணை முதல் கடைமடை வரை தூர்வாரும் பணிக்காக நிதி ஒதுக்கீடு; விவசாயிகள் மகிழ்ச்சி.
மேட்டூர் அணையை புனரமைக்க ரூ. 5 கோடி பொது நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டுள்ளது.
தமிழ்நாடு அரசின் இந்த ஆண்டிற்கான முழு பொது நிதிநிலை அறிக்கை இன்று தாக்கல் செய்யப்பட்டது. இதில் டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணை திறக்கப்படுவதற்கு முன்னதாக தூர் வாரும் பணிக்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது. இதற்காக சிறப்பு நிதி ரூ. 80 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. ஆண்டுதோறும் ஜூன் மாதத்தில் திறக்கப்படும் மேட்டூர் அணை தமிழக டெல்டா விவசாயிகளின் குறுவை, சம்பா சாகுபடிக்காக பயன்படுத்தப்படுகிறது. விவசாயத்திற்கு திறக்கப்படும் தண்ணீர் பல ஆண்டுகளாக காவிரி ஆறு தூர்வாரப்படாததால் நேரடியாக கடலில் சென்று அடையும் நிலையில் இருந்தது. இந்த ஆண்டு நிதிநிலை அறிக்கையில் டெல்டா பாசனத்திற்கு மேட்டூர் அணையிலிருந்து தண்ணீர் திறப்பதற்கு முன்னதாக மேட்டூர் அணை முதல் கடைமடை வரை தூர் வருவதற்காக நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.
மேட்டூர் அணையிலிருந்து கடைமடை பகுதிவரை தூர்வாரும் பணிகளுக்கு நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டது வரவேற்கத்தக்கது என்று விவசாயிகள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர். மேலும் இதன்மூலம் நீர் வழித்தட ஆக்கிரமிப்புகள் அகற்றப்படும் என்றும் தெரிவித்தனர். இதனால் நிலத்தடி நீர்மட்டம் உயர்ந்து விவசாயிகள் விவசாயத்தை பெருக்க பெரும் உறுதுணையாக இருக்கும் என்றும் விவசாயிகள் மகிழ்ச்சி. இது மட்டுமில்லாமல் நிதி ஒதுக்கீடு செய்து பணிகளை மற்றவர்களிடம் கொடுக்காமல் அந்தந்த பகுதியில் உள்ள விவசாயிகளுக்கு தூர் வாருவதற்கு அனுமதி கொடுத்தால், தூர்வாரி வண்டல் மண்ணை அள்ளி சென்று விவசாயிகள் பயன்படுத்திக் கொள்வார்கள் என்றும் தெரிவித்துள்ளனர்.
பொது நிதிநிலை அறிக்கையில் அணை புனரமைப்பு மற்றும் மேம்பாட்டு திட்டத்தின் கீழ் மேட்டூர் அணை உட்பட 15 அணைகளை புனரமைக்க விரிவான திட்ட அறிக்கை தயார் செய்யும் பணிகள் தீவிரமாக நடைபெற்று வருகிறது. மேலும், மேட்டூர் அணையை புனரமைக்க ரூ. 5 கோடி பொது நிதிநிலை அறிக்கையில் ஒதுக்கப்பட்டுள்ளது. நிதிநிலை அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ள பணிகள் அனைத்தும் டெல்டா பாசனத்திற்காக மேட்டூர் அணை இறப்பதற்கு முன்பாக அதாவது ஜூன் மாதத்திற்குள் நடத்தி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது. குறுகிய காலமே உள்ளதால் மேட்டூர் அணை முதல் கடைமடை வரை தூர்வாரும் பணிக்காக அந்தந்த பகுதியை சேர்ந்த பணியாளர்களை கொண்டு நடத்தி முடிக்கப்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. காவிரி ஆறு தூர்வாரும் படுவதால் டெல்டா விவசாயிகள் பெரும் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். கர்நாடக மாநிலத்தில் உள்ள மேற்கு தொடர்ச்சி மலை பகுதியான கூர்க் பகுதியில் உருவாகும் காவிரி ஆறு குடகு, ஹாசன் , மைசூர், மாண்டியா, பெங்களூரு, ரூரல், ராம்ராஜ் நகர் ஆகிய மாவட்டங்கள் வழியாக தமிழ்நாட்டில் தருமபுரி, சேலம், ஈரோடு, நாமக்கல், கரூர் , திருச்சி, தஞ்சாவூர், மயிலாடுதுறை மாவட்டங்கள் வழியாக சென்று வங்க கடலில் கலக்கிறது.