மேலும் அறிய

Budget 2024: போட்டுத்தாக்கு... பெண்களுக்கு ஹேப்பி நியூஸ் - குறைந்த தங்கம் விலை!

Budget 2024 Gold Silver Customs Duties: ஆபரணத் தங்கம் விலை சவரனுக்கு ரூ.54,480க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. வெள்ளி விலை ரூ.95.60க்கு விற்பனையாகிறது.

தங்கம் வெள்ளி மீதான சுங்க வரி 6 சதவீதம் குறைக்கப்படும் என மத்திய பட்ஜெட் அறிவிப்பில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார். இந்நிலையில் தங்கம்,வெள்ளி விலை குறைந்துள்ளது.

இதுகுறித்த பட்ஜெட் அறிவிப்பில், “தங்கம், வெள்ளி மீதான சுங்க வரி 6 சதவீதம் குறைக்கப்படும். இதனால் தங்கம், வெள்ளி விலை குறையும். தாமிரம் மற்றும் உருக்கு ஆகியவற்றின் வரிகளும் குறைக்கப்படும். பிளாட்டினம் மீதான சுங்க வரி 6.4% குறைக்கப்படும்”என அறிவித்தார். 

மத்திய பட்ஜெட் 2024-25:

மத்திய பட்ஜெட் பெண்கள், இளைஞர்கள், விவசாயிகள், ஏழைகளுக்கு முக்கியத்துவம் அளிக்கும் 4 இலக்குகளுடன் தயாரிக்கப்பட்டுள்ளது என்று தெரிவித்த நிதியமைச்சர் ஆந்திர மாநில வளர்ச்சிக்காக ரூ.15,000 கோடி சிறப்பு நிதி ஒதுக்கீடு,  4 கோடி இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பு திறன் பயிற்சி, ஆன்லைன் வர்த்தகத்துக்கான டிடிஎஸ் பிடிப்பு,புதிய வரி விதிப்பு முறையில் வரி சதவிகிதம் மாற்றம்,ஏஞ்சல் வரி ரத்து உள்ளிட்ட அறிவிப்புகள் பட்ஜெட் அறிவிப்பில் இடம்பெற்றிருந்தன. 

அதேபோல், தங்கம், வெள்ளி, பிளாட்டினத்துக்கான இறக்குமதி வரி குறைக்கப்பட்டுள்ளது. தங்கம், வெள்ளி ஆகியவற்றின் இறக்குமதி வரி 15 சதவிகிதத்தில் இருந்து 6 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது. பிளாட்டினத்துக்கான இறக்குமதி வரி 12 சதவிகிதத்தில் இருந்து 6.4 சதவிகிதமாக குறைக்கப்பட்டுள்ளது.

தங்கம், வெள்ளி விலை நிலவரம்: (Gold Rate In Tamil Nadu)

சென்னையில் 22 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.2,200 குறைந்து ரூ. 52,400 ஆக விற்பனை செய்யப்படுகிறது. 

22 காரட் ஆபரணத்தங்கத்தின் விலை கிராமுக்கு ரூ.275 குறைந்து ரூ.6,550  ஆகவும் விற்பனை செய்யப்படுகிறது.

24 கேரட் ஆபரணத் தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.56,040 ஆகவும் கிராம் ஒன்று ரூ.7,005 ஆகவும் விற்பனையாகிறது.

வெள்ளி விலை நிலவரம்: (Silver Rate In Chennai)

அதேபோல், சென்னையில் சில்லறை வர்த்தகத்தில் வெள்ளி விலை ரூ.3.50 குறைந்து ரூ.92.50 க்கு விற்பனையாகிறது. அதன்படி, ஒரு கிலோ வெள்ளி விலை ரூ.92,500 ஆக விற்பனையாகிறது. 

மத்திய பட்ஜெட் முக்கிய அம்ப்சங்கள்:

  •  நாடு முழுவதும் உள்ள 10 லட்சம் மாணவர்களுக்கு கல்வி கடன் ரத்து செய்யப்படும் என்றும் அறிவித்துள்ள நிர்மலா சீதாராமன், 
  • மேலும், நாடு முழுவதும் தொழில் பூங்காக்கள் அமைக்கப்படும்
  • 12 தொழில் பூங்காங்களுக்கு விரைவில் ஒப்புதல்
  • டாமிட்ரி பாணியில் வாடகை வீடுகள் - தொழிலாளர்களுக்கு வழங்கப்படும்
  • 5 ஆண்டுகளில் ஒரு கோடி மாணவர்களுக்கு தொழில் பயிற்சி
  • மகளிர் மேம்பாட்டுக்கு 3 ஆயிரம் கோடியில் புதிய திட்டங்கள்
  • 500 பெரிய தொழில் நிறுவனங்களில் பயில இளைஞர்களுக்கு வாய்ப்பு உருவாக்கித் தரப்படும்
  • நிறுவனங்களுக்காக புதிய தீர்ப்பாயம் அமைக்கப்படும் - திவாலான நிறுவனங்களிடமிருந்து மக்களின் பணத்தை பெற புதிய ஆணையம்
  • பிரதமர் வீட்டு வசதி திட்டத்தின்படி, நகர்புறங்களில் ஒரு கோடி வீடுகள் கட்டித் தரப்படும் உள்ளிட்ட பல்வேறு திட்டங்களை மத்திய நிதி அமைச்சர் அறிவித்துள்ளார்.
  • பெண்கள் தொழில் பயிற்சி பழக மத்திய அரசு உதவியுடன் மாநிலங்களுடன் இணைந்து பயிற்சிகள் வழங்கப்படும் என்றும் தெரிவித்துள்ளார்.
மேலும் காண
Advertisement

தலைப்பு செய்திகள்

“என்னுடைய இன்ஸ்ப்ரேஷன் இவர்-தான்” ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்த நபர் யார் தெரியுமா ?
“என்னுடைய இன்ஸ்ப்ரேஷன் இவர்-தான்” ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்த நபர் யார் தெரியுமா ?
முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
Doctors Protest :  ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
Doctors Protest : ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
Advertisement
Advertisement
Advertisement
ABP Premium

வீடியோ

Kasthuri Controversy | கைதாகிறாரா கஸ்தூரி? அதிரடி காட்டிய நீதிபதி Aadhav Arjuna ED Raid |ஆதவ் வீட்டில் ED ரெய்டு! சிக்குகிறாரா லாட்டரி மார்டின்? பரபரப்பில் விசிகPriyanka Gandhi Wayanad|ராகுலை தாண்டுவாரா பிரியங்கா?ட்விஸ்ட் கொடுத்த வயநாடு!கதறும் பாஜக, கம்யூனிஸ்ட்DOGE Elon musk | ‘’வாங்க எலான் மஸ்க்..’’ ட்ரம்ப் கொடுத்த ASSIGNMENT! கலக்கத்தில் அமெரிக்கர்கள்

ஃபோட்டோ கேலரி

பர்சனல் கார்னர்

முக்கிய கட்டுரைகள்
டாப் ரீல்ஸ்
“என்னுடைய இன்ஸ்ப்ரேஷன் இவர்-தான்” ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்த நபர் யார் தெரியுமா ?
“என்னுடைய இன்ஸ்ப்ரேஷன் இவர்-தான்” ஆளுநர் ஆர்.என்.ரவி பகிர்ந்த நபர் யார் தெரியுமா ?
முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
முடிஞ்சா அரெஸ்ட் பண்ணு! முதல்வருக்கு சவால்.. தெலங்கானாவை அதிரவிட்ட KTR!
Doctors Protest :  ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
Doctors Protest : ”தமிழக அரசே கேட்குதா, மருத்துவர் குரல் கேட்குதா?” கொட்டும் மழையில் போராடும் மருத்துவர்கள்.. !
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
உதயநிதி நிகழ்ச்சியை புறக்கணித்தாரா கனிமொழி? துணை முதல்வரே சொன்ன தடாலடி பதில்! 
“திமுக கூட்டணி பற்றி எதுவும் பேசக் கூடாது” ஆதவ் அர்ஜூனாவிற்கு ஆர்டர் போட்ட திருமா..?
“திமுக கூட்டணி பற்றி எதுவும் பேசக் கூடாது” ஆதவ் அர்ஜூனாவிற்கு ஆர்டர் போட்ட திருமா..?
Kanguva Review: களைகட்டியதா ? கண்ணைகட்டியதா ? சூர்யாவின் கங்குவா முழு திரைவிமர்சனம் இதோ
Kanguva Review: களைகட்டியதா ? கண்ணைகட்டியதா ? சூர்யாவின் கங்குவா முழு திரைவிமர்சனம் இதோ
Dr. Ezhilan : ”திமுக எம்.எல்.ஏ, மருத்துவர் எழிலனை மருத்துவத் துறை அமைச்சராக்குங்கள்” எழுந்தது கோரிக்கை..!
Dr. Ezhilan : ”திமுக எம்.எல்.ஏ, மருத்துவர் எழிலனை மருத்துவத் துறை அமைச்சராக்குங்கள்” எழுந்தது கோரிக்கை..!
TNPSC Group 5A: நாளை கடைசி- டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? தகுதி, ஊதியம், பிற விவரங்கள் இதோ..!
TNPSC Group 5A: நாளை கடைசி- டிஎன்பிஎஸ்சி குரூப் 5ஏ தேர்வுக்கு விண்ணப்பித்து விட்டீர்களா? தகுதி, ஊதியம், பிற விவரங்கள் இதோ..!
Embed widget